Latest Updates
-
கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும், ஏசி தேவையில்லை! -
லட்சுமி நாராயண ராஜயோகம்: மே மாதத்தில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
தக்காளியும், கொத்தமல்லியும் இருந்தா.. ஒருடைம் இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம்
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க..
Cholesterol Diet Chart In Tamil: தற்போதைய உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறையின் காரணமாக உண்ணும் உணவுகளில் இருந்து பெறப்படும் கொலஸ்ட்ரால் உடலில் அப்படியே தேங்கிவிடுகிறது. அதுமட்டுமின்றி, தற்போது ஜங்க் உணவுகளின் புழக்கம் அதிகரித்து வருகின்றன. இந்த ஜங்க் உணவுகள் முற்றிலும் உடலுக்கு தீங்கை விளைவிக்கும் கொலஸ்ட்ரால்கள் நிறைந்தவை.

இந்த ஜங்க் உணவுகளை உட்கொண்டு, தினமும் எவ்வித உடற்பயிற்சியிலும் ஈடுபடாமல் இருந்தால், பின் உடலில் கொலஸ்ட்ரால் அதிகரித்து, அதன் விளைவாக இதய நோய் போன்ற உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் நோய்களின் அபாயம் அதிகரித்துவிடும். இதைத் தவிர்க்க வேண்டுமானால், உடலில் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க வேண்டும்.
என்ன தான் அதிகரித்த கொலஸ்ட்ராலைக் குறைக்க மருந்து மாத்திரைகள் இருந்தாலும், உணவுகளின் மூலமும் கொலஸ்ட்ராலைக் குறைக்கலாம். உங்களுக்கும் கொலஸ்ட்ரால் பிரச்சனை இருந்து, அதை இயற்கை வழியில் குறைக்க நினைக்கிறீர்களா?
டாக்டர் பிள்ளை அவர்கள் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் "மருந்து மாத்திரை இல்லாமல் கெட்ட கொலஸ்ட்ரால் குறைக்க உதவும் டயட் சார்ட்" குறித்து பகிர்ந்துள்ளார். அதில் காலை முதல் இரவு வரை என்ன சாப்பிட்டு கொலஸ்ட்ராலைக் குறைப்பது என்பதை விரிவாக பகிர்ந்துள்ளார். இந்த டயட் சார்ட்டை தொடர்ச்சியாக பின்பற்றி வந்தால் மருந்தே இல்லாமல் கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் என்று கூறியுள்ளார். அது என்னவென்பதைக் காண்போம்.
காலை உணவு
காலையில் 6-7 மணிக்குள் சீரகத் தண்ணீரைக் குடிக்க வேண்டும். அதுவும் சீரகத்தை நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க வேண்டும். இது உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது.
8-9 மணிக்குள் காலை டிபனை உட்கொள்ள வேண்டும். டிபனுக்கு கொலஸ்ட்ராலைக் குறைக்க ஓட்ஸ் வித் பழங்களை சாப்பிடலாம். ஓட்ஸ் என்றால் மெல்லிய சிறிய ஓட்ஸை எடுக்காமல், தடிமனான ஓட்ஸைக் கொண்டு கஞ்சி தயாரிக்க வேண்டும். இந்த வகை ஓட்ஸில் தான் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இந்த ஓட்ஸை கஞ்சியாக வைத்து, அத்துடன் ஸ்ட்ராபெர்ரி, ஆரஞ்சு, ஆப்பிள் போன்ற பழங்களை நறுக்கி சேர்த்து சாப்பிடலாம். இப்படி ஒருநாள் ஆப்பிள், பேரிக்காய், கொய்யாப்பழம் என்று சேர்த்து சாப்பிடலாம்.
காலை நேர ஸ்நாக்ஸ்
காலை 11-11.30 மணியளவில் ப்ளாக் டீ, ப்ளாக் காபி, க்ரீன் டீ குடிக்கலாம். அதுவும் சர்க்கரை சேர்க்காமல் குடிக்க வேண்டும். மேலும் பாதாம், வால்நட்ஸ் போன்றவற்றுடன் விதைகளையும் சேர்த்து சாப்பிடும் போது, பசியும் அடங்கும், உடல் எடையும் அதிகரிக்காது. மேலும் இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் கொலஸ்ட்ராலையும் குறைக்கும்.
மதிய உணவு
மதிய உணவை 1-2 மணிக்குள் சாப்பிடுவது நல்லது. ஏனெனில் கொஸ்ட்ராலை குறைக்க சாப்பாடு மட்டுமின்றி, சரியான நேரத்தில் சாப்பிடுவதும் முக்கியம். அதுவும் வெள்ளை அரிசி சாதத்துக்கு பதிலாக, 1 கப் கைக்குத்தல் அரிசி அல்லது கருப்பு கவுனியை உட்கொள்ளலாம். அத்துடன் 1 கப் சாலட்டையும் சாப்பிட வேண்டும். ஒருவேளை சாதம் வேண்டாம் என்றால், அதற்கு பதிலாக 2 சப்பாத்தியுடன் நிறைய வெஜிடேபிள் சேர்த்த குருமாவை சாப்பிடலாம். அதுவும் ப்ராக்கோலி, கேரட், பீன்ஸ் போன்றவற்றை கொண்டு குருமா செய்யும் போது, அதில் உள்ள புரோட்டீன், நார்ச்சத்து கொலஸ்ட்ராலைக் குறைக்கும். அதோடு 1 கப் தயிரையும் எடுக்கலாம்.
மாலை நேர ஸ்நாக்ஸ்
4-4.30 மணியளவில் 1 கப் க்ரீன் டீ, மூலிகை டீ, ப்ளாக் காபி, ப்ளாக் டீ போன்றவற்றை சர்க்கரை சேர்க்காமல் எடுக்கலாம். அத்துடன் சுண்டல், பச்சை பயறு போன்றவற்றையும் வேக வைத்து சாப்பிடலாம். நார்ச்சத்து அதிகம் உள்ள பழங்களையும் சாப்பிடலாம்.
இரவு உணவு
இரவு உணவு மிகவும் முக்கியம். இந்த இரவு உணவை 7.30-9 மணிக்குள் முடித்துவிடுவது நல்லது. எப்போதும் இரவு உணவை லைட்டாக எடுத்துக் கொள்ளுங்கள். காய்கறிகள் அல்லது பழ சாலட் மற்றும் ஒரு கப் சிக்கன் சூப்/வெஜ் சூப்/ஆட்டுக்கால் சூப் என உட்கொள்ளலாம். மேலும் இரவு உணவு உட்கொண்ட பின் உடனே தூங்க செல்லக்கூடாது. 10-20 நிமிடம் சிறு நடைப்பயிற்சியை மேற்கொண்ட பின் தூங்கினால், உடல் எடையும் அதிகரிக்காது, கொலஸ்ட்ராலும் குறையும். அதுமட்டுமின்றி தூங்கும் முன் ஒரு டம்ளர் நன்கு சுண்ட காய்ச்சிய பாலில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, மஞ்சள் பாலாக குடித்து வந்தால், உடலினுள் உள்ள வீக்கம் குறையும் மற்றும் கொலஸ்ட்ரால் சூப்பராக கட்டுப்பாட்டில் இருக்கும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள டயட்டை தொடர்ந்து தவறாமல் மேற்கொண்டு வந்தால், கொலஸ்ட்ரால் நன்கு குறையும். இந்த டயட்டை ஓரிரு நாட்கள் பின்பற்றினால் மாற்றம் தெரியாது, தொடர்ந்து பின்பற்றி வரும் போது கொலஸ்ட்ரால் அளவில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications