Latest Updates
-
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
செவ்வாய் துலாம் ராசிக்குள் செல்வதால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வெள்ளை பட்டாணி இருந்தா இந்த பஞ்சாபி வடானா மசாலாவை செஞ்சு பாருங்க - சப்பாத்தி. பூரிக்கு செமையா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரங்க உலகை சுற்றும் சுதந்திரப் பறவைகளாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்க தலைமுடி எலிவால் மாதிரி மாறுதா? அப்ப அடிக்கடி இந்த கற்றாழை ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
Gandhi Jayanti 2026: மகாத்மா காந்தியை பற்றி நமக்கு தெரியுமா? ஆனால் அவர் படிப்பில் எப்படிப்பட்டவர் தெரியுமா? -
மீல் மேக்கர் பிரியாணியை இப்படி செய்யுங்க.. மட்டன் பிரியாணியே தோத்துடும்.. -
4 கத்திரிக்காய் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி மிளகு குழம்பு செய்யுங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
International Day of Older Persons: பெற்றோர், முதியோருக்கான சுகாதார பராமரிப்பில் புதிய அணுகுமுறை - ஏன் அவசியம் -
குரு-செவ்வாய் கூட்டணி.. அக்டோபர் 31 வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்!
இந்த 4 விஷயங்களை பின்பற்றுபவர்கள் சீக்கிரம் கோடீஸ்வரர் ஆவார்களாம் - சாணக்கியர் சொல்லும் வாழ்க்கை ரகசியம்
Chanakya Niti: சாணக்கியர் இந்தியாவின் ஒரு புகழ்பெற்ற அறிஞர், இராஜதந்திரி மற்றும் ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணர் என்று உலகம் முழுவதும் அறியப்பட்டவர். சாணக்கியரின் அனுபவங்களின் தொகுப்பே உலகப் புகழ் பெற்ற நூலான சாணக்கிய நீதியாகும். ஒரு மனிதன் வெற்றிகரமான வாழ்க்கைக்கு கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் மற்றும் கொள்கைகள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சாணக்கிய நீதியில் நீங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கை மற்றும் வெற்றிகரமான வாழ்க்கைக்கான பல அறிவுரைகள் கூறப்பட்டுள்ளது.

பணக்கஷ்டம் இல்லாத வசதியான மற்றும் ஆடம்பரமான வாழ்க்கை வாழ வேண்டுமென்பதுதான் அனைவரின் ஆசையாக இருக்கும். இருப்பினும், இந்த ஆசை அனைவருக்கும் நிறைவேறுகிறதா என்றால் நிச்சயம் இல்லை என்றுதான் கூற வேண்டும். உங்களுக்கும் செல்வந்தராக வேண்டும் என்ற ஆசை இருந்தால், சாணக்கிய நீதியின் இந்த 4 கொள்கைகளைப் பின்பற்றுங்கள்.
ஆச்சாரிய சாணக்கியரின் அறிவுரைகள் இன்றும் மிகவும் பிரபலமாக உள்ளன. ஏனெனில், அவை எக்காலத்திற்கும் ஏற்றவையாகத் திகழ்கின்றன. சாணக்கியர் தனது நீதிகளில் செல்வம் குறித்துப் பல முக்கியக் கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். நீங்கள் வாழ்க்கையில் பணக்காரராக வேண்டும் என்றால், சாணக்கியர் கூறும் இந்த 4 விஷயங்களை பின்பற்ற வேண்டும். அவை என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இலட்சியம் இருக்க வேண்டும்
ஒருவர் வாழ்க்கையில் ஜெயிக்க அவரிடம் இலட்சியம் அவசியம் இருக்க வேண்டும். அதிகப் பணம் ஈட்டுவதில் உங்கள் செயல்பாடுகளைத் துரிதப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். இலட்சியத்தை நிர்ணயிக்க முடியாத ஒருவரால் ஒருபோதும் வெற்றியாளராகவோ அல்லது செல்வந்தராகவோ மாற முடியாது. ஒருவர் சரியான வழியில் பணம் சம்பாதிக்க வேண்டும், மேலும், எப்போதும் தங்கள் இலட்சியத்தின் மீது உறுதியான கவனத்தைச் செலுத்த வேண்டும்.
தானம் செய்வது
சாணக்கியரின் கருத்துப்படி, கோவிலில் அடிக்கடி தானம் செய்வது இறைவனின் அருளைப் பெற்றுத் தருவதோடு செல்வத்தையும் பெருக்குகிறது. இறைவனின் அருளால் இப்படி செய்பவர்கள் வீட்டில் வறுமை ஒருபோதும் ஏற்படாது. தானம் செய்வது நல்ல செயளாக இருந்தாலும், அது ஒரு வரம்பிற்கு உட்பட்டே செய்யப்பட வேண்டும். அளவுக்கு அதிகமாகத் தானம் செய்வது இழப்புகளுக்கு வழிவகுக்கும். இதனால் அவர்களிடம் உள்ள செல்வம் அழியத் தொடங்கலாம்.
நல்ல இடத்தில் வசிக்க வேண்டும்
வாழ்க்கையில் செல்வந்தராகவோ அல்லது பொருளாதார பலம் கொண்டவராகவோ இருக்க விரும்பினால், செல்வந்தர்கள், வியபாரிகள், கற்றறிந்தவர்கள், வீரர்கள், மருத்துவர்கள் மற்றும் பல்வேறு வேலைவாய்ப்புகள் நிறைந்த ஒரு இடத்தில் நீங்கள் வசிக்க வேண்டும். இத்தகைய இடங்களில் வசிப்பது அறிவை வளர்ப்பதுடன், பண வரவையும் பெருக்குவதாக நம்பப்படுகிறது. தவறான இடத்தில் வசிப்பது ஒருவரின் செல்வத்தை வெகுவாக குறைக்கும்.
முதலீடு செய்ய வேண்டும்
உலகின் மிகப்பெரிய செல்வந்தர்கள் கூட சேமிப்பில் கவனம் செலுத்துகிறார்கள். எனவே பணக்காரராக விரும்புபவர்கள் நிச்சயம் பணத்தை சேமிக்க வேண்டும். இக்கட்டான காலங்களுக்காக எப்போதும் பணத்தைச் சேமித்து வைக்க வேண்டும். ஏனெனில், வறுமை சூழும் காலகட்டத்தில் மற்றவர்கள் உங்களைக் கைவிடும்போது, இந்தச் சேமிப்பு உங்களுக்குப் பெரிதும் உதவும். பணத்தை வீணடிப்பதற்குப் பதிலாக, அதைச் சேமிப்பதில் கவனம் செலுத்த வேண்டும், மேலும், இந்த சேமிப்பை எதிர்காலத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்த முயற்சிக்க வேண்டும்.
இந்த 4 பழக்கங்களை தங்கள் வாழ்க்கையில் உறுதியாக கடைபிடிப்பவர்கள் நிச்சயம் செல்வந்தராக மாறுவார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்.



Click it and Unblock the Notifications

