Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
July Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஜூலை மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
July Month Rasi Palan 2026: ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் நிலைகளைப் பொறுத்து பலன்கள் வேறுபடும். அந்த வகையில் 2026 ஆம் ஆண்டின் ஏழாவது மாதமான ஜூலை மாதத்தில் நிகழும் கிரக பெயர்ச்சிகளால், பல மங்களகரமான மற்றும் சுப யோகங்கள் உருவாகவுள்ளன. இந்த யோகங்களால் ஜூலை மாதமானது மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் எதிர்பாராத பல மாற்றங்களைக் கொண்டு வரப்போகிறது.

உங்களுக்கு 2026 ஆம் ஆண்டின் ஜூலை மாதம் எப்படி இருக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? கீழே 12 ராசிக்காரர்களும் ஜூலை மாதத்தில் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என ஜூலை மாத ராசிப்பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உங்கள் ராசிக்கு 2026 ஜூலை மாதம் எப்படி இருக்கும் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! ஜூலை மாதத்தின் தொடக்கம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். தொழிலதிபர்கள் புதிய ஒப்பந்தங்களால் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலைமை வலுவடையும். இருப்பினும் திட்டமிட்டு செலவுகளை செய்ய வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! ஜூலை மாதத்தில் குடும்ப விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். அதேப் போல் பண விஷயத்திலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் பொறுப்புக்கள் அதிகரிக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். முதலீடு செய்வதற்கு இம்மாதம் சிறந்ததாக இருக்கும். இருப்பினும் நிபுணர்களின் ஆலோசனையைப் பெற வேண்டும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க உணவு வழக்கத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! ஜூலை மாதத்தில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் தேடி வரும். வேலை, தொழிலில் நல்ல வளர்ச்சியைக் காண்பீர்கள். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். மன அமைதி அதிகரிக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! ஜூலை மாதம் நிதி ரீதியாக சாதகமாக இருக்கும். குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி பெருகும். நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். காதலித்து வந்தால் அன்புக்குரியவர்களுடன் அன்பு அதிகரிக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும் வாய்ப்புள்ளது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஆனால் இம்மாதத்தில் மன அழுத்தம் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! ஜூலை மாதமானது வெற்றிகள் குவியும் மாதமாக இருக்கும். சமூகத்தில் உங்களின் கௌரவம் அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. வியாபாரிகளுக்கு தங்கள் வியாபாரத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புக்கள் கிடைக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! ஜூலை மாதத்தில் நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். தொழில் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். வியாபாரத்தை திட்டுமிட்டு செய்தால், நல்ல பலன்களைப் பெறுவீர்கள். காதல் மற்றும் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நிதி நிலைமை மேம்படும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, செரிமான பிரச்சனைகளை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! ஜூலை மாதத்தில் பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். காதல் வாழ்க்கை ரொமான்டிக்காக இருக்கும். பணியிடத்தில் புதிய பொறுப்புக்களோ அல்லது பதவி உயர்வோ கிடைக்கும் வாய்ப்புள்ளது. நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! ஜூலை மாதம் முக்கிய முடிவுகளை எடுக்க சாதகமாக இருக்கும். தொழிலில் நல்ல வெற்றி கிடைக்கும். வியாபாரிகளுக்கு கூட்டு தொழில் செய்வதற்கான வாய்ப்புக்கள் தேடி வரும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, வழக்கமான பரிசோதனைகளை தவறாமல் செய்துவிடுங்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! ஜூலை மாதமானது தொழில், கல்வி ரீதியாக மங்களகரமானதாக இருக்கும். வேலையில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். காதல் வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றத்தைக் காண்பீர்கள். நிதி நிலைமை மேம்படும். மாணவர்கள் போட்டி தேர்வுகளில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! ஜூலை மாதத்தில் உங்கள் கடின உழைப்பு மற்றும் ஒழுக்கத்தின் மூலம் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். பணியிடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். அதே சமயம் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். ஆனால் பண பரிவர்த்தனைகளில் மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. ஆரோக்கிய பிரச்சனைகளுக்காக ஓய்வு எடுக்க வேண்டியிருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! ஜூலை மாதம் ஒரு சிறப்பான மாதமாக இருக்கும். தொழிலதிபர்களுக்கு தங்கள் தொழிலை விரிவுபடுத்துவதற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். சமூகத்தில் உங்களின் பெயரும், புகழும் அதிகரிக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! ஜூலை மாதத்தில் ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். காதல் உறவுகளில் நெருக்கம் அதிகரிக்கும். தொழிலில் பொறுமையைக் கிடைப்பிடித்தால், நல்ல வெற்றி கிடைக்கும். பண விஷயங்களில் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க, மன அமைதியுடனும், நேர்மறை எண்ணங்களுடனும் இருக்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications






