Latest Updates
-
Personality Test: அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் நல்ல மற்றும் தீய குணங்கள் என்னென்ன தெரியுமா? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், வேர்க்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
அக்டோபர் 01 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களின் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்காம் -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
Mahalaya Paksha 2026: மகாளய பட்ச காலத்துல வீட்டுக்கு இந்த 5 உயிரினங்கள் வந்தா அதிர்ஷ்டமாம்.. விரட்டாதீங்க.. -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் மேஷம் முதல் கன்னி வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
டீக்கடை ஸ்டைல் கடலை மாவு போண்டா - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடற்பயிற்சியின் போது மயக்கம் ஏன் வருகிறது? அலட்சியம் செய்யக்கூடாத அறிகுறிகளை கூறும் இதய மருத்துவர்! -
சர்க்கரை நோய்க்கான மருந்துகள் சிறுநீரகங்களை சேதப்படுத்தும் என்பது உண்மையா? கட்டுக்கதையா? -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா?
நீரிழிவு நரம்பியல் பாதிப்பு என்றால் என்ன? அதன் ஆரம்ப கால அறிகுறிகள் என்ன?
சர்க்கரை நோயானது ஒருவரது இரத்த சர்க்கரை அளவை மட்டும் பாதிப்பதில்லை, கூடவே நரம்புகளையும் தான் சேதப்படுத்தும். அதுவும் ஒருவருக்கு நீண்ட காலமாக உயர் இரத்த சர்க்கரை இருந்தால் ஏற்படக்கூடிய ஒரு நிலை தான் நீரிழிவு நரம்பியல் பாதிப்பு. பெரும்பாலும் இது கால்கள் மற்றும் பாதங்களில் உள்ள நரம்புகளை பாதிக்கும். இதற்கு சிகிச்சை மேற்கொள்ளாமல் இருந்தால், அது தீவிர வலி, உணர்வு இழப்பு, பாதங்களில் ஆறாத புண்கள் மற்றும் இரத்த ஓட்ட பாதிப்பு ஏற்பட்டு கால் அழுகும் நிலை போன்றவற்றிற்கு வழிவகுக்கும்.

'Gyaan by Ganesh - Making India Win Over Diabetes' என்பது சன் பார்மா நிறுவனம், அமெரிக்க நீரிழிவு சங்கத்துடன் இணைந்து நடத்தும் ஒரு விழிப்புணர்வு முன்னெடுப்பாகும். இது நிபுணர்களின் ஆதரவு பெற்ற தகவல்கள் மூலம், இந்தியர்கள் நீரிழிவு நோயை நன்கு புரிந்துகொள்ளவும், தடுக்கவும், நிர்வகிக்கவும் உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
நீரிழிவு நரம்பியல் பாதிப்பு என்றால் என்ன?
நீரிழிவு நரம்பியல் பாதிப்பு என்பது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு தொடர்ந்து நீடித்திருக்கும் போது ஏற்படும் நரம்பு சேத நிலையாகும். அப்போது அது நரம்புகளுக்கு ஆக்ஸிஜனையும், ஊட்டச்சத்துக்களையும் வழங்கும் சிறிய இரத்த குழாய்களை சேதப்படுத்தி, அவற்றின் செயல்பாட்டை படிப்படியாக பாதிக்கிறது. இந்த நிலை கால்கள் மற்றும் பாதங்களில் உள்ள நரம்புகளை பாதித்தாலும், கைகள் மற்றும் உடலின் பிற பகுதிகளையும் பாதிக்கலாம்.
நீரிழிவு நரம்பியல் பாதிப்பின் ஆரம்ப கால அறிகுறிகள்
சர்க்கரை நோயாளிகளுக்கு நீரிழிவு நரம்பியல் பாதிப்பு இருந்தால், அதன் அறிகுறிகளானது ஆரம்பத்தில் லேசாக தெரிய தொடங்கி, பின் படிப்படியாக தீவிரமாகும். சர்க்கரை நோயாளிகள் கவனிக்க வேண்டிய நீரிழிவு நரம்பியலின் எச்சரிக்கை அறிகுறிகள் பின்வருமாறு:
* பாதங்கள் அல்லது கைகளில் ஊசியால் குத்துவது போன்று இருப்பது அல்லது கூச்ச உணர்வு
* மரத்துப்போதல் அல்லது வலி உணர்வு திறன் குறைவது
* இரவு நேரங்களில் கால் எரிச்சல்
* தொடு உணர்திறனில் அதிகரிப்பு
* தசை பலவீனம் அல்லது நடப்பதில் சிரமம்
* காயங்கள் மெதுவாக குணமாவது, கொப்புளங்கள், பாத புண்கள்
பலர் இந்த அறிகுறிகளை சாதாரணமாக நினைத்து புறக்கணிக்கிறார்கள். சரியான நேரத்தில் சிகிச்சை மேற்கொள்வது மிகவும் அவசியம்.
