ஆரஞ்சு பழத் தோலை இனி தூக்கிப் போடாம.. இப்படி யூஸ் பண்ணுங்க.. முகம் வெள்ளையா பளிச்சுன்னு மின்னும்..

Orange Peel Face Packs In Tamil: பழங்களில் புளிப்பும், இனிப்பும் கலந்த சுவையைக் கொண்ட ஆரஞ்சு பழம் வைட்டமின் சி அதிகம் நிறைந்தது. இந்த ஆரஞ்சு பழத்தை தினசரி உணவில் சேர்த்து வந்தாலே சருமம் பளபளவென்று ஜொலிக்கும். அதுவும் அந்த பழத்தின் தோலைக் கொண்டு ஃபேஸ் பேக் போடும் போது, சரும அழகைக் கெடுக்கும் பல சரும பிரச்சனைகளைத் தடுக்கலாம். ஏனெனில் ஆரஞ்சு பழத்தை விட அதன் தோலில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இது தவிர இதில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள் உள்ளன. இவை சருமத்தில் பருக்களை போக்கவும், எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

Top 5 DIY Orange Peel Face Packs for Glowing Skin

எனவே இனிமேல் ஆரஞ்சு பழம் சாப்பிட்டால், அதன் தோலை தூக்கி போடாமல், அந்த ஆரஞ்சு தோலை சூரிய வெளிச்சத்தில் நன்கு காய வைத்து, அரைத்து பொடி செய்து கொள்ளுங்கள். பின் இந்த பொடியை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டுக் கொண்டால், 6 மாதம் வரை வைத்து பயன்படுத்தலாம். இப்போது சரும பொலிவை மேம்படுத்தவும், சருமத்தின் நிறத்தை அதிகரிக்கவும் ஆரஞ்சு தோலின் பொடியைக் கொண்டு எப்படியெல்லாம் ஃபேஸ் பேக் போடுவது என்பதைக் காண்போம்.

1. ஆரஞ்சு தோல் பவுடர் மற்றும் தயிர் ஃபேஸ் பேக்

* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு தோல் பவுடரை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 2 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் சருமத்திற்கு உடனடி புத்துணர்ச்சியை அளிக்கும்.

2. ஆரஞ்சு தோல் பவுடர், மஞ்சள் மற்றும் தேன் ஃபேஸ் பேக்

* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு தோலை பவுடரை எடுத்து, அத்துடன் 1 சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 5-10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் ரோஸ் வாட்டர் பயன்படுத்தி முகத்தை கழுவ வேண்டும்.

3. ஆரஞ்சு தோல் பவுடர், வால்நட் பவுடர் மற்றும் சந்தன பவுடர் ஃபேஸ் பேக்

* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு தோல் பவுடர், 1 டேபிள் ஸ்பூன் வால்நட் பவுடர் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் சந்தன பவுடரை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் 2-3 துளிகள் எலுமிச்சை சாறு மற்றும் 2 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை முகத்தில் தடவி 5 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் முகத்திற்கு உடனடி பொலிவைத் தரும்.

4. ஆரஞ்சு தோல் பவுடர், முல்தானி மெட்டி பவுடர் மற்றும் ரோஸ் வாட்டர் ஃபேஸ் பேக்

* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு தோல் பவுடர் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி பவுடரை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 10 நிமிடம் காய வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளைப்புள்ளிகளை வெளியேற்றுவதோடு, சருமத்தை ஆழமாக சுத்தம் செய்யும்.

5. ஆரஞ்சு தோல் பவுடர் மற்றும் எலுமிச்சை ஃபேஸ் பேக்

* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு தோலை பவுடரை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் சில துளிகள் எலுமிச்சை சாறு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி பவுடர், 1 டேபிள் ஸ்பூன் சந்தன பவுடரை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Sunday, October 4, 2026, 16:53 [IST]
Desktop Bottom Promotion