Latest Updates
-
குரு-செவ்வாய் கூட்டணி.. அக்டோபர் 31 வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
Personality Test: அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் நல்ல மற்றும் தீய குணங்கள் என்னென்ன தெரியுமா? -
நீரிழிவு நரம்பியல் பாதிப்பு என்றால் என்ன? அதன் ஆரம்ப கால அறிகுறிகள் என்ன? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், வேர்க்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
அக்டோபர் 01 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களின் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்காம் -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
Mahalaya Paksha 2026: மகாளய பட்ச காலத்துல வீட்டுக்கு இந்த 5 உயிரினங்கள் வந்தா அதிர்ஷ்டமாம்.. விரட்டாதீங்க.. -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் மேஷம் முதல் கன்னி வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
டீக்கடை ஸ்டைல் கடலை மாவு போண்டா - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடற்பயிற்சியின் போது மயக்கம் ஏன் வருகிறது? அலட்சியம் செய்யக்கூடாத அறிகுறிகளை கூறும் இதய மருத்துவர்!
அதிக செலவழிக்காமல் எடையை குறைக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 'டயட்' ஃபாலோ பண்ணுங்க..
Weight Loss Diet Tips In Tamil: உலகம் முழுவதும் மக்கள் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனை தான் உடல் பருமன். இந்த உடல் பருமனைக் குறைக்க ஒவ்வொருவரும் போராடிக் கொண்டிருக்கின்றனர். அதிகரித்த உடல் எடையைக் குறைப்பது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. இருப்பினும் முயற்சித்தால் முடியாதது எதுவும் இல்லை. முக்கியமாக அதிகரித்த உடல் எடையைக் குறைக்க உதவும் ஏராளமான டயட்டுகள் உள்ளன.

ஆனால் அனைத்துமே அனைவருக்கும் நல்ல பலனைத் தந்துவிடாது. இருப்பினும் சில வகையான டயட் சார்ட்டுகளை ஒருவர் பின்பற்றும் போது உடல் எடையில் ஓரளவு மாற்றத்தைக் காணலாம். அதுவும் தினமும் தவறாமல் உடற்பயிற்சியில் ஈடுபட்டு, ஜங்க் உணவுகளுக்கு குட்-பை சொல்லி, ஆரோக்கியமான உணவுகளுடன் வாழ்க்கை முறையையும் மேற்கொண்டு வந்தால், எடையில் மாற்றத்தை காணலாம்.
சில வகையான டயட்டுகள் அதிக செலவுகளை செய்து சாப்பிடுமாறான உணவுகளைக் கொண்டிருக்கும். இப்படிப்பட்ட டயட்டுகளை நடுத்தர மக்களால் பின்பற்றுவது என்பது இயலாது. ஆனால் டாக்டர் பிள்ளை அவர்கள் தனது யூடியூப் பக்கத்தில் அதிக செலவில்லாமல் உடல் எடையைக் குறைக்க உதவும் டயட் சார்ட்டை பகிர்ந்துள்ளார். இதில் காலை முதல் இரவு வரை என்ன சாப்பிட வேண்டும், எந்த அளவு சாப்பிட வேண்டும் என்பது குறித்தும் பகிர்ந்துள்ளார். அதை அறிய தொடர்ந்து படித்து பாருங்கள்.
காலை
"காலையில் எழுந்ததும் காபி, டீ குடிப்பதற்கு பதிலாக, க்ரீன் டீ அல்லது ப்ளாக் டீ-யை சர்க்கரை சேர்க்காமல் குடிக்க வேண்டும். ஆரம்பத்தில் இது கஷ்டமாக இருக்கும், போக போக பழகிவிடும். ஒருவேளை இது பிடிக்காவிட்டால், ஒரு கப் நீரில் கொத்தமல்லி, கருஞ்சீரகம், புதினாவை சேர்த்து அடுப்பில் வைத்து, நன்கு கொதிக்க வைத்து, நீர் பாதியாக வந்ததும், அதை இறக்கி வடிகட்டி குடியுங்கள்" என்று டாக்டர் கூறினார்.
காலை உணவு
"அடுத்து காலை உணவின் போது இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, பொங்கல், கிச்சடி, உப்புமா என்று சாப்பிடுவோம். பலரும் உடல் எடையைக் குறைக்க இவற்றை சாப்பிடக்கூடாது என்று நினைப்பர். உண்மையில் இவற்றை சாப்பிடலாம். அதுவும் காலையில் தோசை சாப்பிடுவதாக இருந்தால், 2 தோசைக்கு மேல் சாப்பிட வேண்டாம்.
