Latest Updates
-
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய டாப் 15 உணவுகள்! -
Purattasi Matha Rasi Palan 2026: புரட்டாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
செப்டம்பர் 17, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க பந்தயம் அடிக்கப்போறாங்களாம் -
சூரிய பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நாஞ்சில் புளிக்குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சாதத்தோட சாப்பிட அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு எப்பவும் ஒரே சைடு டிஷ் செய்யாம.. ஒருவாட்டி இந்த பரங்கிக்காய் கிரேவி செய்யுங்க.. அள்ளும்.. -
முகத்தில் உள்ள கருமையை நீக்கி வெள்ளையாகணுமா? அப்ப பீட்ரூட் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க எவ்வளவு வயதானாலும் குழந்தைத்தனம் மாறாதவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது..
July 2026 Monthly Horoscope Lucky Zodiac Signs: 2026 ஆம் ஆண்டின் ஏழாவது மாதமானது ஜூலை மாதத்தில் நுழையவுள்ளோம். ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் மாதந்தோறும் தங்களின் நிலையில் மாற்றங்களை ஏற்படுத்துவதோடு, பல யோகங்களையும் உருவாக்கி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ஜூலை மாதத்தில் மிகவும் மங்களகரமான மற்றும் சக்தி வாய்ந்த யோகங்களில் ஒன்றான இந்திர யோகம் உருவாகவுள்ளது.

இந்த யோகமானது ஒருவரது வாழ்வில் மகிழ்ச்சி, செழிப்பு, அமைதி போன்றவற்றை கொண்டு வரும். இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், 6 ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர். சொல்லப்போனால் இந்த ராசிக்காரர்களின் வாழ்வில் செல்வமும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும். இப்போது ஜூலை மாதத்தில் உருவாகும் இந்திர யோகத்தால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! ஜூலை மாதத்தில் உங்களின் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் பாராட்டப்படும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. மொத்தத்தில் வாழ்க்கையில் நல்ல நேர்மறையான மாற்றத்தைக் காண்பீர்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! ஜூலை மாதம் சாதகமாக இருக்கும். உறவுகளில் உள்ள பிரச்சனைகள் நீங்கி, பிணைப்பு அதிகரிக்கும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும் வாய்ப்புள்ளது. நிதி நிலைமை வலுவாக இருக்கும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். பண வரவு அதிகரிக்கும். வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! ஜூலை மாதமானது ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும். நாள்பட்ட நோய்களில் இருந்து விடுபட்டு, ஆற்றலுடனும், சுறுசுறுப்பாகவும் செயல்படுவீர்கள். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் புதிய திட்டங்களில் வேலை செய்யும் வாய்ப்பைப் பெறுவதோடு, அதில் திறம்பட செயல்படவும் செய்வீர்கள். பண வரவு அதிகரிக்கும். கிரக நிலைகளால் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! ஜூலை மாதமானது நிதி முதலீடுகளை செய்ய உகந்ததாக இருக்கும். வியாபாரிகளுக்கு இம்மாதத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்புக்கள் கிடைக்கும். பல புதிய வருமான ஆதாரங்கள் உருவாக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். இதன் மூலம் நிதி நிலைமை வலுவடையும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! ஜூலை மாதத்தில் தனிப்பட்ட வாழ்க்கை இனிமையாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவடையும். தம்பதிகளிடையே அன்பும், பிணைப்பும் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! ஜூன் மாதத்தில் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். தொழில் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். இதனால் நிதி நிலையில் எதிர்பாராத அளவில் முன்னேற்றம் ஏற்படும். அதிர்ஷ்டத்தின் ஆதரவால் வெற்றிகள் குவியும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications



