Latest Updates
-
அக்டோபர் 04 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் ஆரோக்கியம் மோசமாகப் போகுதாம் -
சனி-சூரியன் எதிரெதிர் நிலையில் அமர்வதால் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா இந்த கேரளா ஸ்டைல் சிக்கன் மப்பாஸ் செஞ்சு பாருங்க - சுருக்குனு செமையா இருக்கும் -
வார ராசிபலன்கள் - உங்க ராசி என்னனு சொல்லுங்க? வரப்போற வாரம் எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம் -
4 முட்டை இருந்தா ஹைதராபாத் ஸ்டைலில் இந்த மாதிரி குருமா செஞ்சு பாருங்க - தாறுமாறா இருக்கும் -
மகாத்மா காந்தியின் பெயர் 5 முறை பரிந்துரைக்கப்பட்டும் அவருக்கு ஏன் நோபல் பரிசு கிடைக்கவில்லை தெரியுமா? -
கொங்கு ஸ்பெஷல் பருப்பு செலவு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மணமணக்கும்.. வரகரிசி பொங்கல் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
அக்டோபர் 03 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கஷ்டங்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
சைவ உணவை விரும்பி சாப்பிடும் உலகின் டாப் 10 நாடுகள் - இந்தியா எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா?
பூரிக்கு இப்படி உருளைக்கிழங்கு மசாலா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் கணக்கில்லாம சாப்பிடுவாங்க...
Aloo Chana Masala Recipe In Tamil: புரட்டாசி மாதம் என்பதால் உங்கள் வீட்டில் அசைவ உணவை சமைக்கமாட்டீர்களா? அப்படிப்பட்ட சூழலில் ஞாயிற்றுக்கிழமை வந்தால், அசைவ உணவை மறக்க வைக்கும் வகையிலான உணவை சமைத்து சாப்பிட வேண்டுமா? அப்படியானால் காலையில் பூரி, சப்பாத்திக்கு ஆலு சன்னா மசாலாவை செய்யுங்கள். இந்த மசாலா மிகவும் சுவையாக இருப்பதோடு, செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும். முக்கியமாக இந்த பக்குவத்தில் மசாலாவை செய்யும் போது, வீட்டில் உள்ளோர் வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாக சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு இந்த ஆலு சன்னா மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆலு சன்னா மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* தக்காளி - 2
* கசகசா - 1 டீஸ்பூன்
* பூண்டு - 5 பல்
* இஞ்சி - 1 துண்டு
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* அரைத்த விழுது
* ஊற வைத்த சன்னா - 1 கப் (6 மணிநேரம் ஊற வைத்தது)
* உருளைக்கிழங்கு - 2 (துண்டுகளாக்கப்பட்டது)
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் சன்னாவை நீரில் 6 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் நறுக்கிய தக்காளி, கசகசா, பூண்டு, இஞ்சி,
சோம்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி
பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், கரம்
மசாலா, மிளகுத் தூள் ஆகியவற்றை சேர்த்து 1 நிமிடம் குறைவான தீயில்
வைத்து வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்த தக்காளி விழுதை சேர்த்து 3 நிமிடம் குறைவான
தீயில் வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் ஊற வைத்த சன்னா மற்றும் துண்டுகளாக்கப்பட்ட
உருளைக்கிழங்கை சேர்த்து கிளறி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து தேவையான
அளவு நீரை ஊற்றி, குக்கரை மூடி மிதமான தீயில் வைத்து 4-5 விசில்
விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, உருளைக்கிழங்கை மசித்துவிட்டு,
கொத்தமல்லியைத் தூவி கிளறினால், சுவையான ஆலு சன்னா மசாலா தயார்.



Click it and Unblock the Notifications
