Latest Updates
-
சனி-சூரியன் எதிரெதிர் நிலையில் அமர்வதால் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா இந்த கேரளா ஸ்டைல் சிக்கன் மப்பாஸ் செஞ்சு பாருங்க - சுருக்குனு செமையா இருக்கும் -
வார ராசிபலன்கள் - உங்க ராசி என்னனு சொல்லுங்க? வரப்போற வாரம் எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம் -
4 முட்டை இருந்தா ஹைதராபாத் ஸ்டைலில் இந்த மாதிரி குருமா செஞ்சு பாருங்க - தாறுமாறா இருக்கும் -
மகாத்மா காந்தியின் பெயர் 5 முறை பரிந்துரைக்கப்பட்டும் அவருக்கு ஏன் நோபல் பரிசு கிடைக்கவில்லை தெரியுமா? -
கொங்கு ஸ்பெஷல் பருப்பு செலவு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மணமணக்கும்.. வரகரிசி பொங்கல் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
அக்டோபர் 03 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கஷ்டங்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
சைவ உணவை விரும்பி சாப்பிடும் உலகின் டாப் 10 நாடுகள் - இந்தியா எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா? -
உருளைக்கிழங்கு, சீஸ் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. அள்ளும்..
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தி சொல்றோம்..
Optical Illusion Personality Test: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு புதிர் நிறைந்த சுவாரஸ்மான படங்கள் மட்டுமின்றி, ஒருவரது குணாதிசயங்களைப் பற்றி வெளிப்படுத்தவும் செய்கின்றன. நீங்கள் உங்களின் நேர்மறை, எதிர்மறை குணாதிசயங்கள், ரகசியங்களைப் பற்றி தெரிந்து கொள்ள ஆவல் கொண்டிருந்தால், இந்த ஆளுமை சோதனையை மேற்கொள்ளலாம். இப்படங்களானது நமது மனம் செயல்படும் விதத்தை வெளிப்படுத்தும்.

ஆப்டிகல் இல்யூஷன் ஆளுமை சோதனை படங்களில் பல வகைகள் உள்ளன. அதில் ஒன்று தான் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. இந்த படத்தில் 2 விதமான விஷயங்கள் உள்ளன. இந்த படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் என்ன தெரிந்தது என்று கூறுங்கள். உங்கள் மனம் உண்மையில் எவ்வாறு செயல்படுகிறது என்பது பற்றி கூறுகிறோம். என்ன ரெடியா? இப்போது இந்த படத்தில் முதலில் என்ன தெரிந்தது என்று கூறுங்கள். பின் அந்த படம் கூறுவது என்னவென்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
யானை
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் யானை தெரிந்தால், நீங்கள் திறந்த மனப்பான்மை கொண்டவர். சூழ்நிலைகளை புரிந்து கொள்ள தர்க்கரீதியான சிந்தனையை விட உள்ளுணர்வையும் உணர்ச்சிகளையுமே பெரும்பாலும் நாடுவீர்கள்.
தனிப்பட்ட உண்மைகளை விட, கருத்துக்கள் மற்றும் தொடர்புகளின் அடிப்படையில் சிந்திப்பீர்கள். இது சிறிய விஷயங்களில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, சிக்கலான சூழ்நிலைகளை விரைவாகப் புரிந்துகொள்ளவும், மற்றவர்கள் கவனிக்காத விஷயங்களை அடையாளம் காணவும் உங்களை அனுமதிக்கிறது. எப்போதும் உள்ளுணர்வை நம்பி நடப்பதால், சில சமயங்களில் நடைமுறை விவரங்களை உறுதிப்படுத்திக் கொள்ளாமல் முன்னேறிச் செல்வீர்கள்.
கிராமம்
உங்கள் கண்களுக்கு முதலில் கிராமம் தெரிந்தால், நீங்கள் இயல்பாகவே விவரங்களில் அதிக கவனம் செலுத்துபவராகவும், கூர்மையான பார்வை உடையவராகவும் இருப்பீர்கள். உணர்ச்சிப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்துவதை விட, உங்கள் கண்முன் உண்மையில் என்ன இருக்கிறதோ அதைப் பார்ப்பதன் மூலம் விஷயங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை அறிந்துகொள்ளவே நீங்கள் விரும்புவீர்கள்.
மற்றவர்கள் கவனிக்கத் தவறக்கூடிய விஷயங்களை கண்டறிந்து, எதையும் முறையாக செய்யும் போக்கு கொண்டவர்கள். இயல்பாகவே துல்லியம் மற்றும் தெளிவுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆழமாக ஆராய்வீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
