டீக்கடை கடலைப்பருப்பு பக்கோடா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணிப் பாருங்க..

Posted By:

Kadalai Paruppu Pakoda Recipe In Tamil: மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது நன்கு மொறுமொறுவென்றும், சூடாகவும் உங்கள் வீட்டில் உள்ளோர் ஏதாவது சாப்பிட கேட்கிறார்களா? அப்போது வழக்கமாக செய்வது போன்று வெங்காய பஜ்ஜி, போண்டா, வடை என்று செய்து கொடுப்பதற்கு பதிலாக, ஒருமுறை கடலைப்பருப்பு பக்கோடாவை செய்யுங்கள். இந்த பக்கோடா டீக்கடையில் ஃபேமஸானது. இந்த பக்கோடாவை ஒருமுறை செய்தால், பின் உங்கள் வீட்டில் உள்ளோர் அடிக்கடி இந்த பக்கோடாவை செய்து கொடுக்குமாறு சொல்வார்கள். அந்த அளவில் இந்த பக்கோடா ருசியாக இருக்கும்.

Kadalai Paruppu Pakoda How To Make Tea Kadai Pakoda Recipe

உங்களுக்கு இந்த கடலைப்பருப்பு பக்கோடாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கடலைப்பருப்பு பக்கோடா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* உப்பு - 1/2 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* சோடா உப்பு - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - 50 மிலி
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 4 (தட்டியது)
* பெரிய வெங்காயம் - 2 (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* எண்ணெய் - 50 மிலி + பொரிப்பதற்கு தேவையான அளவு
* கடலை மாவு - 2 கப்
* பச்சரிசி மாவு - 1 கப்
* வறுத்த வேர்க்கடலை - 1 கப்

செய்முறை:

* முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் உப்பு, சோம்பு, பெருங்காயத் தூள், சோடா உப்பு ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 50 மிலி நீரை ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் விழுது ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து, 50 மிலி எண்ணெயை ஊற்றி கைகளால் நன்கு கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் கடலை மாவு மற்றும் பச்சரிசி மாவை சேர்த்து, அத்துடன் வறுத்த வேர்க்கடலையை சேர்த்து, கைகளால் அழுத்தி பிசையாமல் மென்மையாக கிளறி விட வேண்டும்.
* மாவு மிகவும் வறண்டு போயிருந்தால், லேசாக நீரைத் தெளித்து, பக்கோடா மாவு பதத்திற்கு பிசைந்து விட வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நன்கு சூடானதும், பிசைந்து வைத்துள்ள பக்கோடா மாவை கொஞ்சம் எடுத்து, எண்ணெயில் உதிர்த்து விட்டு, பொரித்து எடுத்தால், சுவையான மற்றும் மொறுமொறுப்பான கடலைப்பருப்பு பக்கோடா தயார்.

[ of 5 - Users]
Story first published: Sunday, October 4, 2026, 18:04 [IST]
Desktop Bottom Promotion