Latest Updates
-
இந்தியா-பாகிஸ்தான் எல்லையை வெறும் 5 வாரத்தில் உருவாக்கியவர் யார் தெரியுமா? நம்ப முடியாத இந்திய வரலாறு -
கடகத்தில் உச்சமடையும் குரு பகவான்: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது! -
சூரியன் சொந்த நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - இப்படி செய்யுங்க.. தட்டு சோறு நொடியில் காலியாகும்.. -
சர்க்கரை நோயாளிகளுக்கான டாப் 5 காய்கறிகளை பட்டியலிட்ட டாக்டர்! என்னன்னு தெரிஞ்சுக்கோங்க.. -
நெல்லை ஸ்டைல் தலக சாம்பார் ரெசிபி - ஒரு தடவை செஞ்சு பாருங்க - ஒரு வாரம் வைச்சு சூப்பரா சாப்பிடலாம் -
தலைசுற்ற வைக்கும் இந்தியாவிலுள்ள வினோதமான திருமண சடங்குகள் - இப்படிலாம் கல்யாணம் பண்ணுனா அவ்வளவுதான் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பணத்தையும், புகழையும் கொண்டு வரப்போகுது! -
சத்தான ரவா கீரை அடை - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 13 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கவலைகள் துரத்தும் நாளாக இருக்குமாம்
ஜூலை 07-ல் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் 'துவித்வாதச யோகம்': அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்!
Jupiter-Mercury Conjunction Make Dwidwadash Yog On 07 July 2026: ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம், தொழில் ஆகியவற்றின் காரணியாவார் மற்றும் இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியும் கூட. இப்படிப்பட்ட புதன் தற்போது கடக ராசியில் வக்ர நிலையில் பயணித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த புதன் ஜூலை 07 ஆம் தேதி வக்ர கதியில் மிதுன ராசியில் பயணத்தை தொடங்கவுள்ளார். இப்படி சொந்த ராசியில் புதன் வக்ர நிலையில் பயணிக்கும் போது, கடக ராசியில் உள்ள குரு பகவானுடன் சேர்ந்து துவித்வாதச யோகத்தை உருவாக்கவுள்ளார்.
இந்த யோகத்தின் போது குரு புதனுக்கு 12 ஆவது வீட்டிலும், புதன் குருவிற்கு 2 ஆவது வீட்டிலும் இருப்பர். இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அதில் சிலருக்கு மோசமாகவும், இன்னும் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தலாம்.
குறிப்பாக அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் தங்களின் தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தையும் காணலாம். இப்போது குரு புதனால் உருவாகும் துவித்வாதச யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
துவித்வாதச யோகத்தால் மிதுன ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். தொழில் வாழ்க்கையில் நல்ல வெற்றியைப் பெறக்கூடும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. திருமணமானவர்களின் வாழ்க்கையில் சந்தோஷம் பெருகும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவடையும். செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். இதனால் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
கன்னி
துவித்வாதச யோகத்தால் கன்னி ராசிக்காரர்களின் வாழ்க்கையில் முக்கியமான சில மாற்றங்கள் ஏற்படும். முக்கியமாக நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் இக்காலத்தில் கிடைக்கும். நீண்ட காலமாக வேலை கிடைக்காமல் அலைந்து கொண்டிருந்தால், புதன் மற்றும் குருவின் அருளால் நல்ல சம்பளத்துடன் புதிய வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. அதோடு பரம்பரை சொத்து தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வந்து, அதன் மூலம் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.
துலாம்
துவித்வாதச யோகத்தால் துலாம் ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும். வெளிநாட்டில் பணிபுரியும் ஆசை இருந்தால், அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். சொந்தமாக தொழிலை தொடங்க நினைத்து முயற்சித்தால், நல்ல வெற்றியைப் பெறக்கூடும். குடும்ப வாழ்க்கையில் சந்தோஷமும், அமைதியும் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். இருப்பினும் ஆரோக்கிய விஷயத்தில் மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications


