Latest Updates
-
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
செவ்வாய் துலாம் ராசிக்குள் செல்வதால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வெள்ளை பட்டாணி இருந்தா இந்த பஞ்சாபி வடானா மசாலாவை செஞ்சு பாருங்க - சப்பாத்தி. பூரிக்கு செமையா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரங்க உலகை சுற்றும் சுதந்திரப் பறவைகளாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்க தலைமுடி எலிவால் மாதிரி மாறுதா? அப்ப அடிக்கடி இந்த கற்றாழை ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
Gandhi Jayanti 2026: மகாத்மா காந்தியை பற்றி நமக்கு தெரியுமா? ஆனால் அவர் படிப்பில் எப்படிப்பட்டவர் தெரியுமா? -
மீல் மேக்கர் பிரியாணியை இப்படி செய்யுங்க.. மட்டன் பிரியாணியே தோத்துடும்.. -
4 கத்திரிக்காய் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி மிளகு குழம்பு செய்யுங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
International Day of Older Persons: பெற்றோர், முதியோருக்கான சுகாதார பராமரிப்பில் புதிய அணுகுமுறை - ஏன் அவசியம் -
குரு-செவ்வாய் கூட்டணி.. அக்டோபர் 31 வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்!
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 24 முதல் இந்த 4 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது!
Mars Transit In Mrigashira Nakshatra On 24 July 2026: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் அவ்வப்போது ராசியை மாற்றுவது மட்டுமின்றி, நட்சத்திரத்தையும் மாற்றி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாவார் மற்றும் இவர் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியும் கூட.

இப்படிப்பட்ட செவ்வாய் ஒரு ராசியில் 45 நாட்கள் வரை இருப்பதோடு, அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார். அந்த வகையில் தற்போது செவ்வாய் ரிஷப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஜூலை 24 ஆம் தேதி செவ்வாய் மிருகசீரிடம் நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிபதி செவ்வாய்.
சொந்த நட்சத்திரத்திற்குள் செவ்வாய் நுழைவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். குறிப்பாக 4 ராசிக்காரர்கள் இந்த செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களின் ஆற்றலும், தைரியமும் அதிகரிக்கும். வேலை மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். பணியிடத்தில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பெற்றோரின் முழு ஆதரவு கிடைக்கும். புதிய வருமான வழிகள் உருவாகும். இதன் மூலம் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
கடகம்
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. நீண்ட கால ஆசைகள் இந்த பெயர்ச்சியால் நிறைவேறும் வாய்ப்புள்ளது. நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
சிம்மம்
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களின் வாழ்வில் பெரிய மாற்றங்கள் ஏற்படும். தொழில் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். முக்கியமாக செவ்வாயின் அருளால் தலைமைத்துவ திறன்கள் மேம்படும்.
விருச்சிகம்
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களின் செயல்திறன் மேம்படும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அமைதியும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். வியாபாரிகளுக்கு வழக்கத்தை விட மிகவும் சிறப்பாக இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழில் ரீதியாக நல்ல வெற்றி கிடைப்பதோடு, முன்னேற்றத்திற்கான பாதைகளும் திறக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications


