Latest Updates
-
அக்டோபரில் நிகழும் சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கொங்கு ஸ்பெஷல் பீர்க்கங்காய் கடலை சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இட்லி, தோசைக்கு அருமையா இருக்கும் -
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்..
சனி நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்..
Saturn Nakshatra Transit On 02 July 2026: ஜோதிட ரீதியாக ஜூலை மாதம் சற்று சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இந்த மாதத்தில் பல கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. அதுவும் இம்மாதத்தின் தொடக்கத்திலேயே சனி பகவான் தனது நட்சத்திரத்தை மாற்றவுள்ளார். அதுவும் ஜூலை 02 ஆம் தேதியான இன்று சனி பகவான் ரேவதி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திற்குள் நுழைவுள்ளார்.

இந்த சனி நட்சத்திர பெயர்ச்சியானது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் சனி பகவான் ஒருவரது வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துபவர். இந்நிலையில் சனியின் இந்த நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு வகையில் காணப்படும்.
குறிப்பாக 4 ராசிக்காரர்கள் இந்த சனி நட்சத்திர பெயர்ச்சியால் பல சவால்களை சந்திக்கவுள்ளனர். மேலும் பண இழப்புக்கள் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது மற்றும் சற்று கவனமாக இருக்க வேண்டும். இப்போது சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு சற்று கடினமான காலமாக இருக்கும். நிதி ரீதியாக சற்று மோசமாக இருக்கும். சிலருக்கு நிதி இழப்புக்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இக்காலத்தில் எந்த ஒரு புதிய முதலீடுகளை செய்வதையும் தவிர்க்க வேண்டும். செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் இந்த தேவையில்லாத செலவுகள் பண பிரச்சனையை இன்னும் அதிகரித்துவிடும். அதோடு மன அழுத்தமும் அதிகரித்து, உடல் ஆரோக்கியமும் மோசமாக பாதிக்கப்படும்.
சிம்மம்
சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களுக்கு அவ்வளவு சிறப்பாக இருக்காது. பணியிடத்தில் உடன் வேலை செய்வோருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். வேலைப்பளு அதிகரிக்கும். தொழில் ரீதியாக ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். உங்களின் நடத்தைகளையும், பேச்சையும் கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் அதுவே பெரிய பிரச்சனையை ஏற்படுத்தும். தொழிலதிபர்களுக்கு நஷ்டங்கள் ஏற்பட வாய்ப்புஒஒது. இதன் மூலம் நிதி நிலைமை மோசமாக பாதிக்கப்படும்.
விருச்சிகம்
சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களின் மனக் கவலையும், மன அழுத்தமும் அதிகரிக்கும். பண விஷயங்களில் எந்த ஒரு முடிவையும் எடுக்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இக்காலத்தில் யாரையும் நம்பாதீர்கள். ஏனெனில் ஒருவரை நம்புவது இழப்புகளுக்கு வழிவகுக்கக்கூடும். யாருக்கும் கடன் கொடுப்பதையோ அல்லது புதிய முதலீடுகளை செய்வதையோ தவிர்ப்பது நல்லது. பண இழப்பு ஏற்படுவற்கான வாய்ப்புள்ளதால், பண விஷயத்தில் அவசரப்பட்டு எந்த ஒரு முடிவையும் எடுக்காதீர்கள்.
கும்பம்
சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்களும் மோசமாக பாதிக்கப்படுவார்கள். அதுவும் செலவுகள் திடீரென்று அதிகரித்து, பட்ஜெட்டை பாழாக்கும். வணிகர்கள் எந்த ஒரு ஒப்பந்தங்களை முடிவு செய்யும் முன்பும் நன்கு யோசித்து பின்னர் முடிவெடுக்க அறிவுறுத்தப்படுகிறது. முக்கியமாக யாருடனும் வாக்குவாதத்திலோ, தகராறிலோ ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications




