குரு-செவ்வாய் கூட்டணி.. அக்டோபர் 31 வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்!

Jupiter Mars Conjunction In Cancer 2026: ஜோதிடத்தில் செவ்வாய் மற்றும் குரு ஆகிய இரண்டு கிரகங்களும் முக்கியமான கிரகங்களாகும். இவை இரண்டும் ஒருவரது வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். ஒருவரது ஜாதகத்தில் செவ்வாயும், குருவும் வலுவான நிலையில் இருந்தால், அந்நபர் செல்வாக்குமிக்கவராக இருப்பார். அதுவும் அதில் செவ்வாய் ஆற்றல் மிக்கவராகவும், அச்சமற்றவராகவும், தைரியமானவராகவும் ஆக்குகிறது. அதே வேளையில் குரு அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் வழங்குகிறது. எனவே தான் இவ்விரு கிரகங்களின் சேர்க்கை சிறப்பானதாக கருதப்படுகிறது.

Jupiter Mars Conjunction In Cancer 2026 These Zodiac Signs Will Be Lucky Until October 31

அந்த வகையில் தற்போது குரு பகவான் தனது உச்ச ராசியான கடக ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் அதே ராசியில் செவ்வாயும் குருவுடன் ஒன்றிணைந்து பயணித்து வருகிறார். இவ்விரு சக்தி வாய்ந்த கிரகங்களும் அக்டோபர் 31 ஆம் தேதி வரை ஒன்றாக கடக ராசியில் பயணிக்கவுள்ளனர். அதாவது, அக்டோபர் மாதம் முழுவதும் ஒன்றாக பயணிக்கவுள்ளனர்.

எனவே இந்த கிரக சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு வகையில் காணப்படும். அதில் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். அதாவது அந்த ராசிக்காரர்கள் தொழில் வாழ்க்கையில் நல்ல வெற்றியையும், நிதி நிலையில் முன்னேற்றத்தையும் காணவுள்ளனர். இப்போது குரு செவ்வாய் கூட்டணியால் அக்டோபர் முழுவதும் அதிர்ஷ்ட மழையில் நனையப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

ரிஷபம்

ரிஷப ராசியின் 3 ஆவது வீட்டில் நிகழ்ந்துள்ள குரு-செவ்வாய் கூட்டாணியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். ஒவ்வொரு முயற்சிகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். இம்மாதத்தில் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக இருப்பது போன்று தோன்றும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவடையும். தம்பதிகளிடையே பரஸ்பர புரிதல் மேம்படும் வாய்ப்புள்ளது. தொழில் முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும்.

துலாம்

துலாம் ராசியின் 10 ஆவது வீட்டில் நிகழ்ந்துள்ள குரு-செவ்வாய் கூட்டாணியால் துலாம் ராசிக்காரர்களுக்கு உறவுகளைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியாக மிகவும் முக்கியமானதாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கலாம். சொத்து தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். திருமணமாகாதவர்கள் இக்காலகட்டத்தில் தங்கள் வாழ்க்கைத் துணையை காண வாய்ப்புள்ளது.

தனுசு

தனுசு ராசியின் 8 ஆவது வீட்டில் நிகழ்ந்துள்ள குரு-செவ்வாய் கூட்டாணியால் தனுசு ராசிக்காரர்களுக்கு முன்னேற்றத்திற்கான பல புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். வெளிநாட்டுடன் தொடர்புடைய வேலைகளில் இருந்து நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கலாம். மாணவர்கள் தங்களின் கடின உழைப்பு மற்றும் முயற்சிக்கான முழு பலனையும் பெறுவார்கள். ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வீர்கள். இம்மாதத்தில் பல நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். இதன் மூலம் உங்கள் வாழ்க்கை செழிப்பாகவும், மகிழ்ச்சியாகவும் மாறும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Thursday, October 1, 2026, 11:47 [IST]
Desktop Bottom Promotion