Latest Updates
-
Mahalaya Paksha 2026: மகாளய பட்ச காலத்துல வீட்டுக்கு இந்த 5 உயிரினங்கள் வந்தா அதிர்ஷ்டமாம்.. விரட்டாதீங்க.. -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் மேஷம் முதல் கன்னி வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
டீக்கடை ஸ்டைல் கடலை மாவு போண்டா - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடற்பயிற்சியின் போது மயக்கம் ஏன் வருகிறது? அலட்சியம் செய்யக்கூடாத அறிகுறிகளை கூறும் இதய மருத்துவர்! -
சர்க்கரை நோய்க்கான மருந்துகள் சிறுநீரகங்களை சேதப்படுத்தும் என்பது உண்மையா? கட்டுக்கதையா? -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
மீந்து போன சப்பாத்தி இருக்கா? அப்ப இப்படி சில்லி சப்பாத்தி செய்யுங்க.. அல்டிமேட்டா இருக்கும்.. -
செப்டம்பர் 30 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றிதானாம் -
October 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்கு தொழில் ரீதியாக அதிர்ஷ்டமா இருக்கும்! -
சூரியன் துலாம் ராசிக்குள் நுழையப்போவதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி என்ன?
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு!
October Matha Rasi Palan 2026: புரட்டாசி மாதத்தில் 15 நாட்களும், ஐப்பசி மாதத்தில் 15 நாட்களும் இணைந்தது அக்டோபர் மாதம். கன்னி ராசியில் சஞ்சரிக்கும் சூரியன் மாதத்தின் பிற்பகுதியில் துலாம் ராசியில் நீச்ச நிலையில் சஞ்சரிக்கும் காலமாகும். துலாம் ராசியில் சூரியன், சுக்கிரன், புதன் இணைந்து சஞ்சரிப்பது சில ராசிக்களுக்கு மகாலட்சுமி யோகத்தை கொடுக்கப் போகிறது.

மகாளய பட்சம், நவராத்திரி பண்டிகை நிறைந்த அக்டோபர் மாதத்தில் துலாம் முதல் மீனம் வரையிலான ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கும் என்பது குறித்து ஜோதிடர் ஜெயலட்சுமி அவர்கள் தமிழ் போல்ட்ஸ்கையுடன் பகிர்ந்து கொண்டார்.
துலாம்
சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதம் அற்புதமான கால கட்டம். மிகப்பெரிய அதிர்ஷ்டங்கள் தேடி வரப்போகிறது. ராசிநாதன் சுக்கிரன் உங்க ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்கிறார். கூடவே புதனும் இணைந்து மகாலட்சுமி யோகத்தையும் கொடுத்து கொண்டிருக்கிறார். சூரியன் விரைய ஸ்தானத்தில் பயணம் செய்வதால் சுப விரைய செலவுகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். குருவின் பார்வையினால் உங்களுக்கு தன வரவு அதிகரிக்கும். வெற்றியை தேடித்தரும் மாதம் இதுவாகும்.
உங்க ராசி அதிபதி சுக்கிரன் ஆட்சி பெற்று புதனோடு சேருவது யோகத்தை கொடுக்கும். காரியங்களில் வெற்றி கிடைக்கும். மாத பிற்பகுதியில் உங்க ராசியில் சூரியன் நீசம் பெற்று அமர்கிறார் என்றாலும் கூடவே ஆட்சி பெற்ற சுக்கிரன் இருப்பது சிறப்பம்சம் . உங்களுக்கு பொற்காலம். வெளிநாடு வாய்ப்பு கூடி வரும். நன்றாக பரிசோதித்து ஏற்றுக்கொள்வது நல்லது. பெண்களுக்கு நல்ல மாதம். வேலை தொடர்பான பயணங்கள் வெற்றியை தேடி தரும்.
வேலை மாற்றம் தொடர்பாக முக்கியமான முடிவு செய்யும் போது கவனம் தேவை. திருமணத்திற்கு வரன் பார்க்கும் போது ஒருமுறைக்கு இருமுறை எதையும் யோசித்து முடிவு செய்வது நல்லது. அவசர முடிவுகள் எடுத்து விட்டு அவதிப்படாதீர்கள். வாக்கு சாதுர்யம் அதிகரிக்கும். கணன் மனைவி இடையை சின்னச் சின்ன சண்டைகள் ஏற்பட்டாலும் பிரச்சினை தீரும். அக்டோபர் மாதம் மகிழ்ச்சி அதிகரிக்கும் மாதமாக துலாம் ராசிக்காரர்களுக்கு அமைந்துள்ளது.
விருச்சிகம்
செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களுக்கு மாதத்தின் முற்பகுதியில் சூரியன் லாப ஸ்தானத்தில் பயணிப்பதால் வேலையில்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். 12 ஆம் வீட்டிற்கு அதிபதி சுக்கிரன் 12 ஆம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்து இருப்பதால் விபரீத ராஜயோக அமைப்பை தருகிறார். சுப விரையங்கள் அதிகம் நடக்கும். காரணம் விரைய ஸ்தான அதிபதி விரைய ஸ்தானத்தில் இருக்கிறார். புதன் சுக்கிரன் இணைந்து விரைய ஸ்தானத்தில் பயணிப்பதால் மாணவர்கள் உயர்கல்விக்காக வெளிநாடு செல்வீர்கள்.
குரு பகவானின் பார்வையால், உங்களுக்கு வேலையில் சில மாற்றங்களும் முன்னேற்றங்களும் நடக்கும். வீடு வாகன வசதிகள் நடைபெறும். தடைகளை தகர்த்து வெற்றி பெறுவீர்கள். குரு உங்களுடைய பிரச்சினைகளை சரி செய்வார். நல்ல தகவல்கள் உங்களைத் வரப்போகிறது. மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் நீங்கும். நல்ல காலம் வரப்போகிறது. விருச்சிக ராசிக்காரர்கள் சந்தோஷத்தை அனுபவிக்க தயாராகுங்கள்.
