Latest Updates
-
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா? -
மகாளய அமாவாசைக்கு வாழைத்தண்டை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்..
ஜூலை 27-ல் சனி பகவான் வக்ரமடைவதால் டிசம்பர் வரை இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா?
Shani Vakri 2026: ஜோதிடத்தின் படி, நவகிரகங்களில் நீதிமான் என்று அழைக்கப்படுபவர் சனி பகவான். ஏனெனில் இவர் பாரபட்சம் பராமல் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தரக்கூடியவர். மேலும் சனி பகவான் நேர்மை, ஒழுக்கம், கடின உழைப்பு ஆகியவற்றின் காரணியாவார். இப்படிப்பட்ட சனி பகவான் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் வரை இருப்பார்.

தற்போது சனி பகவான் மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஜூலை 27 ஆம் தேதி மீன ராசியில் வக்ரமடையவுள்ளார். இந்த வக்ர நிலையில் சுமார் 138 நாட்கள் வரை இருப்பார். அதாவது டிசம்பர் மாதம் வரை இனி சனி பகவான் வக்ர நிலையில் இருப்பார்.
சனி பகவான் வக்ரமடைவதால் அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அதில் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருந்தாலும், 4 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக ஆரோக்கியம், பணம் போன்ற விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இப்போது சனி பகவான் வக்ரமடைவதால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 12 ஆவது வீட்டில் சனி பகவான் வக்ரமடைகிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நிதி மற்றும் தொழில் ரீதியாக பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் திடீரென்று வேலைப்பளு அதிகரிப்பதைக் காணக்கூடும். மேலும் உயர் அதிகாரிகளுக்கு கருத்து வேறுபாடுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இது வேலையில் பாதிப்பை ஏற்படுத்தும். முக்கியமாக இக்காலத்தில் எந்த ஒரு புதிய தொழிலிலும் முதலீடுகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பணம் சிக்கிக் கொள்ளக்கூடும். நிதி இழப்பை சந்திக்க நேரிடும். யாருடனும் வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.
கடகம்
கடக ராசியின் 9 ஆவது வீட்டில் சனி பகவான் வக்ரமடைகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் கஷ்டங்கள் அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகளை சந்திக்க நேரிடும். இது உங்கள் பட்ஜெட்டை முற்றிலும் பாழாக்கும். குடும்பத்தில் உள்ளோருடன் தகராறு ஏற்படும் வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும்.
மகரம்
மகர ராசியின் 3 ஆவது வீட்டில் சனி பகவான் வக்ரமடைகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களை சனி பகவான் கடுமையாக சோதிக்கக்கூடும். வணிகர்களுக்கு இதுவரை நல்ல லாபம் கிடைத்து வந்ததில் திடீரென்று தடை ஏற்படலாம். கூட்டு தொழில் செய்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் ஏமாற்றம் தான் கிடைக்கும். சேமித்து வைத்த பணம் செலவாகும். யாருக்கும் கடன் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அந்த பணத்தை திரும்ப பெறுவதை கடினமாக இருக்கும். முக்கியமாக இக்காலத்தில் பேச்சை கட்டுப்படுத்த வேண்டும்.
மீனம்
மீன ராசியின் முதல் வீட்டில் சனி பகவான் வக்ரமடைகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு சனி பகவான் மிகுந்த மன உளைச்சலைத் தருவார். ஒவ்வொரு முயற்சியிலும் தோல்விகளையும், எதிர்பாராத தடைகளையும், தாமதங்களையும் சந்திக்க நேரிடும். இதுவரை நன்கு நடந்து வந்த வேலைகள் தடைபடலாம். மன அழுத்தத்தால் தூக்கமின்மை பிரச்சனையால் சிரமப்படக்கூடும். நீதிமன்ற வழக்குகளைத் தவிர்க்க வேண்டும். முதலீடுகளை செய்யும் எண்ணம் இருந்தால், அதை தள்ளிப் போடுவது நல்லது. இல்லாவிட்டால் லாபத்திற்கு பதிலாக நஷ்டத்தையே பெறக்கூடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications


