Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
செட்டிநாடு ஏழுகறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இந்த மாதிரி நீங்க சாப்பிட்டு இருக்கவே மாட்டிங்க
Ezhukari Kootu Recipe in Tamil: பொதுவாக சாம்பார், புளிக்குழம்பு என எதுவாக இருந்தாலும் அதற்கு ஏதாவது ஒரு காய்கறியை வைத்து பொரியல் செய்து விடுவோம். அதேசமயம் என்ன காய்கறியை பொரியல் செய்வது என்பது அடுத்த கவலையாகும். சாம்பார், ரசம் போன்றவற்றுக்கு பொதுவாக பொரியல்தான் சைடிஷாக செய்வார்கள், ஆனால் பொரியல் போலவே சாதத்துக்கு சூப்பரான சைடிஷாக இருக்கும் மற்றொரு ஐட்டம் என்றால் அது கூட்டுதான்.

பொதுவாக கூட்டு என்பது பூசணிக்காய், சுரைக்காய் மற்றும் புடலங்காயை வைத்துதான் செய்வார்கள், ஆனால் செட்டிநாடு பகுதிகளில் ஏழுகறி கூட்டு என்று ஒரு வித்தியாசமான கூட்டு செய்வார்கள். காய்கறிகள் விற்கும் விலையில் ஏழுகாய்கறிகளை வைத்து கூட்டு செய்வது கொஞ்சம் ஓவராக இருந்தாலும் இது ஒரு புது அனுபவத்தைக் கொடுக்கும். மேலும் இதில் பல காய்கறிகள் சேர்க்கப்படுவதால் இது சுவையாக இருப்பதுடன் மிகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கும். இந்த கூட்டை சைடிஷாகவும் சாப்பிடலாம் இல்லையெனில் அப்படியே சாதத்தில் போட்டும் சாப்பிடலாம்.
உங்களுக்கு செட்டிநாடு ஏழு கறி கூட்டு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு ஏழு கறி கூட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுடிவத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 2 கப் கலவைக் காய்கறி(ஏழு காய்கறிகள்)
- முக்கால் கப் துவரம் பருப்பு
- 1 கப் புளிக்கரைசல்
- 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 2 டேபிள் ஸ்பூன் தேங்காய்
- 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்
- தேவையான அளவு உப்பு
- ½ டீஸ்பூன் கடுகு
- ¼ டீஸ்பூன் பெருங்காயத் தூள்
- சிறிது கறிவேப்பிலை
வறுத்து அரைக்க:
- 2 டீஸ்பூன் எண்ணெய்
- 1 ஸ்பூன் கடலைப்பருப்பு
- 1 ஸ்பூன் தனியா
- ½ ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 6 வர மிளகாய்
- 2 ஸ்பூன் தேங்காய்
செய்முறை:
- ¼ கப் துவரம்பருப்புடன் 1 கப் தண்ணீர் மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து, 4-5 விசில் வரும் வரை குக்கரில் வேகவைக்கவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடலைப்பருப்பு, மல்லி விதைகள், உளுத்தம் பருப்பு மற்றும் வர மிளகாய் ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- பருப்பு பொன்னிறமாகும் வரை வறுக்கவும். அடுப்பை அணைத்துவிட்டு, இதனுடன் 2 ஸ்பூன் தேங்காயைச் சேர்த்து மென்மையான விழுதாக அரைக்கவும். இதை தனியாக வைக்கவும்.
- ஒரு அகலமான கடாயில், நறுக்கிய காய்கறிகளைப் போட்டு, புளிச்சாற்றைச் சேர்க்கவும்.
- பின்னர் மஞ்சள் தூள், பெருங்காயம் மற்றும் உப்பு சேர்க்கவும். தேவைப்பட்டால், ½ கப் தண்ணீரும் சேர்க்கவும்.
- காய்கறிகள் மென்மையாகும் வரை இதை வேகவிடவும், ஆனால் காய்கறிகள் குழைந்து விடக்கூடாது.
- காய்கறிகள் வெந்ததும், வேகவைத்த துவரம்பருப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்க்கவும்.
- நன்றாகக் கலந்து சரியான பதத்திற்குத் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.
- இதை 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும்; அவ்வப்போது கிளறிவிடவும். அடுப்பை அணைக்கவும்.
- ஒரு கடாயில் 2 ஸ்பூன் தேங்காயைச் சேர்த்து, அது பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
- இதை கூட்டில் சேர்த்து நன்கு கிளறவும்.
- அதே கடாயில் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி, கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும்.
- கடுகு பொரிந்ததும், இதையும் கூட்டுக் கலவையில் சேர்க்கவும். அவ்வளவுதான் செட்டிநாடு ஏழுகறி கூட்டு ரெடி.



Click it and Unblock the Notifications