Latest Updates
-
4 முட்டை இருந்தா ஹைதராபாத் ஸ்டைலில் இந்த மாதிரி குருமா செஞ்சு பாருங்க - தாறுமாறா இருக்கும் -
மகாத்மா காந்தியின் பெயர் 5 முறை பரிந்துரைக்கப்பட்டும் அவருக்கு ஏன் நோபல் பரிசு கிடைக்கவில்லை தெரியுமா? -
கொங்கு ஸ்பெஷல் பருப்பு செலவு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மணமணக்கும்.. வரகரிசி பொங்கல் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
அக்டோபர் 03 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கஷ்டங்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
சைவ உணவை விரும்பி சாப்பிடும் உலகின் டாப் 10 நாடுகள் - இந்தியா எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா? -
உருளைக்கிழங்கு, சீஸ் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. அள்ளும்.. -
1 கப் பச்சைப் பயறு இருந்தா இந்த மாதிரி கொங்கு ஸ்டைல் கடையல் செஞ்சு பாருங்க - ஆரோக்கியமா, சுவையா இருக்கும் -
கடகத்தில் இருக்கும் செவ்வாய்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
தேங்காய் ரவா தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..
ஜூலை 20-ல் நடக்கும் சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது..
Sun Nakshatra Transit On 20 July 2026: ஜோதிடத்தில் கிரகங்களின் ராஜாவாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். அதோடு அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார். அப்படி சூரியனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போது அதன் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

குறிப்பாக ஜூலை 20 ஆம் தேதி நடக்கும் சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் சூரியன் இந்த பெயர்ச்சியின் போது பூச நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். இந்த பூச நட்சத்திரத்தின் அதிபதி சனி பகவான்.
ஜோதிடத்தில் சூரியனுக்கும், சனிக்கும் இடையே பகையுணர்வு உள்ளது. இதனால் இந்த சூரிய பெயர்ச்சியானது சில ராசிக்காரர்களுக்கு மோசமாக இருந்தாலும், சில ராசிக்காரர்கள் நல்ல முன்னேற்றத்தையும், நிதி நிலையில் வளர்ச்சியையும் காணவுள்ளனர். இப்போது ஜூலை 20 ஆம் தேதி நடக்கும் சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களின் வாழ்க்கை செழிப்பாக மாறும். பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புக்கள் அல்லது பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழிலதிபர்கள் பெரிய அளவில் லாபத்தைக் காண்பார்கள். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் உருவாகும். பெற்றோரின் முழு ஆதரவு கிடைக்கும். குறிப்பாக தந்தையின் ஆதரவால் முக்கியமான வேலையை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.
மிதுனம்
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியானது மிதுன ராசிக்காரர்களுக்கு நல்ல நிதி நன்மைகளைத் தரும். உங்களின் பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். பரம்பரை சொத்துக்களால் நல்ல ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. புதிய முதலீடுகள் எதிர்காலத்தில் நல்ல லாபத்தைத் தரும். மேலும் ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்தும் நல்ல லாபம் கிடைக்கும்.
சிம்மம்
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியானது சிம்ம ராசிக்காரர்களின் தன்னம்பிக்கையையும், மன வலிமையையும் அதிகரிக்கும். பணியிடத்தில் நற்பெயர் அதிகரிக்கும். மேலும் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். நீண்ட காலமாக தொந்தரவு செய்து வந்த ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். மிகுந்த ஆற்றலுடன் செயல்படுவீர்கள். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். நிதி நிலையில் எதிர்பாராத உயர்வு ஏற்படும்.
விருச்சிகம்
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வேகமாகவும், வெற்றிகரமாகவும் முடிவடையும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வேலையை மாற்றும் எண்ணம் இருந்தால் இக்காலத்தில் முயற்சித்தால் நல்ல வேலையை பெறலாம்.
கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் கடகம், மகரம், கும்ப ராசிகளில் பிறந்தவர்கள் பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். முக்கியமாக விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications




