Latest Updates
-
சனி-சூரியன் எதிரெதிர் நிலையில் அமர்வதால் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
வார ராசிபலன்கள் - உங்க ராசி என்னனு சொல்லுங்க? வரப்போற வாரம் எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம் -
4 முட்டை இருந்தா ஹைதராபாத் ஸ்டைலில் இந்த மாதிரி குருமா செஞ்சு பாருங்க - தாறுமாறா இருக்கும் -
மகாத்மா காந்தியின் பெயர் 5 முறை பரிந்துரைக்கப்பட்டும் அவருக்கு ஏன் நோபல் பரிசு கிடைக்கவில்லை தெரியுமா? -
கொங்கு ஸ்பெஷல் பருப்பு செலவு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மணமணக்கும்.. வரகரிசி பொங்கல் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
அக்டோபர் 03 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கஷ்டங்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
சைவ உணவை விரும்பி சாப்பிடும் உலகின் டாப் 10 நாடுகள் - இந்தியா எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா? -
உருளைக்கிழங்கு, சீஸ் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. அள்ளும்.. -
1 கப் பச்சைப் பயறு இருந்தா இந்த மாதிரி கொங்கு ஸ்டைல் கடையல் செஞ்சு பாருங்க - ஆரோக்கியமா, சுவையா இருக்கும்
1/2 கிலோ சிக்கன் வாங்குனா இந்த கேரளா ஸ்டைல் சிக்கன் மப்பாஸ் செஞ்சு பாருங்க - சுருக்குனு செமையா இருக்கும்
Kerala Chicken Mappas Recipe in Tamil: தற்போது புரட்டாசி மாதம் இருந்தாலும் அசைவம் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை குறைந்த பாடில்லை. அசைவம் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது சிக்கன்தான். உங்கள் வீட்டில் அடிக்கடி சிக்கன் எடுப்பீர்களா? எப்போதும் ஒரே சுவையில் சிக்கன் செய்யாமல், ஒருமுறை கேரளா ஸ்டைல் சிக்கன் மப்பாஸை முயற்சி செய்து பாருங்கள். இந்த சிக்கன் கிரேவி வழக்கமான சுவையில் இல்லாமல் வித்தியாசமான சுவையில் தாறுமாறாக இருக்கும்.

சிக்கனை மிகவும் விரைவாக அதேசமயம் கொஞ்சம் வித்தியாசமாக சமைத்து சாப்பிட நினைத்தால், இந்த மாதிரி கேரளா ஸ்டைல் மப்பாஸ் சிக்கன் செய்து சாப்பிடலாம். இந்த மப்பாஸ் சிக்கன் ஆப்பம், தோசை, புரோட்டா மற்றும் புலாவ் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். இப்படி செய்யும் போது சிக்கனின் சுவை இன்னும் பிரமாதமாக இருக்கும்.
உங்களுக்கு கேரளா ஸ்டைல் மப்பாஸ் சிக்கனை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கேரளா ஸ்டைல் மப்பாஸ் சிக்கன் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1/2 கிலோ சிக்கன்
- 3 நறுக்கிய பெரிய வெங்காயம்
- 1 ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது
- 4 பச்சை மிளகாய்
- 1 ஸ்பூன் மல்லித் தூள்
- 1 ஸ்பூன் கரம் மசாலா
- அரை ஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 ஸ்பூன் சிக்கன் மசாலா
- 1 நறுக்கிய தக்காளி
- 2 கப் தேங்காய் பால்
- 1 ஸ்பூன் கடுகு
- 5 சின்ன வெங்காயம்
- தேவையான அளவு உப்பு
- தேவையான அளவு தண்ணீர்
- 1 கொத்து கறிவேப்பிலை
செய்முறை:
- இந்த சிக்கன் செய்ய முதலில் சிக்கனை மேரினேட் செய்ய வேண்டும்.
- சிக்கனை மேரினேட் செய்ய வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது, பச்சை மிளகாய், மல்லித் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், சிக்கன் மசாலா, கறிவேப்பிலை மற்றும் உப்பு ஆகியவற்றில் பாதியளவைச் சேர்த்துப் நன்றாக பிசைந்து ஊறவைக்கவும். இதை 10 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.
- அடுப்பில் ஒரு அகலமான பாத்திரத்தில் மேரினேட் செய்த சிக்கனை சேர்க்கவும்.
- பின்னர் அதில் கெட்டியான தேங்காய்ப்பாலை சேர்த்து சிக்கன் மென்மையாகும் வரை வேக வைக்கவும்.
- ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, கடுகு சேர்த்து தாளிக்கவும். அதனுடன் நறுக்கிய சின்ன வெங்காயம், நறுக்கிய பெரிய வெங்காயத்தின் மீதமுள்ள பகுதி, இஞ்சி-பூண்டு விழுது , பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து, வெங்காயம் மென்மையாகும் வரை வதக்கவும்.
- அதன்பின் மீதமுள்ள மல்லித்தூள் மற்றும் கரம் மசாலாவைச் சேர்த்து, எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
- பின்னர் நறுக்கிய தக்காளியைச் சேர்க்கவும். தக்காளி மென்மையாகும் போது, வேகவைத்த கோழிக்கறியை அதிலுள்ள சாற்றுடன் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
- பின்னர் மீதமுள்ள கெட்டியான தேங்காய்ப்பாலை சேர்த்து 5 முதல் 10 நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.
- அவ்வளவுதான் சுவையான கேரளா ஸ்டைல் சிக்கன் மப்பாஸ் ரெடி



Click it and Unblock the Notifications
