Latest Updates
-
கொங்குநாடு சின்ன வெங்காய சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு எதிர்பாராத லாபம் கிடைக்கப்போகுதாம் -
சனிபகவான் வக்ர நிலை அடைவதால் டிசம்பர் மாதம் வரை ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 அதிர்ஷ்ட ராசிகள் இவங்கதான் -
தக்காளியுடன் இந்த பொருளை சேர்த்து ஆந்திரா ஸ்டைலில் சட்னி அரைச்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
செட்டிநாடு ஏழுகறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இந்த மாதிரி நீங்க சாப்பிட்டு இருக்கவே மாட்டிங்க -
இந்த 5 ராசிகளில் பிறந்தவர்களின் தன்னம்பிக்கை மலையை விட பெரிதாம் - இவங்க நினைச்சதை சாதிக்காம விடமாட்டாங்க -
10 வெண்டைக்காய் இருந்தா இந்த மாதிரி அருமையான புலாவ் செய்யுங்க - வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க -
உதட்டில் முத்தம் கொடுக்கும் போது கண்கள் ஏன் தானாக மூடுகிறது தெரியுமா? இதுல இவ்வளவு ரகசியம் இருக்கா? -
புதன் மிதுன ராசிக்குள் நுழைவதால் உருவாகும் பத்ர யோகம் இந்த 3 ராசிகளை ஜெயிக்கிற குதிரையாக மாத்தப்போகுதாம் -
இந்த 4 விஷயங்களை பின்பற்றுபவர்கள் சீக்கிரம் கோடீஸ்வரர் ஆவார்களாம் - சாணக்கியர் சொல்லும் வாழ்க்கை ரகசியம்
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்..
Moon Transit In Aries On 08 July 2026: ஜோதிடத்தின் படி, நவகிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அதில் மனதில் காரணியாக கருதப்படுபவர் சந்திரன். கடக ராசியின் அதிபதியான சந்திரன் ஒரு ராசியில் 2 1/2 நாட்கள் வரை இருப்பார்.

இப்படிப்பட்ட சந்திரன் ஜூலை 08 ஆம் தேதி மாலை வேளையில் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்குள் நுழைகிறார். இந்த மேஷ ராசியில் சந்திரன் ஜூலை 10 ஆம் தேதி வரை இருப்பார். இந்த சந்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலுமே ஏதாவது ஒரு வகையில் காணப்படும்.
அதில் சிலருக்கு மோசமாக இருந்தாலும், சில ராசிக்காரர்கள் தொழில், வியாபாரம், பணம், காதல் மற்றும் முதலீடுகளில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். குறிப்பாக சிக்கிய பணம் கிடைப்பதோடு, நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. இப்போது சந்திரன் மேஷ ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் முதல் வீட்டிற்கு சந்திரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். குறிப்பாக தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஒவ்வொரு முயற்சியிலும் நல்ல வெற்றி கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. குடும்ப சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். நிதி நிலைமை மேம்படும்.
கடகம்
கடக ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சந்திரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழில் ரீதியாக சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். வேலை மற்றும் வியாபாரத்தில் படிப்படியாக நல்ல வெற்றியைக் காணக்கூடும். இருப்பினும் சில தடைகளை சந்திக்க நேரிடும். இந்நிலையில் பொறுமையாக இருக்க வேண்டும். வியாபாரிகளுக்கு எதிர்பாராத அளவில் நல்ல லாபம் கிடைக்கும். திட்டங்கள் ஒவ்வொன்றும் வெற்றி பெறும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
மீனம்
மீன ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சந்திரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியாக சாதகமாக இருக்கும். புதிய வருமான வழிகள் உருவாகும். பணியிடத்தில் வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். பல புதிய வழிகளில் இருந்து பணம் தேடி வதுரும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாயப்புக்கள் உள்ளன. போட்டி தேர்வுகளில் நல்ல வெற்றியைப் பெற வாய்ப்புள்ளது.
கன்னி
கன்னி ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சந்திரன் செல்கிறார். இதனால் இந்த ராசியைச் சேர்ந்த மாணவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். காதல் வாழ்க்கை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு போன்றவை கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகி, அதன் மூலம் மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications



