Latest Updates
-
குரு-செவ்வாய் கூட்டணி.. அக்டோபர் 31 வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
Personality Test: அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் நல்ல மற்றும் தீய குணங்கள் என்னென்ன தெரியுமா? -
நீரிழிவு நரம்பியல் பாதிப்பு என்றால் என்ன? அதன் ஆரம்ப கால அறிகுறிகள் என்ன? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், வேர்க்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
அக்டோபர் 01 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களின் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்காம் -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
Mahalaya Paksha 2026: மகாளய பட்ச காலத்துல வீட்டுக்கு இந்த 5 உயிரினங்கள் வந்தா அதிர்ஷ்டமாம்.. விரட்டாதீங்க.. -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் மேஷம் முதல் கன்னி வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
டீக்கடை ஸ்டைல் கடலை மாவு போண்டா - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடற்பயிற்சியின் போது மயக்கம் ஏன் வருகிறது? அலட்சியம் செய்யக்கூடாத அறிகுறிகளை கூறும் இதய மருத்துவர்!
Aadi Month Rasipalan 2026: ஆடி மாதத்தில் கோடிகளை குவிக்கப் போகும் 5 ராசிக்காரங்க இவங்க தான்!
Aadi Month Rasipalan 2026: ஆடி மாதம் பிறக்கவுள்ளது. பொதுவாக ஆடி மாதமானது ஆன்மீக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தமிழ் மாதமான ஆடி மாதமானது சூரியன் கடக ராசிக்கு செல்லும் போது பிறக்கும். அந்த வகையில் இந்த ஆண்டின் ஆடி மாதம் ஜூலை 16 ஆம் தேதி பிறக்கிறது. ஜோதிட ரீதியாக இந்த ஆண்டின் ஆடி மாதம் சற்று சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இந்த மாதத்தில் சூரியன் கடக ராசிக்கு நுழையும் போது, அந்த ராசியில் குரு பகவான் உச்ச பலத்துடன் இருப்பார்.

இதனால் இவ்விரு கிரகங்களின் சேர்க்கையால் ராஜயோக பலன்கள் கிடைக்கும். முக்கியமாக 5 ராசிக்காரர்களுக்கு ஆடி மாதத்தில் நிகழும் குரு சூரிய சேர்க்கையால் பண வரவு, தொழில் முன்னேற்றம், சொத்து சேர்த்து, குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும் காலமாக இருக்கப்போகிறது. இப்போது ஆடி மாதத்தில் நிகழும் குரு சூரிய சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கன்னி
ஆடி மாதத்தில் நிகழும் குரு சூரிய சேர்க்கையால் கன்னி ராசிக்காரர்கள் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். எதிர்பாராத பண வரவு கிடைக்கும். தொழிலில் லாபம் அதிகம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக தள்ளிப் போன வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். குடும்பத்தில் சந்தோஷம் பெருகும். நண்பர்களின் ஆதரவால் புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும்.
துலாம்
ஆடி மாதத்தில் நிகழும் குரு சூரிய சேர்க்கையால் துலாம் ராசிக்காரர்கள் தொழிலில் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். வேலை தொடர்பான பயணங்கள் நல்ல வெற்றியைத் தரும். சிலருக்கு வெளிநாட்டில் வேலை செய்யும் வாய்ப்புக்கள் கிடைக்கலாம். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். நீண்ட காலமாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. மொத்தத்தில் தொட்டதெல்லாம் பொன்னாகும்.
மகரம்
ஆடி மாதத்தில் நிகழும் குரு சூரிய சேர்க்கையால் மகர ராசிக்காரர்களின் வாழ்வில் இருந்த தடைகள் நீங்கும். தொழிலை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புக்கள் கிடைக்கும். புதிய முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். பணியிடத்தில் முக்கிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். அரசு தொடர்பான வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
மீனம்
ஆடி மாதத்தில் நிகழும் குரு சூரிய சேர்க்கையால் மீன ராசிக்காரர்களின் வருமானத்தில் உயர்வு ஏற்படும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சந்தோஷம் பெருகும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழு ஆதரவு கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பணப்பிரச்சனை குறையும். புதிய சொத்துக்களை வாங்கி குவிப்பீர்கள். மொத்தத்தில் ஆடி மாதம் ஆனந்தமாக இருக்கும்.
தனுசு
ஆடி மாதத்தில் நிகழும் குரு சூரிய சேர்க்கையால் தனுசு ராசிக்காரர்கள் வாழ்வில் நல்ல வளர்ச்சியை காண்பார்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கலாம். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். நீண்ட காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த முன்னேற்ற பாதை திறக்கும். நிதி நிலை வலுபெறும். கையில் பணம் குவியும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications


