Latest Updates
-
செப்டம்பர் மாதத்தில் வெற்றிகளையும், கோடிகளையும் குவிக்கும் அதிர்ஷ்டமுள்ள 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வரலட்சுமி விரதம் ஸ்பெஷல் ரவா லட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
ஹை பிபி இருக்கா? மருந்து மாத்திரை இல்லாமலேயே பிபி-யை குறைக்கணுமா? அப்ப இந்த 5 பானங்களை குடிங்க.. -
வறுத்து அரைச்ச கோவக்காய் சாதம் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
1 வருடம் கழித்து வக்ரமடையும் சுக்கிரனால் பணத்தையும், புகழையும் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
இந்தியாவின் எத்தனை செயற்கைகோள்கள் விண்வெளியில் உள்ளது? எந்த நாட்டிடம் மிக அதிக செயற்கைகோள்கள் உள்ளது தெரியுமா? -
கர்நாடகா ஸ்பெஷல் அக்கி ரொட்டியும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு பணம் கொட்டும் நாளாக இருக்குமாம் -
புதன் சிம்ம ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு மூடப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
செப்டம்பரில் சனி-செவ்வாயால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 4 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்!
AC ரிமோட்டில் நீங்கள் செய்யும் இந்த தவறு உங்க கரண்ட் பில்லை தாறுமாறா அதிகரிக்குமாம் - கரெக்ட்டா யூஸ் பண்ணுங்க
இந்த வருடம் மழைக்காலம் தொடங்கிய பிறகும் இன்னும் வெயில் குறைந்த பாடில்லை. எனவே பெரும்பாலான வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இப்போதும் ஏசி அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. ஏர் கண்டிஷனர் இல்லாத வாழ்க்கை பெரும்பாலான மக்களுக்கு சிரமமானதாக மாறிவருகிறது, இதனால் பெரும்பாலான வீடுகளின் மின்சாரக் கட்டணம் பலமடங்கு உயர்ந்து வருகிறது.

அதிகமான வீடுகள் மற்றும் அலுவலகங்களில் ஏசி இருந்தாலும் ஏர் கண்டிஷனரை அணைக்கும்போது பலர் ஒரு பொதுவான தவறைச் செய்வதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அந்த இயந்திரத்தை அணைக்க நீங்கள் கையாளும் முறை, அதன் செயல்பாடு, ஆயுட்காலம் மற்றும் உங்கள் மாத மின்சாரக் கட்டணம் ஆகியவற்றில் கூட குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று கூறப்படுகிறது.
ரிமோட்டை மட்டும் பயன்படுத்துவது ஏன் போதுமானது அல்ல?
பெரும்பாலான மக்கள் ரிமோட் கண்ட்ரோலைப் பயன்படுத்தித் தங்கள் ஏசியை அணைக்கிறார்கள். இது ஏர் கண்டிஷனரின் குளிர்விக்கும் செயல்பாட்டை நிறுத்தினாலும், சாதனத்தை மின் இணைப்பிலிருந்து முழுமையாகத் துண்டிப்பதில்லை. இதனால் ஏசி 'ஸ்டாண்ட்பை' நிலையிலேயே இருக்கும், அதாவது அதன் சில உட்புறப் பாகங்களுக்குத் தொடர்ந்து மின்சாரம் கிடைத்துக்கொண்டே இருக்கும். இது மின்சாரக் கட்டணத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
ரிமோட் மூலம் ஏசிய அணைத்த பிறகும், அது தொடர்ந்து சிறிதளவு மின்சாரத்தை இழுக்கக்கூடும். நிபுணர்கள் இதனை "பேண்டம் லோட்" (phantom load) அல்லது "வாம்பயர் பவர்" (vampire power) என்று அழைக்கிறார்கள். ஏர் கண்டிஷனரின் மெயின் பவர் ஸ்விட்ச் நாள் முழுவதும் 'ஆன்' (on) நிலையில் இருந்தால், இந்த கண்ணனுக்குத் தெரியாத கூடுதல் மின் நுகர்வு உங்கள் மின்சாரக் கட்டணத்தை மெல்ல மெல்ல அதிகரிக்கும்.
ஏசி இயக்கத்தில் இருக்கும் போது ஸ்விட்ச் ஆப் செய்யக்கூடாது
ஏசிஇயங்கிக்கொண்டிருக்கும்போதே அவசரத்தில் சிலர் நேரடியாகச் சுவரில் உள்ள மெயின் ஸ்விட்சை அணைத்துவிடுகிறார்கள் அல்லது மின் இணைப்பைத் துண்டித்துவிடுகிறார்கள். இது ஏசியை ஆஃப் செய்வதற்கான சரியான செயல்முறை அல்ல என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். கம்ப்ரஸர் மற்றும் குளிரூட்டும் அமைப்பு ஆகியவை தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும்போது, திடீரென மின்சாரம் துண்டிக்கப்படுவது ஏசியின் முக்கிய உட்புறப் பாகங்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தி, அதன் நீண்டகாலச் செயல்பாட்டைப் பாதிக்கக்கூடும்.
ஏசியை எப்படி ஆஃப் செய்ய வேண்டும்?
ஏசி நிறுவனங்களின் பரிந்துரையின் படி, முதலில் ரிமோட் கண்ட்ரோலைப் பயன்படுத்தி ஏசியை அணைக்க வேண்டும். கம்ப்ரஸர் மற்றும் ஃபேன் ஆகியவை முழுமையாக நின்றுவிடுவதற்காக ஒன்று முதல் இரண்டு நிமிடங்கள் வரை காத்திருக்கவும். அதன் பிறகு, மெயின் பவர் சப்ளை சுவிட்ச்சை அணைக்கவும். இந்த முறையில் ஏசியை அணைப்பது ஏசியைப் பாதுகாக்கவும், தேவையற்ற மின் நுகர்வைத் தவிர்க்கவும் உதவும்.
மெயின் சுவிட்ச்சை எப்போதெல்லாம் அணைக்க வேண்டும்?
நீங்கள் சிறிது நேரத்திற்கு அறையை விட்டு வெளியேறினால், ரிமோட் மூலம் ஏசியை அணைத்தாலே பொதுவாகப் போதுமானது. ஆனால், பல மணிநேரங்களுக்கோ, இரவு முழுவதுமோ அல்லது நீண்ட நேரம் இயங்கிய பின்னரோ ஏசியைப் பயன்படுத்தாமல் இருக்கப்போகிறீர்கள் என்றால், அதன் மெயின் சுவிட்ச்சை அணைத்துவிடுமாறு நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.



Click it and Unblock the Notifications
