ஆயில்யம் நட்சத்திரம் செல்லும் குரு பகவான்: அக்டோபர் 08 முதல் இந்த 3 ராசிக்கு கஷ்டங்கள் குறையும்!

Jupiter Transit In Aayilyam Nakshatra 2026: ஜோதிடத்தில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் அதிர்ஷ்டம், அறிவு, வளர்ச்சி, செல்வம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியான குரு பகவான், தற்போது தனது உச்ச ராசியான கடக ராசியில் பயணித்து வருகிறார். ஒருவரது ஜாதகத்தில் குரு பகவான் நல்ல நிலையில் இருந்தால், அந்நபரின் வாழ்வில் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் மரியாதை கிடைக்கும்.

Jupiter Transit In Aayilyam Nakshatra 2026 These Zodiac Signs Will Get More Benefits

ஆண்டிற்கு ஒருமுறை ராசியை மாற்றும் குரு பகவான் அவ்வப்போது நட்சத்திரத்தை மாற்றி மனித வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துவார். அந்த வகையில் தற்போது குரு பகவான் ஆயில்யம் நட்சத்திரத்தின் மூன்றாம் கட்டத்தில் பயணித்து வருகிறார். இந்நிலையில் அக்டோபர் 08 ஆம் தேதி குரு பகவான் ஆயில்யம் நட்சத்திரத்தின் 4 ஆவது கட்டத்திற்குள் நுழையவுள்ளார்.

குரு பகவானின் இந்த நிலை மாற்றத்தின் தாக்கம் 12 ராசிகளிலுமே ஏதாவது ஒரு வகையில் காணப்படும். குறிப்பாக 3 ராசிக்காரர்கள் குரு பகவானின் இந்த நிலை மாற்றத்தினால் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர். இப்போது குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மகரம்

ஆயில்யம் நட்சத்திரத்தின் 4 ஆவது கட்டத்திற்கு செல்லும் குரு பகவானால் மகர ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படும். திருமணமாகாமல் இருந்தவர்களுக்கு குருவின் அருளால் நல்ல வரன் தேடி வரும். பணிபுரிபவர்கள் இக்காலத்தில் நல்ல செய்திகளைப் பெறுவார்கள். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

ரிஷபம்

ஆயில்யம் நட்சத்திரத்தின் 4 ஆவது கட்டத்திற்கு செல்லும் குரு பகவானால் ரிஷப ராசிக்காரர்களுக்கு பல வழிகளில் மிகவும் சிறப்பானதாக இருக்கும். முக்கியமாக தைரியம், ஆற்றல், வீரம் போன்றவை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் கடின உழைப்பு பாராட்டப்படும். வேலை மற்றும் தொழிலில் இருந்த கஷ்டங்கள் குறைந்து, நிம்மதி கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.

கடகம்

ஆயில்யம் நட்சத்திரத்தின் 4 ஆவது கட்டத்திற்கு செல்லும் குரு பகவானால் கடக ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும். வாழ்வின் பல துறைகளில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெறுவீர்கள். பணியிடத்தில் உங்களிடம் சில முக்கிய பொறுப்புகள் வழங்கப்படலாம். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. சட்ட விஷயங்களில் நல்ல வெற்றியைப் பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Sunday, October 4, 2026, 22:42 [IST]
Desktop Bottom Promotion