Latest Updates
-
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் மேஷம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
டீக்கடை ஸ்டைல் கடலை மாவு போண்டா - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடற்பயிற்சியின் போது மயக்கம் ஏன் வருகிறது? அலட்சியம் செய்யக்கூடாத அறிகுறிகளை கூறும் இதய மருத்துவர்! -
சர்க்கரை நோய்க்கான மருந்துகள் சிறுநீரகங்களை சேதப்படுத்தும் என்பது உண்மையா? கட்டுக்கதையா? -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
மீந்து போன சப்பாத்தி இருக்கா? அப்ப இப்படி சில்லி சப்பாத்தி செய்யுங்க.. அல்டிமேட்டா இருக்கும்.. -
செப்டம்பர் 30 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றிதானாம் -
October 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்கு தொழில் ரீதியாக அதிர்ஷ்டமா இருக்கும்! -
சூரியன் துலாம் ராசிக்குள் நுழையப்போவதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி என்ன? -
தாபா ஸ்டைல் ராஜ்மா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு அருமையா இருக்கும்
Mahalaya Paksha 2026: மகாளய பட்ச காலத்துல வீட்டுக்கு இந்த 5 உயிரினங்கள் வந்தா அதிர்ஷ்டமாம்.. விரட்டாதீங்க..
Mahalaya Paksha 2026: ஒரு ஆண்டில் முன்னோர்களின் ஆசியைப் பெற உகந்த காலம் தான் மகாளய பட்ச காலம். இக்காலத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம், படையல், அன்னதானம் செய்வது போன்ற விஷயங்களை மக்கள் மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டின் மகாளய பட்சம் செப்டம்பர் 27 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 10 ஆம் தேதி வரையிலான காலமாகும். இக்காலத்தில் மக்கள் தங்கள் முன்னோர்களின் மீதான மரியாதையையும் அன்பையும் வெளிப்படுத்துவார்கள்.

அப்படி மேற்கொள்ளும் விஷயங்களால் முன்னோர்கள் மகிழ்ச்சி அடைந்து ஆசியை வழங்குவதாக இருந்தால், அதை உணர்த்தும் வகையில் சில அறிகுறிகளை காட்டுவார்கள் என்பது தெரியுமா? அதுவும் அவர்கள் ஒருசில உயிரினங்கள் வழியாக உங்கள் வீட்டிற்கு வருகை தருவார்கள். எனவே மகாளய பட்ச காலத்தில் உங்கள் வீட்டிற்கு இந்த 5 உயிரினங்கள் வந்தாலோ அல்லது அதை அதிகமாக கண்டாலோ முன்னோர்கள் உங்கள் மீது மகிழ்ச்சி கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்போது அந்த உயிரினங்கள் என்னவென்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
1. பசு
மகாளய பட்ச காலத்தில் உங்கள் வீட்டு வாசலில் பசுக்கள் வந்து நின்றால், உங்கள் முன்னோர்கள் உங்கள் மீது மகிழ்ச்சியாக உள்ளனர் என்று அர்த்தமாம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பசுவிற்கு சாப்பிட ஏதாவது கொடுத்து, அதன் பசியை ஆற்றி ஆசியைப் பெறுங்கள். இந்து மதத்தில் பித்ரு பட்சத்தில் ஒரு பசுவிற்கு சேவை செய்வது முன்னோர்களை விரைவாக திருப்திப்படுத்தும்.
2. காகம்
பித்ரு பட்சத்தில் வீட்டிற்கு முன் காகம் வருவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. எனவே காகத்தை விரட்டுவதற்கு பதிலாக, அதற்கு உணவளியுங்கள். அதுவும் முன்னோர்களுக்காக தயாரித்த உணவை படைக்கும் போது, அது நேரடியாக முன்னோர்களை அடைவதாக கூறப்படுகிறது.
3. பாம்பு
மகாளய பட்சத்தில் வீட்டிற்குள்ளேயோ அல்லது வீட்டைச் சுற்றியோ பாம்பை கண்டால், அதை துன்புறுத்தாமல், அதை அப்புறப்படுத்த நிபுணரின் உதவியை நாடுங்கள். மகாளய பட்சத்தில் பாம்பை காண்பது, முன்னோர்கள் உங்கள் மீது மகிழ்ச்சியாக உள்ளனர் என்பதை குறிக்கிறது.
4. எறும்புகள்
மகாளய பட்சத்தில் உங்கள் வீட்டில் வழக்கத்திற்கு மாறாக நிறைய எறும்புகளை கண்டால், அது நல்ல சகுனம். அப்போது அவற்றிற்கு தானியங்களை உணவாக அளிக்க மறக்காதீர்கள். இப்படி செய்வதனால் அது அவற்றின் ஆசீர்வாதங்களைப் பெற்றுத் தருவதோடு, உங்கள் முன்னோர்களின் சாபங்களிலிருந்தும் உங்களை விடுவிக்கும்.
5. நாய்
மகாளய பட்சத்தில் நாய்க்கு உணவளிப்பது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. அதுவும் இக்காலத்தில் உங்கள் வீட்டின் வாசலில் ஒரு நாய் வழக்கத்திற்கு மாறாக சுற்றினால், அதை விரட்டாமல், அதற்கு உணவளியுங்கள். ஏனெனில் வீட்டிற்கு ஒரு நாய் வருவது, உங்கள் முன்னோர்கள் உங்களைப் பார்க்க வந்திருப்பதைக் குறிப்பதாக கூறப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
