Latest Updates
-
குரு-செவ்வாய் கூட்டணி.. அக்டோபர் 31 வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
Personality Test: அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் நல்ல மற்றும் தீய குணங்கள் என்னென்ன தெரியுமா? -
நீரிழிவு நரம்பியல் பாதிப்பு என்றால் என்ன? அதன் ஆரம்ப கால அறிகுறிகள் என்ன? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், வேர்க்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
அக்டோபர் 01 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களின் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்காம் -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
Mahalaya Paksha 2026: மகாளய பட்ச காலத்துல வீட்டுக்கு இந்த 5 உயிரினங்கள் வந்தா அதிர்ஷ்டமாம்.. விரட்டாதீங்க.. -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் மேஷம் முதல் கன்னி வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
டீக்கடை ஸ்டைல் கடலை மாவு போண்டா - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடற்பயிற்சியின் போது மயக்கம் ஏன் வருகிறது? அலட்சியம் செய்யக்கூடாத அறிகுறிகளை கூறும் இதய மருத்துவர்!
சாணக்கிய நீதி படி இந்த 4 நபர்கள் சமூகத்தில் எல்லோராலும் அவமதிக்கப்படுவார்களாம் - அவர்கள் யார் தெரியுமா?
Chanakya Niti: பண்டைய இந்தியாவின் மிகச்சிறந்த அறிஞர்களில் ஒருவராக விளங்கியவர் சாணக்கியர். இன்றும் அவர் சிறந்த வாழ்க்கை ஆசிரியர்களில் ஒருவராக கருதப்படுகிறார். மதம், அரசியல், பொருளாதாரம், சமூகவியல், அரசியல் அறிவியல் போன்ற அனைத்துப் பாடங்களிலும் சாணக்கியர் ஆழ்ந்த ஞானத்தைக் கொண்டிருந்தார். இன்றும் மக்கள் தங்களுடைய கருத்துக்கள் வாழ்க்கை வெற்றிகரமாக நடத்துவதற்கு உதவிகரமானதாக உள்ளது.

ஆச்சார்ய சாணக்கியர் தனது கொள்கைகள் மற்றும் கோட்பாடுகள் மூலம் பல மதிப்புமிக்க கருத்துக்களை வழங்கியுள்ளார், இது 'சாணக்கிய நீதி' என்று அழைக்கப்படுகிறது. இதில் மனித வாழ்க்கையின் அனைத்து அம்சங்களும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. சாணக்கியரின் இந்தக் கொள்கைகள் இன்றும் கூட மிகவும் பொருத்தமானவையாக உள்ளன. சாணக்கியரின் நெறிமுறைகளைப் பின்பற்றுவது ஒருவரின் வாழ்க்கையை மேம்படுத்தும்.
சாணக்கிய நீதியில், ஒருவர் நான்கு விஷயங்களை எப்போதும் ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்று ஆச்சார்ய சாணக்கியர் கூறுகிறார். இந்த நான்கு விஷயங்கள் வெளிப்பட்டால், அந்த நபர் சமூகத்தில் தனது மரியாதையை இழப்பதுடன், வாழ்க்கையின் ஒவ்வொரு அடியிலும் அவமானத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும். அவை என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தர்மம்
ஒருவர் தான் செய்யும் தர்ம காரியங்கள் நேர்மையான மனதுடன் செய்ய வேண்டும், அவை ஒருபோதும் வீணடிக்கப்படவோ அல்லது பாழாக்கப்படவோ கூடாது. தர்மம் அல்லது நற்காரியங்களைச் செய்ததை மற்றவர்களிடம் வெளிப்படையாகக் கூறுவதாலோ அல்லது அதை விளம்பரம் செய்வதாலோ, அதன் பலன் குறைந்துவிடுகிறது. இதன் விளைவாக, ஒருவருக்குக் கிடைக்க வேண்டிய நற்பலன்கள் முழுமையாகக் கிடைப்பதில்லை. சாணக்கியரின் கூற்றுப்படி, தானம் செய்வது மிகச்சிறந்த அறமாகும், அதிலும் ரகசியமாகச் செய்யப்படும் தானமே மிக உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. ரகசியமாக செய்யப்படும் தானத்திற்கு நன்மைகள் அதிகம்.
குடும்ப விவகாரங்கள்
தங்கள் வீட்டுக்குள் இருக்கும் குறைபாடுகள் அல்லது பிரச்சினைகளை வெளியே தெரியப்படுத்துவது குடும்பத்திற்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே குடும்ப விவகாரங்களை எப்போதும் குடும்பத்தினருக்குள்ளேயே பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும். வீட்டில் நடந்த விஷயங்களை மற்றவர்களிடம் கூறாதீர்கள். வீட்டுப் பிரச்சினைகளை அல்லது குறைகளை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்வது, எதிரிகள் அதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளவும், குடும்பத்தின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தவும் வழிவகுக்கும்.
அந்தரங்க உறவுகள்
திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தக்கவைக்க விரும்பினால், உங்கள் உடல்ரீதியான நெருக்கம் குறித்த விஷயங்களை ஒருபோதும் வெளிப்படையாகப் பேசாதீர்கள். கணவன்-மனைவிக்கு இடையிலான உறவு சார்ந்த விஷயங்கள் மூன்றாம் நபருக்கு எந்த சூழலிலும் தெரியக்கூடாது என்று சாணக்கியர் கூறுகிறார். அவ்வாறு தெரிந்தால் உறவில் விரிசல் ஏற்படலாம், அத்துடன் சமூகத்தில் அவர்கள் நாகரிகமற்றவர்களாகக் கருதப்படுவார்கள். எனவே, கணவன்-மனைவிக்கு இடையே அந்தரங்கமாக நடந்த விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளக் கூடாது.
மருத்துவ ரகசியங்கள்
சாணக்கிய நீதியில் கூறியுள்ள படி, நீங்கள் எடுத்துக் கொள்ளும் மருந்துகள் பற்றிய முழுமையான தகவல்களை எப்போதும் ரகசியமாக வைத்திருக்க வேண்டும். இந்த மருந்துகள் மற்றவர்களின் சிகிச்சைக்கு உதவக்கூடும் என்றாலும், உங்களின் மருத்துவம் குறித்த விவரங்களை வெளிப்படையாகப் பேசுவது ஆரோக்கியத்திற்குத் தீங்காக அமையலாம்; ஏனெனில், பெரும்பாலானோர் இவற்றைத் தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது. மேலும் நீங்கள் எடுத்துக் கொள்ளும் மருந்துகள் மற்றவர்களுக்கு உங்கள் மீதிருக்கும் கண்ணோட்டத்தை மாற்றலாம்.
இந்த விஷயங்களை ஒருபோதும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளக் கூடாது என்று சாணக்கியர் கூறுகிறார். அவ்வாறு பகிர்ந்துகொள்வது உங்கள் உறவுகளைச் சிதைக்கலாம் அல்லது உங்கள் நற்பெயரையும் கௌரவத்தையும் பாதிக்கலாம்.



Click it and Unblock the Notifications
