Latest Updates
-
குரு-செவ்வாய் கூட்டணி.. அக்டோபர் 31 வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
Personality Test: அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் நல்ல மற்றும் தீய குணங்கள் என்னென்ன தெரியுமா? -
நீரிழிவு நரம்பியல் பாதிப்பு என்றால் என்ன? அதன் ஆரம்ப கால அறிகுறிகள் என்ன? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், வேர்க்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
அக்டோபர் 01 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களின் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்காம் -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
Mahalaya Paksha 2026: மகாளய பட்ச காலத்துல வீட்டுக்கு இந்த 5 உயிரினங்கள் வந்தா அதிர்ஷ்டமாம்.. விரட்டாதீங்க.. -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் மேஷம் முதல் கன்னி வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
டீக்கடை ஸ்டைல் கடலை மாவு போண்டா - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடற்பயிற்சியின் போது மயக்கம் ஏன் வருகிறது? அலட்சியம் செய்யக்கூடாத அறிகுறிகளை கூறும் இதய மருத்துவர்!
ஜூலையில் 3 முறை உருவாகும் யுதி யோகம்: இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
Yuti Yog Forming 3 Times In July 2026: ஜோதிடத்தில் பல யோகங்கள் உள்ளன. அதில் ஒரு சிறப்பான மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த யோகம் தான் யுதி யோகம். இந்த யோகமானது சில நேரங்களில் நற்பலன்களையும், சில சமயங்களில் மோசமான பலன்களையும் தரலாம். இப்படிப்பட்ட யோகம் ஜூலை மாதத்தில் உருவாகவுள்ளது. அதுவும் ஒரு முறை அல்ல 3 முறை உருவாகவுள்ளது.

அதில் முதலாவதாக இந்த யோகம் ஜூலை 04 ஆம் தேதி உருவாகிறது. அதன் பின் ஜூலை 13 ஆம் தேதியும், மீண்டும் அதே நாளில் மாலை வேளையிலும் இந்த யோகம் உருவாகிறது. இப்படி ஒரே மாதத்தில் மீண்டும் மீண்டும் உருவாகும் யுதி யோகத்தால் 5 ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இப்போது யுதி யோகத்தால் எந்த ராசிக்காரர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
மேஷம்
யுதி யோகத்தால் மேஷ ராசிக்காரர்கள் பணியிடத்தில் அதிக வேலைச்சுமையால் மிகுந்த உடல் சோர்வை சந்திக்கக்கூடும். அதிகப்படியான வேலையால் ஓய்வு கூட எடுக்க முடியாத அளவில் பிஸியாக இருப்பீர்கள். யோசிக்காமல் முதலீடுகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும். நிதி தொடர்பான முடிவுகளை கவனமாக எடுக்க அறிவுறுத்தப்படுகிறது.
மிதுனம்
ஜூலையில் 3 முறை உருவாகும் யுதி யோகத்தால் இம்மாதத்தில் முதலீடுகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் நிதி இழப்புக்களை சந்திக்க நேரிடும். ஏதாவது ஒரு காரணத்தினால் குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகள் அல்லது வாக்குவாதங்கள் அதிகரிக்கும். அலுவலகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். வியாபாரிகள் லாபத்திற்கு பதிலாக நஷ்டத்தை பெறுவார்கள்.
கன்னி
ஜூலையில் 3 முறை உருவாகும் யுதி யோகத்தால் கன்னி ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கும். இதன் மூலம் மன அழுத்தம் அதிகரிக்கும். மற்றவர்களிடம் இருந்து அதிகம் எதிர்பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் ஏமாற்றம் தான் கிடைக்கும். பண விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாத செலவுகளைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பண பிரச்சனையால் சிரமப்படக்கூடும்.
துலாம்
ஜூலையில் 3 முறை உருவாகும் யுதி யோக காலத்தில் துலாம் ராசிக்காரர்கள் கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். ஏனெனில் கோபம் பல பிரச்சனைகள் ஏற்படுத்தக்கூடும். மேலும் இக்காலத்தில் மேற்கொள்ளும் பயணங்கள் அவ்வளவு சிறப்பாக இருக்காது. பயணங்களின் போது நிறைய பிரச்சனைகள் சந்திக்க நேரிடும். முக்கியமாக ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை தொண்டை தொடர்பான பிரச்சனையால் அவதிப்படக்கூடும்.
மகரம்
ஜூலையில் 3 முறை உருவாகும் யுதி யோகத்தால் மகர ராசியைச் சேர்ந்த வணிகர்கள் புதிய ஒப்பந்தங்களால் நிதி சிக்கல்களை சந்திக்க நேரிடும். கடனாக கொடுத்த பணம் கைக்கு வராமல் சிரமப்படுத்தும். கண்மூடித்தனமாக மற்றவர்களை நம்புவதைத் தவிர்க்க வேண்டும். எதிர்பார்த்த நபர்களிடம் இருந்து எந்த ஆதரவும் கிடைக்காமல் ஏமாறக்கூடும். இதன் மூலம் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications


