October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் மேஷம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு!

October Matha Rasi Palan 2026: ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் நிலைகளைப் பொறுத்து பலன்கள் வேறுபடும். அந்த வகையில் புரட்டாசி மாதத்தில் 15 நாட்களும், ஐப்பசி மாதத்தில் 15 நாட்களும் இணைந்தது அக்டோபர் மாதம். கன்னி ராசியில் சஞ்சரிக்கும் சூரியன் மாதத்தின் பிற்பகுதியில் துலாம் ராசியில் நீச்ச நிலையில் சஞ்சரிக்கும் காலமாகும்.

October Matha Rasi Palan 2026 Aries To Virgo October Monthly Predictions By Astrologer Jeyalakshmi

துலாம் ராசியில் சூரியன், சுக்கிரன், புதன் இணைந்து சஞ்சரிப்பது சில ராசிக்களுக்கு மகாலட்சுமி யோகத்தை கொடுக்கப் போகிறது. மகாளய பட்சம், நவராத்திரி பண்டிகை நிறைந்த அக்டோபர் மாதத்தில் மேஷம் முதல் கன்னி வரையிலான ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கும் என்பது குறித்து ஜோதிடர் ஜெயலட்சுமி அவர்கள் தமிழ் போல்ட்ஸ்கையுடன் பகிர்ந்து கொண்டார்.

மேஷம்

அக்டோபர் மாத பிற்பகுதியில் சூரியன் உங்கள் ராசியின் 6 ஆம் வீட்டில் இருந்து 7 ஆம் வீட்டிற்கு நகர்கிறார். ஏழாம் வீட்டில் சுக்கிரன், புதனோடு சூரியன் இணைகிறார். ஆட்சி பெற்ற சுக்கிரனோடு நீச்சம் பெற்ற சூரியன் இணைந்து நீச பங்க ராஜயோகம் பெறுகிறார். சனி பகவான் உங்கள் ராசியின் 12 ஆம் வீட்டில் நீடிப்பதால் வெளி உலக தொடர்புகள் அதிகரிக்கும். 4 ஆம் வீட்டில் செவ்வாய், குரு உடன் இணைந்து குரு மங்கல யோகத்தை கொடுக்கின்றனர்.

இதனால் மேஷ ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த மாதம். புதன் சுக்கிரன் இணைந்து மேஷ ராசியை பார்க்கின்றனர். இதன் மூலம் மகாலட்சுமி யோகமும் கிடைக்கிறது. விரைய ஸ்தானத்தில் சனி வக்ர நிலையில் பயணிப்பதால் சுப விரையங்கள் நடைபெறும்.

வீட்டில் நல்ல காரியங்கள் நடக்கும். சுப செய்திகள் தேடி வரும். வேலையில் இடமாற்றம் உண்டாகும். டிகிரி படித்து முடித்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். உங்களின் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். திடீர் அதிர்ஷ்டம் தேடி வரும். நினைத்த காரியம் நிறைவேறும். உங்களின் நிதி நிலைமை அற்புதமாக இருக்கும். திடீர் ஜாக்பாட் அடிக்கும். வெற்றிகள் தேடி வரப்போகிறது.

ரிஷபம்

சூரியன் உங்கள் ராசியில் 5 ஆம் வீட்டிலும் மாத பிற்பகுதியில் 6 ஆம் வீட்டிலும் சஞ்சரிக்கிறார். அப்பாவுடன் சின்னச் சின்ன சச்சரவுகள் வந்து செல்லும். உங்க ராசி அதிபதி சுக்கிரன் உங்க ராசிக்கு ஆறாம் வீட்டில் ஆட்சி பெற்று புதனோடு சேருகின்றனர். இது விபரீத ராஜயோக காலம். மாத பிற்பகுதியில் சூரியன் துலாம் ராசியில் நீசம் பெறுகிறார். ஆனால் சூரியன் ஆட்சி பெற்ற சுக்கிரன் உடன் இணைவதால் நீசபங்க ராஜயோகம் பெறுகிறார். விபரீத ராஜயோகம் கிடைக்கப்போகிறது. காரணம் ராசி அதிபதியும் ஆறாம் வீட்டு அதிபதியுமான சுக்கிரன் ஆட்சி பெற்று அமர்வது சிறப்பு.

தனவரவு திருப்தியாக இருந்தாலும் செலவுகள் அதிகமாகவே இருக்கும். சனி லாப ஸ்தானத்தில் பயணிப்பதால் காரிய வெற்றி உண்டாகும். வேலை செய்பவர்களுக்கு வெற்றிகள் கிடைக்கும். மேலதிகாரிகள், சக ஊழியர்களினால் நன்மைகள் நடக்கும். திருமணமான பெண்களுக்கு அன்பு மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவி உறவு இணக்கமாக இருக்கும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்கும். திருமணமானவர்களுக்கு குழந்தை பேறு கிடைக்கும். இந்த மாதம் சகலவிதமான நன்மைகளும் மேன்மைகளும் கிடைக்கும்.

மிதுனம்

புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்களுக்கு 4 ஆம் வீட்டில் சூரியன் பயணம் செய்வதால் சுகமும் சந்தோஷமும் அதிகரிக்கும். அதே நேரத்தில் அம்மாவின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இரண்டாம் வீடான குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், குரு இணைந்து குரு மங்கள யோகத்தோடு செயல்படுவதால் பண வருமானம் அதிகரிக்கும். குடும்பம் குதூகலமாக இருக்கும். புதன், சுக்கிரன் இணைந்து மகாலட்சுமி யோகத்தை கொடுப்பதால் நினைத்த காரியம் நிறைவேறும்.

மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் தேடி வரும். வெளிநாடு செல்லும் யோகத்தையும் புதன் தருவார். மாத பிற்பகுதியில் சூரியன் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5 ஆம் வீட்டில் சூரியன் நீச பங்க ராஜயோக நிலையில் சுக்கிரன், புதனோடு பயணம் செய்கிறார். பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் தேடி வரும். சுப காரியங்கள் நடைபெறும். மொத்தத்தில் அக்டோபர் மாதத்தில் மிதுன ராசிக்காரர்கள் வாழ்க்கையில் அற்புதமான மாற்றங்கள் ஏற்படப்போகிறது.

கடகம்

சந்திர பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே! உங்களுடைய ராசிக்கு இரண்டாம் வீட்டில் கேது பயணம் செய்யும் நிலையில் முயற்சி ஸ்தானமான மூன்றாவது வீட்டில் சூரியன் பயணம் செய்கிறார். நீங்கள் செய்யும் முயற்சிகள் வெற்றியடையும். கடக ராசிக்காரர்களுக்கு ராசியிலேயே குருவும் செவ்வாயும் இணைந்து குரு மங்கல யோகத்தோடு இருப்பது சிறப்பு. சுப காரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நீங்கள் செய்யும் செயல்கள் சுபமாக முடியும். கல்வி வேலை வாய்ப்புகள் சுபமாக இருக்கும்.

குரு, செவ்வாயின் பார்வையால், வேலை, தொழில் உற்சாகத்தை தரும். வெளிநாடு செல்லும் யோகம் வெற்றியைத் தரும். சுக்கிரன் ஆட்சி பெற்று மாளவிய யோகத்தை தரப்போகிறார். இந்த மாதம் நிறைய நல்லது நடக்கும். சனி பாக்ய ஸ்தானத்தில் இருப்பதால் பிரச்சினைகள் சங்கடங்கள் எதுவும் இல்லை. சின்னச் சின்ன வலிகள் வரும். திருமண முயற்சிகள் சுபத்தை தரும். வேலையில் மாற்றம் செய்ய முயற்சி செய்யாதீர்கள்.

சிம்மம்

சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதம் அற்புதமான மாதமாக அமைந்துள்ளது. உங்கள் ராசிக்கு இரண்டாம் வீடான வாக்கு ஸ்தானத்தில் ராசிநாதன் சூரியன் பயணம் செய்கிறார். அக்டோபர் மாதம் உங்களுக்கு கொண்டாட்டமாக இருக்கப் போகிறது. பணவரவு அதிகம் இருக்கும். அரசு துறை வேலையில் இருப்பவர்களுக்கு வருமானம் அதிகமாகும். அலுவலகத்தில் கோபமான பேச்சுக்களை தவிர்க்கவும். தேவையில்லாத வாக்கு வாதங்களை தவிர்க்கவும். பாக பிரிவினை தொடர்பான பேச்சுக்கள் சுபமாக முடியும்.

மாதத்தின் பிற்பகுதியில் மூன்றாம் வீடான தைரிய ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன், புதனோடு இணைந்து பயணம் செய்யப்போகிறார். சுக்கிரன் சூரியன் ஒன்றாக இருப்பதால் வேலை தொடர்பாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். கலைத்துறையில் இருப்பவர்கள் பிரபலமடைவீர்கள். உங்களின் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இல்லத்தரசிகளுக்கு வருமானம் கூடும். தங்கம், வெள்ளி நகைகள் வாங்க நல்ல மாதம். புதிய ஆடைகள் வாங்குவீர்கள்.

திருமண பேச்சு வார்த்தைகளை சிலர் தொடங்கலாம். வரன் பார்க்கத் தொடங்குங்கள் வெற்றிகரமாக முடியும். அரசு வேலைக்கு தேர்வு எழுத இது சிறப்பான மாதம். அப்பாவின் உடல் நலத்தில் அக்கறை தேவை. சிம்ம ராசிக்காரர்கள் உசுப்பேத்துறவன் கிட்ட உம்முன்னும் கடுப்பேத்துறவன் கிட்ட கம்முன்னும் இருந்தால், அக்டோபர் மாசத்தை ஜம்முன்னு கடந்திடலாம்.

கன்னி

புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே! அக்டோபர் மாத துவக்கத்தில் கன்னி ராசிக்குள் சூரியன் பயணம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். இந்த மாதம் பணவரவு அதிகரிக்கும். பெற்றோர்கள் மூத்தவர்களின் ஆசி கிடைக்கும். மாத பிற்பகுதியில் சூரியன் வாக்கு ஸ்தானத்தில் பயணிப்பதால் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். பணம் விசயத்தில் யாருக்கும் வாக்கு கொடுக்காதீர்கள். கணவன் மனைவி உறவில் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.

ராசி நாதன் புதன் இரண்டாம் வீட்டில் ஆட்சி பெற்ற சுக்கிரன் உடன் துலாம் ராசியில் பயணம் செய்வதால் மாணவர்களின் புத்தியும் அறிவும் நன்றாக வேலை செய்யும். உயர்கல்வி முயற்சியில் வெற்றி கிடைக்கும். உடலில் இருந்த சோர்வு நீங்கி உற்சாகம் அதிகரிக்கும். பிள்ளைகள் விசயத்தில் கவனமாக இருங்கள். வியாபாரத்தில் வளர்ச்சி வருமானமும் கூடும். பெண்களுக்கு தன லாபம் அதிகரிக்கும். சொல்லுக்கும், செயலுக்கும் மதிப்பு, மரியாதை கூடும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Wednesday, September 30, 2026, 19:03 [IST]
Desktop Bottom Promotion