முக்கியமாக எண்ணெய் அதிகமாக ஊற்றியோ, நன்கு தடிமனாக தோசையை ஊற்றியோ சாப்பிடக்கூடாது. இட்லி சாப்பிடுவதாக இருந்தால், 3 இட்லி சாப்பிடலாம். சப்பாத்தி என்றால், 2 சப்பாத்தி சாப்பிடலாம். பூரியை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இது எண்ணெயில் பொரிக்கப்பட்டது.
உப்புமாவும் சாப்பிடலாம், ஆனால் அளவு அதிகமாக சாப்பிடாமல், ஒரு சிறிய கப் அளவில் சாப்பிடலாம். அதுவும் சர்க்கரை சேர்த்து சாப்பிடக்கூடாது. முக்கியமாக இந்த காலை உணவுகளில் ஏதாவது ஒன்றை தான் சாப்பிட வேண்டுமே தவிர, 2 தோசை, 3 இட்லி என அனைத்தையும் ஒன்றாக சாப்பிடக்கூடாது. அதுவும் காலை உணவை காலை 8-9 மணிக்குள் சாப்பிட வேண்டும் " என்று டாக்டர் கூறினார்.
காலை 11-12 மணியளவில்
"காலை உணவுக்கு பின் 11-12 மணியளவில் பசித்தால், பழங்களைத் தான் சாப்பிட வேண்டும். அதுவும் பிடித்த எந்த பழங்களை வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆனால் அளவாக சாப்பிட வேண்டும். பழங்கள் பிடிக்காவிட்டால், வெஜிடேபிள் சாலட்டை சாப்பிடலாம்" என்று டாக்டர் கூறினார்.
மதிய உணவு
"மதிய உணவை 1-2 மணிக்குள் முடித்துவிட வேண்டும். அதுவும் மதிய உணவின் போது வெள்ளை சாதத்தை தவிர்த்து, கருப்பு கவுனி அரிசி சாதம், சீரக சம்பா அரிசி சாதம், ப்ரௌன் ரைஸ் சாப்பிடலாம். ஒருவேளை இந்த சாதம் பிடிக்காவிட்டால், வெள்ளை சாதத்தை சிறிய பௌலில் சாப்பிடலாம். அதற்கு இணையாக சைடு டிஷ்யை உட்கொள்ள வேண்டும். அதுவும் எண்ணெய் அதிகம் சேர்க்காமல் சாப்பிட வேண்டும். ஒருவேளை நீங்கள் நான்வெஜ் பிரியர் என்றால் க்ரில் ஃபிஸ், கிரில் மீன் போன்றவற்றை செய்து சாப்பிடலாம்" என்று டாக்டர் கூறினார்.
மாலை நேர ஸ்நாக்ஸ்
"மாலை வேளையில் பஜ்ஜி, போண்டா, சமோசா, காரா சேவு போன்றவற்றை சாப்பிடுவதற்கு பதிலாக பாதாம், முந்திரி, பிஸ்தா, வால்நட்ஸ், நிலக்கடலை, பூசணி விதை போன்றவற்றை சாப்பிடலாம். இதன் மூலம், அதில் உள்ள புரோட்டீன், நார்ச்சத்து போன்றவை கிடைக்கும். கூடுதலாக உடலில் உள்ள கெட்ட கொழுப்பையும் கரைக்கும். இதோடு வேண்டுமானால் க்ரீன் டீ அல்லது பளாக் டீயை குடிக்கலாம்" என்று டாக்டர் கூறினார்.
இரவு உணவு
"உடல் எடையைக் குறைக்க இரவு உணவில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இரவு உணவைப் பொறுத்து தான் உடல் எடை அதிகரிக்குமா, குறையுமா என்பதை கூற முடியும். எப்போதும் இரவு உணவை 8 மணிக்குள் முடித்துவிட வேண்டும். வேலைக்கு செல்பவராக இருந்தால், 9 மணிக்குள் முடிக்க வேண்டும். மேலும் சாப்பிட்ட பின் 2 மணிநேரம் கழித்து தான் தூங்க செல்ல வேண்டும்.
அதுவும் இரவு உணவின் போது இட்லி, தோசைக்கு பதிலாக கோதுமை ரவை உப்புமா, 2 சப்பாத்தி, அசைவ உணவு என்றால் க்ரில் செய்யப்பட்ட சிக்கன், மீனை சாப்பிடலாம். ஒரு வேளை இன்னும் பசித்தால், காய்கறிகள் அல்லது பழ சாலட்டை சாப்பிடலாம். இத்துடன் டின்னரை முடித்துவிட வேண்டும். முக்கியமாக இந்த டயட்டினால் அல்சர் பிரச்சனையை சந்தித்தால், தயிரை அடிக்கடி சாப்பிட்டால் போதும்" என்று டாக்டர் கூறினார்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
