Latest Updates
-
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
சனிபகவான் ரேவதி நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வெற்றியின் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
வரலட்சுமி விரதம் ஸ்பெஷல் - கர்நாடகா ஸ்பெஷல் கசகசா பாயாசம் ரெசிபி - செஞ்சு பாருங்க செமையா இருக்கும் -
உங்க முகத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப தேனை கொண்டு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
தமிழ்நாட்டின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நதி எது தெரியுமா? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
இந்த ஆண்டின் கடைசி 4 மாதங்கள் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது... -
கொசுக்களுக்கு ஏன் மனித இரத்தம் தேவைப்படுகிறது? கொசுக்கள் கடித்தால் ஏன் அரிப்பு ஏற்படுகிறது தெரியுமா? -
செப்டம்பர் மாதத்தில் வெற்றிகளையும், கோடிகளையும் குவிக்கும் அதிர்ஷ்டமுள்ள 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வரலட்சுமி விரதம் ஸ்பெஷல் ரவா லட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
ஹை பிபி இருக்கா? மருந்து மாத்திரை இல்லாமலேயே பிபி-யை குறைக்கணுமா? அப்ப இந்த 5 பானங்களை குடிங்க..
வாழைப்பழமும், பிரட்டும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட் செய்யுங்க..
Banana Bread Halwa Recipe In Tamil: மாலை வேளையில் பள்ளி முடிந்து வரும் உங்கள் பிள்ளைகளுக்கு ஒரு சூப்பரான ஸ்வீட் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் பிள்ளைகளுக்கு அல்வா ரொம்ப பிடிக்குமா? அப்படியானால் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே அருமையான அல்வா செய்து கொடுங்கள்.

அதுவும் வீட்டில் வாழைப்பழமும், பிரட்டும் இருந்தால், அந்த இரண்டையும் கொண்டு சூப்பரான அல்வாவை செய்யுங்கள். இந்த அல்வா ருசியாக இருப்பதோடு, செய்வதற்கு மிகவும் ஈஸியாகவும் இருக்கும். ஒருமுறை இந்த அல்வாவை செய்து கொடுத்தால், பின் அடிக்கடி இந்த அல்வாவை செய்து கொடுக்க கேட்பார்கள்.
உங்களுக்கு இந்த வாழைப்பழ பிரட் அல்வாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வாழைப்பழ பிரட் அல்வா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பிரட் - 6 துண்டுகள்
* வாழைப்பழம் - 5
* உப்பில்லாத வெண்ணெய் - 50 கிராம்
* நாட்டுச்சர்க்கரை - 1/2 கப்
* சர்க்கரை - 1/2 கப்
* பட்டை தூள் - 1 டீஸ்பூன்
* சுக்கு பொடி - 1/4 டீஸ்பூன்
* நெய் - 1/4 கப்
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் பிரட் துண்டுகளை சேர்த்து அரைத்து
பொடித்து, ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதே மிக்சர் ஜாரில் வாழைப்பழ துண்டுகளை சேர்த்து அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பௌலில் அரைத்த வாழைப்பழத்தை எடுத்துக் கொண்டு, அத்துடன்
உப்பில்லாத வெண்ணெய், நாட்டுச்சர்க்கரை, வெள்ளை சர்க்கரை ஆகியவற்றை
சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் பட்டை தூள், சுக்கு பொடி சேர்த்து நன்கு கிளறி விட
வேண்டும்.
* அடுத்து அரைத்த பிரட் தூளை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அதன் பின் ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் இந்த கலவையை ஊற்றி
நன்கு 5 நிமிடம் கிளறி விட வேண்டும்.
* கலவையானது சற்று கெட்டியாகி அல்வா போன்ற பதத்திற்கு வரும் போது,
அதில் 1/4 கப் நெய்யை ஊற்றி நன்கு கிளறி இறக்கினால், சுவையான வாழைப்பழ
பிரட் அல்வா தயார்.



Click it and Unblock the Notifications