Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? பூமியின் எல்லைக்கு அப்பால் என்ன உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பன்னீர் பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும் -
Krishna Jayanthi 2026: இன்று உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு இத வாங்கி கொடுங்க.. உங்க கனவுகள் சீக்கிரம் நனவாகும்! -
1/2 கப் கொள்ளு இருந்தா.. இப்படி ஒருவாட்டி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
1 கப் அவலும், 1/4 கப் எள்ளும் இருந்தா.. கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உன்னியப்பம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - நெய் மணக்க சூப்பரா இருக்கும்
குரு-சூரியனால் உருவாகியுள்ள சிவ ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் கஷ்டம் தீர்ந்து செல்வம் பெருகும்!
Jupiter Sun Conjunction Make Shiv Rajyog In Cancer 2026: ஜோதிடத்தின் படி நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவதோடு, மற்ற கிரகங்களுடன் சேர்ந்து சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கும். அவ்வாறு உருவாகும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

அந்த வகையில் கிரகங்களில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் கடக ராசியில் பயணித்து வருகிறார். அதே சமயம் கிரகங்களின் ராஜாவாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் சமீபத்தில் தான் கடக ராசிக்குள் நுழைந்துள்ளார். இதனால் கடக ராசியில் குரு மற்றும் சூரியனின் சேர்க்கையால் சிவ ராஜயோகம் உருவாகியுள்ளது.
இந்த யோகமானது ஜோதிடத்தில் உள்ள யோகங்களில் மங்களகரமான யோகமாகும். இந்த ராஜயோகத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். முக்கியமாக இந்த ராஜயோகத்தால் 4 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வந்து, நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படவுள்ளது. இப்போது குரு சூரியனால் உருவாகியுள்ள சிவ ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
குரு சூரியனால் உருவாகியுள்ள சிவ ராஜயோகத்தால் மேஷ ராசிக்காரர்கள் நல்ல செய்திகளைப் பெறுவார்கள். நீண்ட காலமாக புதிய வீடு, வாகனம் வாங்க நினைத்துக் கொண்டிருந்தால், அதில் நல்ல வெற்றி கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். சிலருக்கு புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். வியாபாரிகளுக்கு சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். வீட்டு சூழல் மகிழ்ச்சியாக இருக்கும்.
கடகம்
குரு சூரியனால் உருவாகியுள்ள சிவ ராஜயோகத்தால் கடக ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கலாம். தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். ஆரோக்கியம் வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்.
விருச்சிகம்
குரு சூரியனால் உருவாகியுள்ள சிவ ராஜயோகத்தால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வெளிநாட்டுடன் தொடர்புடைய வேலை செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு நல்ல முடிவுகள் கிடைக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
மீனம்
குரு சூரியனால் உருவாகியுள்ள சிவ ராஜயோகத்தால் மீன ராசிக்காரர்களுக்கு பண வரவு அதிகரிக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். தொழில் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். பிள்ளைகளால் நல்ல செய்திகளைப் பெறக்கூடும். இக்காலத்தில் தொடங்கும் புதிய வேலைகள் எதிர்காலத்தில் நல்ல பலன்களைத் தரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

