Latest Updates
-
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
சனிபகவான் ரேவதி நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வெற்றியின் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
வரலட்சுமி விரதம் ஸ்பெஷல் - கர்நாடகா ஸ்பெஷல் கசகசா பாயாசம் ரெசிபி - செஞ்சு பாருங்க செமையா இருக்கும் -
உங்க முகத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப தேனை கொண்டு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
தமிழ்நாட்டின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நதி எது தெரியுமா? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
இந்த ஆண்டின் கடைசி 4 மாதங்கள் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது... -
கொசுக்களுக்கு ஏன் மனித இரத்தம் தேவைப்படுகிறது? கொசுக்கள் கடித்தால் ஏன் அரிப்பு ஏற்படுகிறது தெரியுமா? -
செப்டம்பர் மாதத்தில் வெற்றிகளையும், கோடிகளையும் குவிக்கும் அதிர்ஷ்டமுள்ள 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வரலட்சுமி விரதம் ஸ்பெஷல் ரவா லட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
ஹை பிபி இருக்கா? மருந்து மாத்திரை இல்லாமலேயே பிபி-யை குறைக்கணுமா? அப்ப இந்த 5 பானங்களை குடிங்க..
1/2 கப் கடலைப்பருப்பு இருந்தா டக்குனு இந்த குருமாவை செய்யுங்க - இட்லி, தோசை, சப்பாத்திக்கு அருமையா இருக்கும்
Kadalai Paruppu Kurma Recipe in Tamil: பலரது வீடுகளில் காலை அல்லது இரவில் இட்லி அல்லது தோசைதான் பிரதான உணவாக இருக்கும். உங்கள் வீட்டில் இன்று இரவு இட்லி அல்லது தோசை நினைக்கிறீர்களா? அதற்கு வழக்கமான சட்னி அல்லது சாம்பார் செய்யாமல் புதிதாக ஏதாவது சைடிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? ஆனால் உங்கள் வீட்டில் காய்கறி எதுவும் இல்லையா? உங்கள் வீட்டில் கடலைப்பருப்பு உள்ளதா? அப்படியானால் அதை வைத்து ஒரு அட்டகாசமான சைடிஷ் செய்யுங்க.

இந்த கடலைப்பருப்பு குருமா செய்வது மிகவும் ஈஸி. மேலும் வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் சுவையில் இருக்கும். இந்த குருமா இட்லி, தோசை மட்டுமின்றி சப்பாத்தி, பூரியுடனும் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். இந்த குருமா சுவையானதாக இருப்பதுடன் செய்வதற்கும் மிகவும் எளிதானது. காய்கறி இல்லாத நேரத்தில் இந்த குருமாவை டக்குனு வைச்சுரலாம்.
உங்களுக்கு சுவையான கடலைப் பருப்பு குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கடலைப் பருப்பு குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- ½ கப் கடலைப்பருப்பு
- 2 பெரிய வெங்காயம்
- 1 தக்காளி
- 2 டீஸ்பூன் சாம்பார் பொடி
- ½ டீஸ்பூன் மஞ்சள் தூள்
- தேவையான அளவு உப்பு
- 3 ஸ்பூன் துருவிய தேங்காய்
- 3 டீஸ்பூன் எண்ணெய்
- ½ டீஸ்பூன் கடுகு
- 1 டீஸ்பூன் சீரகம்
- அலங்கரிக்கச் சிறிது கொத்தமல்லி இலைகள்
- 2 சிட்டிகை பெருங்காயத் தூள்
செய்முறை:
- 2 கப் தண்ணீரில் கடலைப் பருப்பை அரை மணி நேரம் ஊறவைக்கவும். இது பருப்பு எளிதாக வேக உதவும்.
- இதனுடன் மெல்லியதாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளித் துண்டுகளைச் சேர்க்கவும்.
- பின்னர் சாம்பார் பொடி மற்றும் மஞ்சள் தூளைச் சேர்க்கவும்.
- சாம்பார் பொடிக்குப் பதிலாக, 1 ஸ்பூன் மிளகாய் தூள் மற்றும் 1 ஸ்பூன் மல்லித் தூளையும் நீங்கள் சேர்க்கலாம்.
- 5 விசில் வரும் வரை பிரஷர் குக்கரில் வேகவைக்கவும்.
- பருப்பு வெந்து கொண்டிருக்கும் நேரத்தில் தேங்காய் மற்றும் சீரகத்தை சிறிதளவு தண்ணீர் சேர்த்து மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- குக்கரில் பிரஷர் வெளியானதும், அதை வெளியே எடுத்து தனியாக வைக்கவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி கடுகு சேர்த்து பொரிய விடவும்.
- கடுகு பொரியத் தொடங்கியதும், வேகவைத்த கடலைப்பருப்பு கலவையைச் சேர்க்கவும்.
- இப்போது இதனுடன் உப்பு சேர்த்து நன்கு கிளறவும். பின்னர் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை இதனுடன் சேர்க்கவும்.
- நன்றாகக் கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
- இறுதியாக கொத்தமல்லி இலைகளைத் தூவி அலங்கரிக்கவும்.
- இந்த குழம்பு ஆறியதும் கெட்டியாகிவிடும். எனவே அதற்கேற்ப தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்.
- அவ்வளவுதான் சூடான இட்லி அல்லது தோசையுடன் பரிமாறவும்.



Click it and Unblock the Notifications