Latest Updates
-
அக்டோபர் 01 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களின் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்காம் -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
Mahalaya Paksha 2026: மகாளய பட்ச காலத்துல வீட்டுக்கு இந்த 5 உயிரினங்கள் வந்தா அதிர்ஷ்டமாம்.. விரட்டாதீங்க.. -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் மேஷம் முதல் கன்னி வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
டீக்கடை ஸ்டைல் கடலை மாவு போண்டா - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடற்பயிற்சியின் போது மயக்கம் ஏன் வருகிறது? அலட்சியம் செய்யக்கூடாத அறிகுறிகளை கூறும் இதய மருத்துவர்! -
சர்க்கரை நோய்க்கான மருந்துகள் சிறுநீரகங்களை சேதப்படுத்தும் என்பது உண்மையா? கட்டுக்கதையா? -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
மீந்து போன சப்பாத்தி இருக்கா? அப்ப இப்படி சில்லி சப்பாத்தி செய்யுங்க.. அல்டிமேட்டா இருக்கும்.. -
செப்டம்பர் 30 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றிதானாம்
1 கைப்பிடி கொத்தமல்லியும், வேர்க்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்..
Kothamalli Curry Recipe In Tamil: காலையில் இட்லி, தோசைக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று இன்னும் முடிவெடுக்கவில்லையா? எப்போதும் சட்னி, சாம்பாரை சைடு டிஷ்ஷாக செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையில், அதே சமயம் செய்வதற்கு சுலபமாக இருக்கும் ஒரு புதுமையான சைடு டிஷ் செய்ய வேண்டுமா? அப்படியானால் கொத்தமல்லி கறி செய்யுங்கள். இந்த சைடு டிஷ் இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, சப்பாத்தி, பூரியுடன் சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக ஒருமுறை இந்த சைடு டிஷ் செய்தால், அடிக்கடி செய்வீர்கள்.

உங்களுக்கு இந்த கொத்தமல்லி கறியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொத்தமல்லி கறி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வதக்கி அரைப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 2
* கிராம்பு - 3
* சோம்பு - 1 டீஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* ஏலக்காய் - 2
* வெங்காயம் - 2 (நறுக்கியது)
* பூண்டு - 4 பல்
* இஞ்சி - சிறிய துண்டு
* தக்காளி - 1 (நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கைப்பிடி
* கொத்தமல்லி - 1 கைப்பிடி
* பச்சை மிளகாய் - 2
* துருவிய தேங்காய் - 1/2 மூடி
* முந்திரி - 5
* வேர்க்கடலை - 1 கைப்பிடி
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* மல்லி தூள் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* அரைத்த விழுது
* தண்ணீர் - 1 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, கிராம்பு, சோம்பு, மிளகு, சீரகம், ஏலக்காய்
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் கறிவேப்பிலை, கொத்தமல்லியை சேர்த்து, சுருங்கும் வரை
வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் துருவிய தேங்காய், முந்திரியை சேர்த்து நன்கு 1
நிமிடம் வதக்கி, வேர்க்கடலையை சேர்த்து சிறிது நேரம் கிளறி இறக்கி
குளிர வைக்க வேண்டும்.
* பின் அதை மிக்சர் ஜாரில் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு
மென்மையாக அரைத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு கண்ணாடி
பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் மல்லித் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு
3-4 நிமிடம் கிளறி, அரைத்த மசாலாவை சேர்த்து, 1 கப் நீரை ஊற்றி கிளறி,
சுவைக்கேற்க உப்பு சேர்த்து கலந்து, மூடி வைத்து 10 நிமிடம் கொதிக்க
வைத்து இறக்கினால், சுவையான கொத்தமல்லி கறி தயார்.



Click it and Unblock the Notifications
