ஆடி மாத ராசி பலன் 2026: 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்? - ஜோதிடர் ஜெயலட்சுமி கணிப்புகள்!

Aadi Month Rasi Palan 2026: கடக ராசியில் சூரியன் பயணிப்பதால் ஆடி மாதம், கடக மாதம் என்று அழைக்கப்படுகிறது. தமிழ் மாதங்களில் 4 ஆவது மாதமான ஆடி மாதம் மிகவும் புனிதமான மாதமாகக் கருதப்படுகிறது. இம்மாதத்தில் தான் சூரியனின் பயணம் தென்திசை நோக்கி தொடங்கும் தட்சிணாயன புண்ணிய காலம் ஆரம்பமாகிறது.

Aadi Month Rasipalan 2026 Predictions For 12 Zodiac Signs By Astrologer Jeyalakshmi

இந்த மாதம் முழுவதும் அம்மன் வழிபாடு, குலதெய்வ வழிபாடு மற்றும் இயற்கை வழிபாடுகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கடக ராசியில் உச்சம் பெற்று பயணிக்கும் குரு உடன் சூரியன், புதன் இணைந்து பயணிக்கப் போவதால், ஆடி மாதத்தில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குகும் என்ன பலன் கிடைக்கப் போகிறது என்பது குறித்து ஜோதிடர் ஜெயலட்சுமி அவர்கள் தமிழ் போல்ட் ஸ்கையுடன் பகிர்ந்து கொண்டார்.

மேஷம்

நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் சூரியனும், குருவும் பயணம் செய்வதால் உங்களுடைய வேலையில் புரமோசனும் சம்பள உயர்வும் கிடைக்கும். எல்லா செயல்களிலும் வெற்றி கிடைக்கும். வீடு கட்டும் எண்ணம் நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வாழ்க்கையில் புதிய மாற்றங்கள் ஏற்படும். பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் உண்டாகும். சொத்து வாங்கும் யோகம் உருவாகும். மறைமுக எதிரிகளிடம் கவனம் தேவை. எதிலும் பொறுமையும் நிதானமும் தேவைப்படும்.

பரிகாரம்: புற்றுள்ள அம்மன் கோவிலுக்கு சென்று பால் ஊற்றி வழிபடுங்கள்.

ரிஷபம்

உங்கள் ராசிக்கு 3 ஆம் வீடான முயற்சி ஸ்தானதில் சூரியன் குரு கூட்டணி சேர்ந்துள்ளதால் வேலையில் இடம் மாற்றம் உண்டாகும், பயணங்களால் நன்மை ஏற்படும். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் நான்காமிடத்தில் இருக்கிறார். இதனால் வீட்டை அழகுபடுத்துவீர்கள், தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். 2 ஆம் வீட்டிற்கு போகும் செவ்வாய் பகவானாலும், 5 ஆம் வீட்டிற்கு போகும் சுக்கிரனாலும் சுப விரைய செலவுகள் வரும். பணத்தை பத்திரப்படுத்துவது அவசியம். உங்களின் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது.

பரிகாரம்: வெள்ளிக்கிழமையன்று பெருமாள் கோவிலுக்கு சென்று தாயாரை வழிபடுங்கள்.

மிதுனம்

இரண்டாம் வீட்டில் பயணம் செய்யும் சூரியன், குருவினால் பேச்சில் அதிகாரம் தூள் பறக்கும். தேவையற்ற வீண் பேச்சுகளை தவிர்க்கவும், வேலை விசயமாக பிரயாணம் செய்யும் நிலை உண்டாகும். திடீர் பண வரவு வந்து திக்குமுக்காட வைக்கும். பெண்களால் நன்மை உண்டாகும் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.பொருளாதார நிலை உயரும். பேச்சில் இனிமை அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும்.

பரிகாரம்: புதன்கிழமை பெருமாள் கோவிலுக்கு சென்று துளசி மாலை சாற்றி வழிபடுவது நன்மையை தரும்.

கடகம்

ராசியில் சூரியன் குரு பயணம் செய்வதால், வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும், உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. கோபத்தை கட்டுப்படுத்தவும். உறவினர்களினால் நன்மை உண்டாகும். புதன் உங்கள் ஜென்ம ராசியில் பயணம் செய்வதால் தாய் மாமனால் நன்மை உண்டாகும், புத்திக் கூர்மை அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். கடன் பிரச்சினை தீரும். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்புகள் ஏற்படும். எதிர்பாராத தனலாபம் கிடைக்கும்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமையன்று துர்க்கை அம்மனுக்கு ராகு காலத்தில் வழிபடுவது நல்லது.

சிம்மம்

சூரியன் உங்கள் ஜென்ம ராசிக்கு பன்னிரெண்டாம் இடமான விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கும். சகோதரர்களுடன் சண்டை சச்சரவைத் தவிர்க்கவும். சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் பயணம் செய்வதால் மனதில் சந்தோஷம் அதிகரிக்கும். பொழுது போக்கு விஷயங்களில் கவனம் தேவை. எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். பணவரவு சிறப்பாக இருக்கும். வெளிநாடு செல்ல திட்டமிட்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும்.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் நரசிம்மரை வழிபட நன்மைகள் நடைபெறும்.

கன்னி

சூரியன் உங்களுடைய லாப ஸ்தானத்தில் குரு பகவானுடன் பயணம் செய்வதால் அரசு அதிகாரிகளுக்கு சம்பளம் அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் புதன் ஆட்சி பெற்று பத்தாம் வீட்டிலும் பின்னர் லாப ஸ்தானத்திலும் பயணம் செய்வதால் நினைத்த காரியம் நிறைவேறும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும், வங்கி சேமிப்பு உயரும். திருமணம் ஆகாதவர்களுக்கு வரன் நிச்சயமாகும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். குடும்பத்தினரின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். புதியதாக வீடு நிலம் வாங்குவீர்கள், உறவினர் வீட்டு விஷேசங்களில் பங்கேற்பீர்கள். இந்த மாதத்தில் உங்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகிறது அனுபவிக்கத் தயாராகுங்கள்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமை அம்மன் கோவிலுக்கு சென்று அபிஷேகத்திற்கு பால் வாங்கி கொடுங்கள்.

துலாம்

சூரியன் பத்தாம் இடத்தில் உச்சம் பெற்ற குரு பகவானுடன் இணைந்து பயணம் செய்வதால் அரசாங்க வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு வேலை கிடைக்கும், தொழில் நிலை சிறப்படையும். புதிதாக வீடு,நிலம் வாங்குவீர்கள், படிப்பில் கவனம் அதிகரிக்கும், ஷேர் மார்க்கெட் தொழில் சிறப்படையும், தொழில் சம்பந்தமான படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். பெண்கள் தங்க நகைகள் வாங்குவீர்கள் 16ம் தேதிக்குப் பின்னர் மனைவிக்காக செலவுகள் அதிகரிக்கும். புதிதாக வீடு கட்டும் யோகம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். அரசாங்க உதவிகள் கிடைக்கும்.

பரிகாரம்: காளி கோவிலுக்கு செவ்வாய்கிழமைகளில் எலுமிச்சை வாங்கி கொடுங்கள்.

விருச்சிகம்

சூரியன் ஒன்பதாம் இடத்தில் குரு பகவானுடன் பயணம் செய்வதால் அப்பாவின் சொத்து கிடைக்கும், பரம்பரையாக செய்துவந்த தொழில் சிறப்படையும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால், உயர் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும், வியாபாரம் விருத்தியடையும். குடும்பத்திலோ, அலுவலகத்திலோ தேவையற்ற வீண் பேச்சுகளை தவிர்க்கவும், பண வருமானத்தில் தாமதம் உண்டாகும். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமை அம்மன் கோவிலுக்கு அபிஷேகத்திற்கு மஞ்சள் குங்குமம் வாங்கி கொடுங்கள்.

தனுசு

சூரியன் எட்டாம் இடத்தில் பயணம் செய்வதால் அப்பாவுடன் சச்சரவு செய்ய வேண்டாம், செயல்களில் கவனம் தேவை. கோபமான பேச்சுகளை தவிர்க்கவும், வீட்டு வாடகை மூலம் வருமானம் உண்டாகும். ஷேர் மார்க்கெட் முதலீடுகளில் கவனம் தேவை, யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். குரு பகவான் பயணத்தால் விபரீத ராஜயோகம் உண்டாகும். பண வரவும் சரளமாக இருக்கும். குடும்பத்தின் மொத்த வருமானம் அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடிகள் குறையும். ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் விலகும். சுறுசுறுப்பும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

பரிகாரம்: வியாழக்கிழமை சித்தர் கோவிலுக்கு சென்று வழிபடுவது நன்மையை தரும்.

மகரம்

சூரியன் உங்கள் ராசிக்கு நேர் எதிரே ஏழாம் இடத்தில் குரு உடன் பயணம் செய்வதால் கூட்டுத் தொழில் சிறப்படையும், அடிக்கடி நீண்ட தூரம் பிரயாணம் செல்லும் நிலை உண்டாகும். சில்லறை வியாபாரம் சிறப்படையும், தாய் மாமனால் நன்மை உண்டாகும். எல்லா செயல்களும் வெற்றியடையும், வெளிநாட்டு தொழில் தொடர்புகள் சிறப்படையும். திடீர் சுப செலவுகள் அதிகரிக்கும். நண்பர்களால் நன்மை உண்டாகும் மாதமாக அமைந்துள்ளது. கணவன்-மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும்.

பரிகாரம்: சனிக்கிழமை அனுமனை நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் தடைபட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும்.

கும்பம்

சூரியன் ஆறாம் இடத்தில் குரு உடன் பயணம் செய்வதால் வேலையில் இடமாற்றமும் புதிய வேலையும் கிடைக்கும், உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டாகும். வெளியூர் பயணம் நன்மையைத் தரும். ஷேர் மார்க்கெட் முதலீடுகளை தவிர்க்கவும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். வங்கி சேமிப்பு அதிகரிக்கும், மனதின் எண்ணங்கள் நிறைவேறும். தொழில்,வியாபாரத்தில் எதிரிகளின் தொல்லை நீங்கும். குல தெய்வக் கோயிலுக்கு சென்று வேண்டுதலை நிறைவேற்றுவீர்கள். எதிரிகள் தொந்தரவு நீங்கும். கடன்கள் அடைபடும். தடைபட்ட வேலைகள் சுமுகமாக முடியும்.

பரிகாரம்: திங்கட்கிழமை சிவன் கோவிலுக்கு சென்று வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

மீனம்

சூரியன் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் குரு பகவானுடன் பயணம் செய்வதால் பிள்ளைகளால் நன்மை உண்டாகும். அரசு வேலைக்காக எழுதிய போட்டி தேர்வுகளில் வெற்றி கிடைக்கும், அப்பாவினால் ஆதாயம் உண்டாகும். தரகு கமிஷன் வியாபாரம் சிறப்படையும், ஷேர் மார்க்கெட் முதலீடுகள் லாபத்தைக் கொடுக்கும். எதிர் பாராத இடத்திலிருந்து பணம் கிடைக்கும், பேச்சில் இனிமை அதிகரிக்கும். சொந்தத் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். ஆன்மீகப் பயணம் செல்வதால் மன அமைதி அதிகரிக்கும். இந்த மாதத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கும்போது கவனமாக இருக்க வேண்டும். புதிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்: வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Thursday, July 16, 2026, 13:58 [IST]
Desktop Bottom Promotion