தனுசு
குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே! உங்க ராசிக்கு பத்தாம் வீட்டிலும் லாப ஸ்தானத்திலும் சூரியன் பயணம் செய்வதால் பதவி யோகம் கிடைக்கப்போகிறது. உங்களோட பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கும். லாப ஸ்தானத்தில் சுக்கிரன் புதன் இணைந்து பயணம் செய்து மகாலட்சுமி யோகத்தை கொடுக்கின்றனர். உங்களுடைய நீண்ட நாள் கஷ்டங்களுக்கு விடிவுகாலம் பிறக்கும் கசப்பான அனுபவங்களில் இருந்து நீங்கள் பாடம் கற்றுக்கொள்வீர்கள்.
சுக்கிரன் லாப ஸ்தானத்தில் ஆட்சி பெற்று பயணம் செய்வதோடு கூடவே சூரியன் இணைந்து நீசபங்க ராஜயோகம் பெறுவதால், உங்களுக்கு இனி பொற்காலம் தான். சோதனைகள் முடியப்போகிற நேரம் வந்து விட்டது. கஷ்டங்களுக்கு நிவாரணம் கிடைக்கப் போகிறது. தொட்டதெல்லாம் துலங்கப்போகிறது. தனுசு ராசிக்காரர்களுக்கு செய்யும் தொழிலில் லாபமும் வெற்றி மீது வெற்றியும் வந்து சேரப்போகிறது.
மகரம்
சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகர ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதம் உங்களுக்கு அற்புதமாக இருக்கப்போகிறது. அக்டோபர் மாதத்தில் சூரியன் உங்களுடைய ராசிக்கு பாக்ய ஸ்தானத்திலும் பத்தாம் வீட்டிலும் பயணம் செய்யப்போவதால் பதவி யோகம் தேடி வரப்போகிறது. சுக்கிரனும், புதனும் இணைந்து தொழில் ஸ்தானத்தில் இணைந்து மகாலட்சுமி யோகத்தை தருகின்றனர். துன்பங்களில் இருந்து விடுதலை பெறக்கூடிய மாதம் .
குருவின் நேரடி பார்வையால், மகர ராசிக்காரர்களுக்கு திடீர் பதவி கிடைக்கும். உங்களுக்கு பொற்காலமாக அமையப்போகிறது. கடன் பிரச்சினைகள் நீங்கும் அளவிற்கு வருமானம் அதிகரிக்கும். குரு பலன் வந்து விட்டதால், திருமணம் கைகூடி வரப்போகிறது. திருமணமான தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். அக்டோபர் மாதம் மகர ராசிக்காரர்களுக்கு மன மகிழ்ச்சி நிறைந்த மாதமாக அமையப்போகிறது.
கும்பம்
சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களே! அக்டோபர் மாதத்தில் சூரியன் உங்க ராசிக்கு எட்டாம் வீட்டிலும், பாக்ய ஸ்தானத்திலும் பயணம் செய்யப்போகிறார். உங்களுக்கு வாய்ப்புகளும் வருமானங்களும் குவியப்போகிறது. புதன் சுக்கிரன் இணைந்து பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்வதால் மகாலட்சுமி யோகம் உங்களுக்கு கிடைக்கிறது.
சூரியன் மாத பிற்பகுதியில் பாக்ய ஸ்தானத்தில் நீச பங்க ராஜயோகம் பெறுவதால் வியாபாரத்தில் வெற்றியும் லாபமும் வரும். தொட்டது துலங்கும். நன்மைகள் தேடி வரப்போகிறது. தொழில் வியாபாரத்தில் வங்கிக் கடன் வாங்கி செய்யும் முதலீடுகளில் லாபம் அதிகரிக்கும். உடலில் சோம்பல் நீங்கி சுறுசுறுப்பு அதிகரிக்கும்.
படித்து முடித்து விட்டு வெளிநாட்டு வேலைக்காக காத்திருக்கும் மாணவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரப்போகிறது. கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. மொத்தத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதம் சாதனைகள் நிறைந்த மாதமாக அமையப்போகிறது.
மீனம்
குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மீன ராசிக்காரர்களே! உங்களுடைய ராசிக்கு களத்திர ஸ்தானத்திலும், அஷ்டம ஸ்தானத்திலும் சூரியன் பயணம் செய்கிறார். சூரியனின் நேரடி பார்வையால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். மாத முற்பகுதியில் எரிச்சலும் கோபமும் வரும் எதையும் எளிதாக கையாளுங்கள். பேச்சில் கவனம் தேவை இல்லாவிட்டால் பிரச்சினைகள் அதிகமாகும். உடம்பில் ஒரு சோம்பேறித்தனம் இருந்து கொண்டே இருக்கும். பயணங்களில் எச்சரிக்கை தேவை.
மாத பிற்பகுதியில் சூரியன், சுக்கிரன் புதன் எட்டில் இருப்பதால் முன்கோபம் முயற்சியை தடுக்கும். பாதுகாப்பும் நிதானமும் தேவை. உங்களுடைய உடல் நலத்தில் அக்கறை செலுத்துங்கள். குரு பகவான் உங்களுடைய ராசிக்கு 5 ஆம் வீட்டில் உச்சம் பெற்று அமர்ந்து உங்களுடைய ராசியை பார்ப்பதால் சோதனைகளை சாதனைகளாக்குவார். குரு தன லாபத்தை கொடுப்பார். உங்களுக்கு அக்டோபர் மாதம் அற்புதம் நிறைந்த மாதமாக அமையப்போகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications





