ஜூலை 27-ல் நடக்கும் சனி வக்ர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு கடன் தீரும் காசு சேரும்.. உங்க ராசியும் இதுல இருக்கா?

Saturn Retrograde In Pisces On 27 July 2026: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்களில் நீதிமான் என்று அழைக்கப்படுபவர் சனி பகவான். இந்த சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தரக்கூடியவர். மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியான சனி பகவான் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் வரை இருப்பார். தற்போது இவர் குரு பகவானின் மீன ராசியில் பயணித்து வருகிறார்.

Saturn Retrograde In Pisces On 27 July 2026 These Zodiac Signs Will See Financial Growth

இந்நிலையில் இந்த சனி பகவான் ஜூலை 27 ஆம் தேதி பின்னோக்கி வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார். பொதுவாக கிரகங்கள் வக்ர நிலையில் பலவீனமாக இருக்கும். ஜூலையில் வக்ரமாகும் சனி பகவான் சுமார் 138 நாட்கள் வக்ர நிலையில் இருப்பார். சனி வக்ரமாவதால் அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

அதில் சிலருக்கு மோசமாக இருந்தாலும், சில ராசிக்காரர்கள் நல்ல பலன்களைப் பெறவுள்ளனர். குறிப்பாக 4 ராசிக்காரர்கள் சனி வக்ர காலத்தில் நிதி நிலையில் நல்ல வளர்ச்சியைக் காணவுள்ளனர். இதனால் இந்த ராசிக்காரர்களின் கடன் பிரச்சனை முடிவுக்கு வரப்போகிறது. இப்போது சனி வக்ரமாவதால் நிதி ரீதியாக நல்ல முன்னேற்றத்தைக் காணப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

ரிஷபம்

ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் சனி பகவான் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு இக்காலம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். வருமானத்தில் எதிர்பாராத அளவில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கலாம். இன்னும் சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

மிதுனம்

மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் சனி பகவான் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். புதிய தொழிலை தொடங்கும் எண்ணம் இருந்தால், இக்காலம் அதற்கு சாதகமாக இருக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பரம்பரை சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும். சொத்துக்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். நீண்ட கால குடும்ப பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வருமானம் அதிகரிக்கும். இதன் மூலம் கடன் தொல்லைகள் முடிவுக்கு வரும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 5 ஆவது வீட்டில் சனி பகவான் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் மன அழுத்தம் குறையும். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் தேடி வரும். வெளிநாட்டுடன் தொடர்புடைய நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் இக்காலத்தில் சில நல்ல செய்திகளைப் பெறக்கூடும். வருமானத்தில் உயர்வு ஏற்படும்.

கும்பம்

கும்ப ராசியின் 2 ஆவது வீட்டில் சனி பகவான் வக்ரமாகவுள்ளார். சொந்த ராசியில் சனி பகவான் வக்ரமாவதால் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். வசதிகள் அதிகரிக்கும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். கடன் தீரும். வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சிறப்பான செயல்திறனால் உயர் அதிகாரிகளிடம் நல்ல பாராட்டைப் பெறக்கூடும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Desktop Bottom Promotion