Latest Updates
-
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இளம் வயதிலேயே சொந்த வீடு வாங்கும் யோகம் இருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
சவூதி அரேபியாவில் இந்திய ஓட்டுநர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
ஐயங்கார் ஸ்டைல் அஞ்சறைப் பெட்டி குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஆகஸ்ட் 28-ல் நடக்கும் சந்திர கிரகணத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துன்பங்கள் துரத்தப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
முட்டைக்கோஸும், உருளைக்கிழங்கும் வெச்சு இப்படி கிரேவி செய்யுங்க.. பூரி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கஷ்டங்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
அஸ்தமன நிலையில் புதன்! அடுத்த 3 வாரங்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
ராகு-கேது பெயர்ச்சியால் டிசம்பர் மாதம் வரை நரகத்தை அனுபவிக்கப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வரகரிசியும், வாழைப்பழமும் இருந்தா இந்த ஆரோக்கியமான பணியாரத்தை செய்யுங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும் -
பார்லர் போகாமலேயே முகத்தில் வளரும் முடியை நீக்கணுமா? இந்த 5 ஃபேஸ் பேக்கை போடுங்க போதும்..
மிதுன ராசிக்கு வக்ர நிலையில் சென்ற புதன்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்..
Retrograde Mercury In Gemini 2026: வேத ஜோதிடத்தில் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியும், கிரகங்களின் இளவசரனுமாக கருதப்படுபவர் புதன். இப்படியான புதன் ஒரு நடுநிலை கிரகமாகவும் கருதப்படுகிறார். ஏனெனில் புதன் ஒரு சுப கிரகங்களுடன் இணைந்தால் சுப பலன்களையும், அசுப கிரகங்களுடன் இணைந்தால் அசுப பலன்களையும் தருவார்.

இந்த புதன் சந்திரனுக்கு அடுத்தப்படியாக குறுகிய நாட்களில் தனது நிலையை மாற்றக்கூடியவர். இப்படிப்பட்ட புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். இந்த புதன் இதுவரை கடக ராசியில் வக்ர நிலையில் பயணித்து வந்தார். இந்நிலையில் ஜூலை 07 ஆம் தேதி புதன் வக்ர நிலையில் தனது சொந்த ராசியான மிதுன ராசிக்குள் நுழைந்தார்.
மிதுன ராசிக்குள் வக்ர நிலையில் சென்றுள்ள புதனின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். குறிப்பாக சில ராசிக்காரர்கள் நல்ல பலன்களைப் பெற்றாலும், சில ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். இப்போது புதன் வக்ர நிலையில் மிதுன ராசிக்கு சென்றுள்ளதால் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசியின் 12 ஆவது வீட்டிற்கு புதன் வக்ர நிலையில் சென்றுள்ளதால், இந்த ராசிக்காரர்கள் பணப் பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும். பணியிடத்தில் வேலைகளில் பல தடைகளை சந்திக்க நேரிடும். பண பரிவர்த்தனைகளை செய்யும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பண இழப்பை சந்திக்கும் வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, வழக்கத்தை விட மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
மேஷம்
மேஷ ராசியின் 3 ஆவது வீட்டிற்கு புதன் வக்ர நிலையில் சென்றுள்ளதால், இந்த ராசிக்காரர்களுக்கு அவ்வளவு சிறப்பாக இருக்காது. பண விஷங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். யாருடனும் வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். புதிய தொழிலை தொடங்கும் திட்டம் இருந்தால், இக்காலத்தில் அதை தொடங்குவதைத் தவிர்க்க வேண்டும். சட்டரீதியான பிரச்சனைகளை கையாளும் போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 8 ஆவது வீட்டிற்கு புதன் வக்ர நிலையில் சென்றுள்ளதால், இந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்காது. பணிபுரிபவர்கள் தொழில் வாழ்க்கையில் சவால்களை சந்திக்க நேரிடும். பணியிடத்தில் எதிரிகள் ஆதிக்கம் செலுத்த முயற்சிப்பார்கள். பண பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். முக்கியமாக புதன் வக்ரமாக இருக்கும் காலத்தில் எந்த ஒரு பணம் தொடர்பான முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
வக்ர புதனால் சந்திக்கும் பிரச்சனைகளை தவிர்க்க செய்ய வேண்டியவைகள்
* புதனின் மோசமான விளைவுகளைத் தவிர்க்க, புதன்கிழமைகளில் பச்சை நிற ஆடைகளை அணிய வேண்டும் மற்றும் "ஓம் பும் புதாய நமஹ" என்னும் மந்திரத்தை 21 முறை சொல்ல வேண்டும்.
* புதனின் நிலையை வலுப்படுத்த புதன்கிழமைகளில் ஒரு பசுவிற்கு பசுந்தீவனம் கொடுக்க வேண்டும்.
* அதோடு வீட்டில் துளசி செடி இல்லாவிட்டால், புதன்கிழமைகளில் அதை வாங்கி வைத்து வழிபாடு செய்யுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