"நீரிழிவு நரம்பியல் பாதிப்பு பெரும்பாலும் அமைதியாக மற்றும் அறிகுறிகளின்றி உருவாகிறது. பல நோயாளிகள் குறிப்பிடத்தக்க நரம்பு சேதம் ஏற்பட்ட பின்னரே மருத்துவ உதவியை நாடுகின்றனர். பாதங்களில் ஏற்படும் தொடர்ச்சியான கூச்ச உணர்வு, மரத்துப்போதல், பாத எரிச்சலுடன் கூடிய வலி அல்லது உணர்வு குறைதல் ஆகியவற்றை ஒருபோதும் புறக்கணிக்கக் கூடாது. இரத்தச் சர்க்கரை அளவை நல்ல கட்டுப்பாட்டில் வைத்திருத்தல், பாதங்களைத் தவறாமல் பரிசோதித்துக் கொள்ளுதல் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுதல் ஆகியவை நீரிழிவு நரம்பியல் பாதிப்பைத் தடுக்க பயனுள்ள வழிகளாகும்."
Dr. SHREEDHEVI V S, Consultant Diabetologist ,SKS speciality Hospital, Gobichettipalayam, Erode
யாருக்கு நீரிழிவு நரம்பியல் ஏற்பட வாய்ப்புள்ளது?
* பல ஆண்டுகளாக சர்க்கரை நோய் உள்ளவர்கள்
* கட்டுப்பாட்டில்லாத இரத்த சர்க்கரை அளவைக் கொண்டிருப்பவர்கள்
* உடல் பருமன் அல்லது அதிக உடல் எடையை கொண்டவர்கள்
* உயர் இரத்த அழுத்தம் அல்லது அசாதாரண கொலஸ்ட்ரால் அளவை கொண்டவர்கள்
* புகைப்பிடிப்பவர்கள் மற்றும் மது அருந்துபவர்கள்
நீரிழிவு நரம்பியல் பாதிப்பை தடுக்க முடியுமா?
நரம்பு சேதத்தை எப்போதும் சரிசெய்ய முடியாது என்றாலும், சரியான நீரிழிவு மேலாண்மை மூலமாக அதன் முன்னேற்றத்தை கட்டுப்படுத்தலாம். இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது, தினமும் தவறாமல் உடற்பயிற்சியில் ஈடுபடுவது, சமச்சீரான உணவு உண்பது, புகைப்பிடிப்பைத் தவிர்ப்பது, தினமும் பாதங்களை பரிசோதிப்பது போன்றவை நீரிழிவு நரம்பியல் அபாயத்தை கணிசமாக குறைக்க உதவும். ஒருவேளை ஏதாவது அறிகுறிகளை சந்தித்தால், தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.
நீரிழிவு நரம்பியல் பாதிப்பு என்பது சர்க்கரை நோயின் பொதுவான சிக்கலாகும். ஆரம்பத்திலேயே இதை கண்டறிந்துவிட்டால் தடுக்கலாம். அதற்கு அறிகுறிகளை கவனிப்பதும், இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதும் நரம்புகளைப் பாதுகாப்பதோடு, அதனால் ஏற்படும் விளைவுகளைத் தடுக்க பெரிதும் உதவும்.
SPI-IN-CVDZT---08-20260336
பொறுப்புத் துறப்பு: இந்தப் பொருள் நோயாளிகளுக்கான கல்வி மற்றும் விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகிறது. இது மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரின் ஆலோசனைக்கு மாற்றாகாது. Sun Pharmaceuticals Laboratories Limited (SPLL) துல்லியமான மற்றும் காலத்திற்கேற்ற தகவல்களை வழங்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறது. இருப்பினும், இது குறித்து எந்தவித உத்தரவாதமும் அளிக்கவில்லை. நீங்கள் உங்கள் மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரை அணுகி, அவர்களின் ஆலோசனையை மட்டுமே பின்பற்ற வேண்டும். Sun Pharmaceuticals Laboratories Limited (SPLL)-க்கு தெரியப்படுத்தாமல், இதன் எந்தப் பகுதியையும் இயந்திரம் அல்லது மின்னணுவியல் ரீதியாகவோ அல்லது வேறு எந்த வகையிலோ மறுஉருவாக்கம் செய்யவோ, பரப்பவோ அல்லது சேமித்து வைக்கவோ கூடாது.



Click it and Unblock the Notifications

