Latest Updates
-
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க.. -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுது! -
கொங்குநாட்டு ஸ்டைல் பச்சைப்பயறு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
நட்ஸ்கள் குறித்து பலரது மனதில் உள்ள டாப் 5 சந்தேகங்களுக்கு பதிலளித்த டாக்டர்.அருண்குமார்! மிஸ் பண்ணாம படிங்க.. -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்! -
ரவா பன் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 04 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
சனி-சந்திரனால் உருவாகியுள்ள விஷ யோகம்: இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்!
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்..
Mars Transit In Taurus 2026: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்களில் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாவார். மேலும் இவர் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியும் கூட. இந்த செவ்வாய் 45 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார்.

அப்படி செவ்வாயின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். இதுவரை செவ்வாய் மேஷ ராசியில் பயணித்து வந்தார். இந்நிலையில் ஜூன் 21 ஆம் தேதி செவ்வாய் ரிஷப ராசிக்குள் நுழைந்தார். இந்த ராசியில் செவ்வாய் 45 நாட்கள் வரை இருப்பார். செவ்வாயின் இந்த ராசி மாற்றத்தின் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்விலும் காணப்படும்.
அதில் சிலருக்கு அதிர்ஷ்டமாக இருந்தாலும், 3 ராசிக்காரர்கள் இந்த செவ்வாய் பெயர்ச்சியால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக வேலையில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இப்போது செவ்வாய் பெயர்ச்சியால் ஆகஸ்ட் 02 வரை கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 12 ஆவது வீட்டிற்கு செவ்வாய் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலையில் திடீர் மாற்றங்களைக் காணக்கூடும். முக்கியமாக செலவுகள் எதிர்பாராத அளவில் அதிகரிக்கும். இதன் காரணமாக பண பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அலுவலகத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். ஓய்வெடுக்க நேரமில்லாத அளவில் பரபரப்பாக இருப்பீர்கள். ஆரோக்கிய பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும் என்பதால், உடல்நல பிரச்சனைகளை புறக்கணிக்காதீர்கள். குறிப்பாக இக்காலத்தில் எந்த ஒரு முதலீகளை செய்வதையும், கடன் வாங்குவதையும், பணம் தொடர்பான முடிவுகளை எடுப்பதையும் தவிர்ப்பது நல்லது.
தனுசு
தனுசு ராசியின் 6 ஆவது வீட்டிற்கு செவ்வாய் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சிறு வேலைக்கும் வழக்கத்தை விட கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். ஆனால் ஒரு நற்செய்தி என்னவென்றால், கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். செவ்வாயின் நிலையால் அன்புக்குரியவருடன் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தைப் புறக்கணிப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய அளவில் மருத்துவ செலவை சந்திக்க நேரிடும். இக்காலத்தில் ஆரோக்கியம் மற்றும் கடன் குறித்த கவலைகள் சற்று அதிகமாக இருக்கும். எனவே கடன் வாங்குவதையும், உடல்நலத்தைப் புறக்கணிப்பதையும் தவிர்த்திடுங்கள்.
துலாம்
துலாம் ராசியின் 8 ஆவது வீட்டிற்கு செவ்வாய் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலையில் அதிக அழுத்தத்தை சந்திக்க நேரிடும். சிறு அலட்சியமும் இழப்புக்களை ஏற்படுத்தலாம். இக்காலத்தில் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். ஏனெனில் அவசரம் பெரிய இழப்பை உண்டாக்கும். பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். உறவுகளைப் பொறுத்தவரை, தேவையற்ற சண்டைகள் மற்றும் வாக்குவாதங்கள் ஏற்படும். வாழ்க்கைத் துணை அல்லது அன்புக்குரியவரின் ஆதரவு கிடைக்காமல் சிரமப்பட வேண்டியிருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications


