Latest Updates
-
குரு-செவ்வாய் கூட்டணி.. அக்டோபர் 31 வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
Personality Test: அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் நல்ல மற்றும் தீய குணங்கள் என்னென்ன தெரியுமா? -
நீரிழிவு நரம்பியல் பாதிப்பு என்றால் என்ன? அதன் ஆரம்ப கால அறிகுறிகள் என்ன? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், வேர்க்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
அக்டோபர் 01 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களின் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்காம் -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
Mahalaya Paksha 2026: மகாளய பட்ச காலத்துல வீட்டுக்கு இந்த 5 உயிரினங்கள் வந்தா அதிர்ஷ்டமாம்.. விரட்டாதீங்க.. -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் மேஷம் முதல் கன்னி வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
டீக்கடை ஸ்டைல் கடலை மாவு போண்டா - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடற்பயிற்சியின் போது மயக்கம் ஏன் வருகிறது? அலட்சியம் செய்யக்கூடாத அறிகுறிகளை கூறும் இதய மருத்துவர்!
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்!
Shani Nakshatra Peyarchi 2026: ஜோதிடத்தில் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தரக்கூடியவர் சனி பகவான். இந்த சனி பகவான் மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியாவார். இப்படிப்பட்ட சனி பகவான் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் வரை இருப்பார் மற்றும் அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார். தற்போது சனி பகவான் மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி சனி பகவான் ரேவதி நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார்.

இந்த ரேவதி நட்சத்திரத்தில் சனி பகவான் அக்டோபர் 09 ஆம் தேதி வரை இருப்பார். இந்த ரேவதி நட்சத்திரத்தின் அதிபதி புதன் ஆவார். சனி பகவான் புதனின் நட்சத்திரத்திற்குள் செல்வதாலும், மற்ற கிரகங்களை விட ஒரு நட்சத்திரத்தில் நீண்ட காலம் பயணிப்பதாலும், இந்த சனி நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.
குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த சனி நட்சத்திர பெயர்ச்சியால் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர். இப்போது ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். அதுவும் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. வியாபாரிகள் எதிர்பாராத அளவில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். புதிய வருமான ஆதாரங்கள் உருவாவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும் வாய்ப்புள்ளது.
துலாம்
சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்கள் வாழ்வில் நல்ல மாற்றங்களைக் காண்பார்கள். நீண்ட காலமாக முடங்கியிருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். தைரியமும், வலிமையும் அதிகரிக்கும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்வில் இதுவரை சந்தித்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். தொழிலில் நல்ல வளர்ச்சியையும், லாபத்தையும் காண்பீர்கள்.
மகரம்
சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் 20 ஆம் தேதி முதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். பணப் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பரம்பரை சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் தீர்ந்து, கைக்கு வந்து சேரும். பணியிடத்தில் உங்களின் கௌரவம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். இதன் மூலம் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications



