Latest Updates
-
குரு-செவ்வாய் கூட்டணி.. அக்டோபர் 31 வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
Personality Test: அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் நல்ல மற்றும் தீய குணங்கள் என்னென்ன தெரியுமா? -
நீரிழிவு நரம்பியல் பாதிப்பு என்றால் என்ன? அதன் ஆரம்ப கால அறிகுறிகள் என்ன? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், வேர்க்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
அக்டோபர் 01 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களின் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்காம் -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
Mahalaya Paksha 2026: மகாளய பட்ச காலத்துல வீட்டுக்கு இந்த 5 உயிரினங்கள் வந்தா அதிர்ஷ்டமாம்.. விரட்டாதீங்க.. -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் மேஷம் முதல் கன்னி வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
டீக்கடை ஸ்டைல் கடலை மாவு போண்டா - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடற்பயிற்சியின் போது மயக்கம் ஏன் வருகிறது? அலட்சியம் செய்யக்கூடாத அறிகுறிகளை கூறும் இதய மருத்துவர்!
செவ்வாய்-ராகுவால் உருவான அங்காரக யோகம்: செப்டம்பர் 02 வரை இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்!
Mars Rahu Conjunction Make Angarak Yog 2026: ஜோதிடத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கும். அவ்வாறு உருவாகும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அந்த வகையில் கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய்.

இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாவார் மற்றும் இவர் 45 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். அதோடு அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார். இந்நிலையில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி செவ்வாய் திருவாதிரை நட்சத்திரத்திற்குள் நுழைந்தார்.
இந்த திருவாதிரை நட்சத்திரத்தின் அதிபதி ராகு. செவ்வாயின் இந்த நட்சத்திர பெயர்ச்சியால் செவ்வாய் மற்றும் ராகுவின் இணைப்பு உருவாகியுள்ளது. ஜோதிடத்தின்படி, செவ்வாய்-ராகு சேர்க்கை அசுபமாக கருதப்படுகிறது. ஏனெனில் இந்த சேர்க்கையால் அங்காரக யோகம் உருவாகிறது. இந்த யோகமானது மன அழுத்தம், ஆரோக்கிய பிரச்சனைகள், வேலையில் தடைகளை உண்டாக்கும்.
இந்த நட்சத்திரத்தில் செவ்வாய் செப்டம்பர் 02 ஆம் தேதி வரை இருப்பதால், இந்த யோகமும் நீடித்திருக்கும். இதன் விளைவாக 3 ராசிக்காரர்கள் செப்டம்பர் 02 ஆம் தேதி வரை கவனமாக இருக்க வேண்டும். இப்போது அங்காரக யோகத்தால் செப்டம்பர் 02 வரை கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
செவ்வாய்-ராகுவால் உருவாகியுள்ள அங்காரக யோகத்தால் மேஷ ராசிக்காரர்கள் ஆரோக்கிய பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும். வேலை தொடர்பான மனஅழுத்தம் அதிகரிக்கும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். பண விஷயங்களில் சற்று கவனமாக இருக்க வேண்டும். அவசரப்பட்டு எந்த ஒரு விஷயங்களையும் செய்வதைத் தவிர்க்க வேண்டும். செய்யும் வேலையில் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் அதிக வேலைப்பளுவை சந்திக்கக்கூடும்.
கன்னி
செவ்வாய்-ராகுவால் உருவாகியுள்ள அங்காரக யோகத்தால் கன்னி ராசிக்காரர்கள் செய்யும் வேலையில் கவனமாக இருக்க வேண்டும். புதிய நபர்களின் நட்பால் பிரச்சனைகள் அதிகரிக்கும். ஆரோக்கிய பிரச்சனைகள் அதிகரிக்கும். இக்காலகட்டத்தில் தினசரி வழக்கத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடையே தவறான புரிதல்கள் அதிகரிக்கும். முக்கியமாக இக்காலத்தில் எந்த ஒரு பிரச்சனையையும் பேசி தீர்க்க முயற்சிக்க வேண்டும்.
மகரம்
செவ்வாய்-ராகுவால் உருவாகியுள்ள அங்காரக யோகத்தால் மகர ராசிக்காரர்கள் வியாபாரத்தில் மந்த நிலையை சந்திக்க நேரிடும். பணியிடத்தில் பிரச்சனைகளில் இருந்து விலகி இருப்பது நல்லது. மேலும் எந்த ஒரு பெரிய முடிவுகளையும் கவனமாக எடுக்க அறிவுறுத்தப்படுகிறது. புதிய வேலைகளில் சிக்கல்களை சந்திக்க நேரிடும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பேசும் போது வார்த்தைகளை கவனமாக பயன்படுத்துங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications



