வெறும் வயிற்றில் இந்த 3 உணவுகளை சாப்பிடாதீங்க.. எச்சரிக்கும் டாக்டர்!

Never Eat These 3 Foods On An Empty Stomach In Tamil: உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க நம்மில் பலர் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சில உணவுகளை உட்கொண்டு வருகிறார்கள். ஏனெனில் காலையில் வெறும் வயிற்றில் நாம் சாப்பிடும் உணவுகளானது உடலால் அப்படியே உறிஞ்சிக் கொள்ளப்பட்டு, அதன் தாக்கம் அன்றைய தினத்தில் நன்கு தெரியும். எனவே தான் சரியான காலை உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Gastroenterologist Warns Never Eat These 3 Foods On An Empty Stomach

அதுவும் நாம் ஆரோக்கியம் என்று நினைத்து காலையில் சாப்பிடும் சில உணவுகள் உடலுக்கு நன்மை விளைவிப்பதற்கு பதிலாக தீங்கை விளைவிக்கின்றன என்பது தெரியுமா? ஆகவே தான் காலையில் குடலுக்கு ஆரோக்கியமான, புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.

அதுவும் ஃபோர்டிஸ் வசந்த் குஞ்சில், 10 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் வாய்ந்த இரைப்பை மற்றும் கல்லீரல் நிபுணரான டாக்டர் ஷுபம் வத்ஸ்யா அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத முக்கியமான 3 உணவுகளை பகிர்ந்து கொண்டார். இந்த உணவுகள் குடல் ஆரோக்கியத்திற்கு தீங்கை விளைவிக்கக்கூடும் என்பதால், அவற்றை அறவே தவிர்க்க வேண்டும் என்று கூறினார். இப்போது அந்த உணவுகள் எவையென்பதையும், அதற்கான காரணங்களையும் காண்போம்.

அதில் அவர் கூறியதாவது, "உங்கள் காலை உணவுதான், அன்றைய நாள் முழுவதும் உங்கள் குடல் எப்படி உணரும் என்பதைத் தீர்மானிக்கிறது. எனவே இந்த மூன்று உணவுப் பொருட்களையும் ஒருபோதும் வெறும் வயிற்றில் சாப்பிடாதீர்கள், ஏனெனில் இது உங்கள் குடல் ஆரோக்கியம் சீர்குலைவதற்கு வழிவகுக்கும்" என்று எச்சரித்தார். அப்படி வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத அந்த 3 உணவுகள் பின்வருமாறு:

1. சிட்ரஸ் பழங்கள் / எலுமிச்சை ஜூஸ்

சிட்ரஸ் பழங்கள் மற்றும் எலுமிச்சையில் சிட்ரிக் அமிலத்தன்மை அதிகம் இருப்பதால், இவற்றை வெறும் வயிற்றில் எடுக்கும் போது, அவை குடல் சுவற்றினை எரிச்சலூட்டும். அதுவும் நிபுணரின் கூற்றுப்படி, வயிறு காலியாக இருக்கும் போது இந்த சிட்ரஸ் அல்லது எலுமிச்சை ஆரஞ்சு போன்ற புளிப்புச் சுவையுடைய உணவுகளைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவற்றில் உள்ள அமிலத்தன்மை குடல் சுவற்றினை நேரடியாக எரிச்சலூட்டி, அசிடிட்டிக்கு வழிவகுத்துவிடும்.

2. ப்ளாக் காபி

பொதுவாக காபி உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கக்கூடியது. ஆனால் வெறும் வயிற்றில் ஒரு கப் ப்ளாக் காபியை குடிப்பது குடலுக்கு ஏற்படும் ஒரு அமில அதிர்ச்சியைப் போன்றது. ஏனெனில் இது அமில உற்பத்தியைத் தூண்டி வயிறு உப்புசம், எரிச்சல் மற்றும் ஆற்றல் இழப்பை ஏற்படுத்துவதாக டாக்டர் கூறினார். எனவே இதுவரை வெறும் வயிற்றில் ப்ளாக் காபி குடித்து வந்தால், இனிமேல் அந்த தவறை செய்யாதீர்கள்.

3. காரமான உணவுகள்

காரமான உணவுகள் வயிற்றில் எரிச்சலையும், நீண்ட கால அழற்சியையும் ஏற்படுத்தும். எனவே காலையில் வெறும் வயிற்றில் காரசாரமான உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்குமாறு இரைப்பை குடல் மருத்துவர் கூறினார். ஆகவே இதுவரை காலையில் நல்ல கார சட்னியை செய்து இட்லி, தோசைக்கு சாப்பிட்டு வந்திருந்தால், இனிமேல் அந்த தவறை செய்யாதீர்கள்.

என்ன சாப்பிடலாம்?

"குடலைப் பற்றி நான் நன்கு அறிந்தவன் என்பதால், எப்போதும் காலை உணவை ஏதேனும் ஒரு நடுநிலையான உணவோடு தொடங்குமாறு நான் பரிந்துரைக்கிறேன்," என்றார். மேலும் குடல் ஆரோக்கியத்திற்கான சில சிறந்த உணவுகளையும் பரிந்துரைத்தார். அந்த உணவுகளாவன:

* ஊற வைத்த நட்ஸ்
* ஓட்ஸ்
* வாழைப்பழம்
* பிரட் ஆம்லெட்
* இட்லி சாம்பார்
* தோசை சாம்பார்
* ஆப்பிள்
* வேக வைத்த முட்டைகள்

இப்படியான உணவுகளை காலை உணவின் போது எடுத்து வந்தால், குடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும், உடலும் எவ்வித பிரச்சனைகளும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Sunday, October 4, 2026, 12:38 [IST]
Desktop Bottom Promotion