அக்டோபர் 17-ல் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!

Shukraditya Rajyog 2026: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் சேர்க்கையால் உருவாகும் யோகங்கள் மனித வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் ஒரு ராசியில் இரண்டு கிரகங்கள் ஒன்றிணைந்து யோகம் உருவாகும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

Shukraditya Rajyog 2026 These Zodiac Signs Get More Money Benefits

அந்த வகையில் அக்டோபர் மாதத்தில் கிரகங்களின் ராஜாவாக கருதப்படும் சூரியனும், அசுரர்களின் குருவான சுக்கிரனும் ஒன்றிணைந்து பயணிக்கவுள்ளனர். அதுவும் இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கையால் சுக்ராதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. முக்கியமாக இந்த ராஜயோகம் சுக்கிரனின் சொந்த ராசியில் உருவாகவுள்ளது. இதனால் இந்த யோகம் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தவுள்ளது.

வேத நாட்காட்டியின் படி, கிரகங்களின் ராஜாவான சூரியன் அக்டோபர் 17 ஆம் தேதி சுக்கிரனின் சொந்த ராசியான துலாம் ராசிக்குள் நுழையவுள்ளார். அப்போது அந்த ராசியில் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படும் சுக்கிரனும் இருப்பதால், இவ்விரு கிரகங்களின் சேர்க்கை நிகழவுள்ளது.

இந்த யோகத்தின் தாக்கம் 12 ராசிகளிலுமே காணப்பட்டாலும், 4 ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் தொழில், பணம் மற்றும் வியாபாரம் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன்களைப் பெறுவார்கள். இப்போது அக்டோபர் 17-ல் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகத்தால் பண மழையில் நனையும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்

மேஷ ராசியின் 7 ஆவது வீட்டில் சூரியன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையான சுக்ராதித்ய ராஜயோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழில் மற்றும் நிதி விஷயங்களில் நேர்மறையான மாற்றங்களை காண்பார்கள். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். வேலையை மாற்ற நினைத்தால் அல்லது வேலை தேடிக் கொண்டிருந்தால், இக்காலத்தில் நல்ல வேலை தேடி வரும். நிதி ரீதியாக புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பெரிய நிதி முடிவுகளை எடுக்கும்போது நன்கு சிந்தித்துச் செயல்படுவது நல்லது.

கடகம்

கடக ராசியின் 4 ஆவது வீட்டில் சூரியன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையான சுக்ராதித்ய ராஜயோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். புதிய வீடு வாங்கும் ஆசைகள் நிறைவேறலாம். பணியில் இருப்பவர்கள் தங்கள் கடின உழைப்பிற்கு நல்ல பலன்களைப் பெற வாய்ப்புள்ளது. பணியிடத்தில் உடன் வேலை செய்வோர் மற்றும் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். ஒருவேலையை ஒழுங்காக செய்து முடித்தால், எதிர்பாராத அளவில் நல்ல பலனைப் பெறலாம்.

கன்னி

கன்னி ராசியின் 2 ஆவது வீட்டில் சூரியன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையான சுக்ராதித்ய ராஜயோகம் உருவாகிறது. இதன் காரணமாக இந்த ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். வருமான ஆதாரங்கள் அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரலாம். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். நிதி விஷயங்களில் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். இருப்பினும், எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன் முழுமையான தகவல்களைப் பெறுவது அவசியமாகும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. பணியிடத்தில் உங்கள் பொறுப்புகள் அதிகரிக்கக்கூடும். மேலும் உங்கள் செயல்திறன் மதிக்கப்படலாம். வேலையை திட்டமிட்டு செய்தால், எதிர்பார்த்த வெற்றியைப் பெறலாம்.

துலாம்

துலாம் ராசியின் முதல் வீட்டில் சூரியன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையான சுக்ராதித்ய ராஜயோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களைப் பெறுவார்கள். சிலருக்கு புதிய பொறுப்புக்களோ அல்லது பதவி உயர்வோ கிடைக்கலாம். வணிகர்களுக்கு புதிய தொடர்புகளால் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கலாம். வேலைகளை வெற்றிகரமாக முடிப்பதன் மூலம் உங்களுக்கு நிம்மதி கிடைக்கலாம். தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல உங்களுக்கு உத்வேகம் கிடைக்கும். பல புதிய வழிகளில் இருந்து பணம் தேடி வரும். இதன் மூலம் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Sunday, October 4, 2026, 10:11 [IST]
Desktop Bottom Promotion