Latest Updates
-
75 ஆண்டுகளாக பயணிகளிடம் டிக்கெட்டே வாங்காமல் இயங்கும் இந்தியாவின் ஒரே ரயில் எது தெரியுமா? -
அக்டோபர் இறுதியில் நிகழும் குரு-கேது சேர்க்கை: இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறைவதை பாப்பீங்க.. -
அக்டோபர் 09 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
அக்டோபர் 16-ல் நவபஞ்சம ராஜயோகத்தால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுது! -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் கஷ்டங்களையும், நஷ்டத்தையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கேரட் சாதமும், கோவக்காய் வறுவலும் - மதியம் ஸ்கூலுக்கு இந்த காம்போ செய்யுங்க.. பாக்ஸ் காலியா தான் வரும்.. -
1/4 கிலோ வெண்டைக்காய் இருந்தா இந்த மாதிரி மசாலா செஞ்சு பாருங்க - இதுவரை நீங்க சாப்பிடாத சுவையில் இருக்கும் -
வாஸ்துப்படி துளசி செடிகிட்ட இந்த செடிகளை வளர்க்காதீங்க.. இல்ல பண இழப்பு தான் அதிகரிக்கும்.. -
இறந்தவர்களின் மூக்கு மற்றும் காதில் ஏன் பஞ்சு வைக்கப்படுகிறது? கருட புராணம் சொல்லும் ரகசியம் என்ன தெரியுமா?
Aadi 2026: ஆடி மாதத்தில் கோடீஸ்வர யோகத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
Aadi Matha Rasi Palan 2026: தமிழ் மாதங்களில் ஆடி மாதம் ஆன்மீக ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த புனிதமான மாதமாகும். அதுவும் இம்மாதத்தில் நவகிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் மிதுன ராசியில் இருந்து வெளியேறி கடக ராசிக்குள் நுழைந்து பயணிக்கவுள்ளார். பொதுவாக சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார்.

இப்படி சூரியன் ராசியை மாற்றும் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. அந்த வகையில் ஜூலை 16 ஆம் தேதி சூரியன் கடக ராசிக்கு செல்லும் போது தான் ஆடி மாதம் பிறக்கிறது. இந்த ஆண்டின் ஆடி மாதம் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இந்த கடக ராசியில் தான் குரு பகவானும் உள்ளார். இதனால் இந்த மாதத்தில் சூரியனும், குரு பகவானும் ஒன்றாக பயணிக்கவுள்ளனர்.
இதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர். இதன் விளைவாக நிதி நிலையில் எதிர்பாராத முன்னேற்றம் ஏற்படவுள்ளது. இப்போது ஆடி மாதத்தில் கோடீஸ்வர யோகத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ஆடி மாதமானது மிதுன ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். வருமானத்தில் பெரிய அளவில் உயர்வு ஏற்படும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. நிதி நிலைமை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
மகரம்
மகர ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் ஆடி மாதமானது மகர ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களரமானதாக இருக்கும். வேலை மற்றும் வணிகத்தில் பெரிய அளவில் வெற்றியைப் பெறக்கூடும். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. தந்தையுடனான உறவு சிறப்பாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் ஆடி மாதமானது கன்னி ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கும். திடீரென்று நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். வாழ்க்கை செழிப்பாக இருக்கும். குடும்பத்தினருடன் பயணங்களை மேற்கொள்வீர்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வலுவான வாய்ப்புள்ளது.
ரிஷபம்
ரிஷப ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் ஆடி மாதத்தில் ரிஷப ராசிக்காரர்களின் பண வரவு அதிகரித்து, அதன் மூலம் நிதி நிலை சிறப்பாக இருக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புக்கள் கிடைக்கும். புதிய முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications


