Latest Updates
-
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் குருபகவான்: அக்டோபர் முதல் இந்த 3 ராசிகளின் கஷ்டங்கள் தீர போகுது! -
இன்றைய ராசிபலன் 29 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம் -
பூரிக்கு ஒருவாட்டி இந்த பக்குவத்துல உருளைக்கிழங்கு மசாலா செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
செப்டம்பர் 01-ல் சனி-குருவால் உருவாகும் நவபஞ்ச ராஜயோகம்: தொழிலில் அபார வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிகள்! -
சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் அக்டோபர் வரை ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
சுரைக்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
கர்நாடகா சுரைக்காய் சட்னி ரெசிபி - இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
செப்டம்பரில் நிகழும் குரு-செவ்வாய் சேர்க்கை: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
Krishna Janmashtami 2026: கிருஷ்ண ஜெயந்தி எப்போது வருகிறது? வீட்டில் எப்படி பூஜை செய்யணும் தெரியுமா? -
ராகி மாவும், பச்சை பயறும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி கொழுக்கட்டை செஞ்சு குடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க
ஜூலை இறுதியில் அடுத்தடுத்து நடக்கும் சனி, புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது!
Saturn Retrograde And Mercury Direct On July 2026: ஜோதிடத்தின் படி, ஜூலை மாதத்தின் கடைசி வாரம் மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. ஏனெனில் இக்காலத்தில் நீதிமான் சனி பகவான் மற்றும் கிரகங்களின் இளவரசனான புதன் ஆகிய இரண்டு கிரகங்களின் நிலைகளிலும் மாற்றங்கள் ஏற்படவுள்ளன. இதன் விளைவாக சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்படவுள்ளன.

அதில் முதலாவதாக கிரகங்களின் இளவரசனும், புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியுமான புதன் ஜூலை 24 ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதியில் பயணிக்கவுள்ளார். அதன் பின் ஜூலை 27 ஆம் தேதி நீதிமான் சனி பகவான் மீன ராசியில் வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார்.
இப்படி அடுத்தடுத்து கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களின் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த கிரக மாற்றங்களால் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர். இப்போது ஜூலை இறுதியில் நடக்கும் சனி, புதன் நிலை மாற்றங்களால் அதிர்ஷ்ட மழையில் நனையப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
ஜூலை இறுதியில் நடக்கும் சனி, புதன் நிலை மாற்றங்களால் மிதுன ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இதனால் ஒவ்வொரு வேலையையும் உற்சாகத்துடன் செய்வீர்கள். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேருதும். பரம்பரை சொத்துக்களால் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. இதன் மூலம் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. சிலருக்கு புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது.
சிம்மம்
ஜூலை இறுதியில் நடக்கும் சனி, புதன் நிலை மாற்றங்களால் சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களைக் காண்பார்கள். குறிப்பாக வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வியாபாரிகள் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். இதனால் மூலம் பெரிய அளவில் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் தீர்ந்து, வீட்டில் அமைதி அதிகரிக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். இதனால் பணப் பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
விருச்சிகம்
ஜூலை இறுதியில் நடக்கும் சனி, புதன் நிலை மாற்றங்களால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கும். ஜூலை இறுதி முதல் இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத இடத்தில் இருந்து நிதி ஆதாயங்கள் கிடைக்கும். இதன் மூலம் பணப் பிரச்சனைகள் நீங்கும். வணிகத்தை விரிவாக்கம் செய்யும் எண்ணம் இருந்தால், இக்காலத்தில் அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். பணியிடத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். வேலைப்பளு அதிகமாக இருந்தாலும், முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களும் கிடைக்கும். சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்கும் கனவு இருந்தால், இக்காலத்தில் அதற்கான வாய்ப்புக்கள் தேடி வரும். தொழிலில் இதுவரை சந்தித்து வந்த தடைகளும் விலகும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications


