Latest Updates
-
கறிவேப்பிலை சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தமான நாளாக இருக்குமாம் -
செப்டம்பரில் மிதுன ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் புதிய உச்சத்தை தொடுவாங்க.. -
சனி-சூரியன் உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் துரதிர்ஷ்டத்தையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 2 ராசிகள் -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஆலூ சன்னா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செய்யுங்க - மட்டன் குருமா மாதிரி இருக்கும் -
சப்பாத்திக்கு இந்த ப்ளைன் குருமா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் கணக்கில்லாம சாப்பிடுவாங்க.. -
விபூதியை நெற்றியில் எப்படி வைக்க வேண்டும்? நெற்றியில் விபூதி வைப்பதன் அர்த்தம் என்ன தெரியுமா? -
Vastu Tips: வீட்டில் பணம் அதிகமா சேரணுமா? அப்ப வீட்டுல இந்த செடியை வாங்கி வையுங்க.. -
குப்பையை பணம் கொடுத்து இறக்குமதி செய்யும் வினோத நாடு - எந்த நாடு? ஏன் இப்படி செய்கிறது தெரியுமா? -
ஆகஸ்ட் இறுதியில் நடக்கும் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்!
ஜூலை 07-ல் வக்ர புதனால் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண கஷ்டம் குறைந்து செல்வம் பெருகும்..
Budhaditya Rajyog In Gemini On 07 July 2026: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் அவ்வப்போது ராசியை மாற்றுவதோடு, வக்ர நிலையிலும் பயணித்து, அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் மிதுன ராசியில் பயணித்து வருகிறார்.

இந்நிலையில் ஜூலை 07 ஆம் தேதி கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் வக்ர நிலையில் மிதுன ராசியில் நுழைந்து பயணிக்கவுள்ளார். இதனால் மிதுன ராசியில் சூரியன் மற்றும் புதனின் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த ராஜயோகமானது மிகவும் மங்களகரமான யோகமாகும்.
இந்த யோகத்தின் விளைவு மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு வகையில் தெரியும். அதில் சில ராசிக்காரர்கள் தங்கள் தொழில் மற்றும் நிதி விஷயங்களில் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர். இப்போது ஜூலை 07-ல் உருவாகும் புதாதித்ய ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 2 ஆவது வீட்டில் சூரியன் மற்றும் புதன் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் நிதி ரீதியாக நல்ல பலன்களைப் பெறுவார்கள். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும் வலுவான வாய்ப்புள்ளது. பரம்பரை தொழிலை செய்து வருபவர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். உங்களின் ஆளுமை மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு பொற்காலமாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 11 ஆவது வீட்டில் சூரியன் மற்றும் புதன் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. தொழில் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். சிலருக்கு வெளிநாட்டில் வேலை செய்வதற்கான வாய்ப்புக்கள் தேடி வரும். முதலீடுகளில் இருந்து நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. கடன் தொல்லை குறையும். இக்காலத்தில் உங்களின் பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் இருக்கும்.
கன்னி
கன்னி ராசியின் 10 ஆவது வீட்டில் சூரியன் மற்றும் புதன் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் செயல்திறன் மேம்படும். பணியிடத்தில் சிறப்பான நடத்தை மற்றும் வேலையினால் உயர் அதிகாரிகளை ஈர்ப்பீர்கள். சிலருக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக அரசு வேலைக்காக போட்டி தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நீண்ட காலமாக சந்தித்து வந்த ஆரோக்கிய பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications


