Latest Updates
-
அக்டோபரில் நிகழும் சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கொங்கு ஸ்பெஷல் பீர்க்கங்காய் கடலை சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இட்லி, தோசைக்கு அருமையா இருக்கும் -
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்..
ஜூலையில் அஸ்தமனமாகும் குரு பகவான்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது..
Jupiter Asta On 14 July 2026: ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் அவ்வப்போது ராசியை மற்றும் நட்சத்திரத்தை மாற்றுவது மட்டுமின்றி, சில கிரகங்கள் அடிக்கடி அஸ்தமனமாகி, உதயமாகவும் செய்யும். இப்படி கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

அதுவும் நவகிரகங்களில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாவார். தற்போது குரு பகவான் கடக ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஜூலை 14 ஆம் தேதி குரு பகவான் அஸ்தமனமாகவுள்ளார். இந்த நிலையில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை இருந்து, பின் உதயமாவார்.
அதாவது இக்காலகட்டத்தில் குரு சூரியனுக்கு மிக அருகில் வருவதால், மிகவும் பலவீனமாக இருப்பார். அதில் சில ராசிக்காரர்களுக்கு மோசமாக இருந்தாலும் சில ராசிக்காரர்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தைக் காண்பார்கள். முக்கியமாக அந்த ராசிக்காரர்கள் தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். இப்போது குரு அஸ்தமனமாவதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 4 ஆவது வீட்டில் குரு பகவான் அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு வருமானத்தில் உயர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைப்பதால், வெற்றிகள் குவியும். கூடுதல் வருமான ஆதாரங்களும் உருவாகும் வாய்ப்புள்ளது.
கடகம்
கடக ராசியின் முதல் வீட்டில் குரு பகவான் அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்ததை விட நல்ல பலன்கள் கிடைக்கும். மாணவர்கள் கடினமாக உழைத்து படித்தால், நல்ல வெற்றியைப் பெற வாய்ப்புள்ளது. நீண்ட நாள் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் முழு ஆதவு கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் பாராட்டப்படும். நல்ல நிதி ஆதாயங்கள் உருவாகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். இலக்குகளில் எவ்வளவு கவனம் செலுத்துகிறீர்களோ, அந்த அளவில் வெற்றியைப் பெறுவீர்கள்.
தனுசு
தனுசு ராசியின் 8 ஆவது வீட்டில் குரு பகவான் அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்வில் பல நல்ல மாற்றங்களைக் காண்பார்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும் வாய்ப்புள்ளது. நிதி நிலைமை வலுவடையும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பணியிடத்தில் உங்களின் நற்பெயர் அதிகரிக்கும். குடும்பத்திற்குள் உங்களின் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications



