Latest Updates
-
Personality Test: அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் நல்ல மற்றும் தீய குணங்கள் என்னென்ன தெரியுமா? -
நீரிழிவு நரம்பியல் பாதிப்பு என்றால் என்ன? அதன் ஆரம்ப கால அறிகுறிகள் என்ன? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், வேர்க்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
அக்டோபர் 01 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களின் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்காம் -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
Mahalaya Paksha 2026: மகாளய பட்ச காலத்துல வீட்டுக்கு இந்த 5 உயிரினங்கள் வந்தா அதிர்ஷ்டமாம்.. விரட்டாதீங்க.. -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் மேஷம் முதல் கன்னி வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
டீக்கடை ஸ்டைல் கடலை மாவு போண்டா - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடற்பயிற்சியின் போது மயக்கம் ஏன் வருகிறது? அலட்சியம் செய்யக்கூடாத அறிகுறிகளை கூறும் இதய மருத்துவர்! -
சர்க்கரை நோய்க்கான மருந்துகள் சிறுநீரகங்களை சேதப்படுத்தும் என்பது உண்மையா? கட்டுக்கதையா?
இதய நோய் வரக்கூடாதா? அப்ப அமெரிக்க டாக்டர் சொல்ற இந்த 5 பழக்கங்களை வெச்சுக்கோங்க..
Heart Attack In Tamil: தற்போது உலகளவில் அதிக இறப்புக்கான முக்கியமான காரணங்களுள் ஒன்றாக இதய நோய் உள்ளது. இந்த இதய நோய் ஒருவருக்கு ஒரே நாளில் வந்துவிடுவதில்லை. இது ஒருவரது உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களால் தான் வருகின்றன. ஆனால் ஒரு நற்செய்தி என்னவென்றால், இதய நோய் மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட கார்டியோவாஸ்குலர் நோய்களில் சுமார் 80%-ஐ தடுக்க முடியும் என்று உலக இதயக் கூட்டமைப்பு கூறுகிறது.

முக்கியமாக இந்த இதய நோயைத் தடுக்க வாழ்க்கை முறையில் சில மாற்றங்களைக் கொண்டு வந்தாலே போதும். அதுவும் பெரிய அளவில் மாற்றங்களை செய்யாமல் சிறு சிறு பழக்கங்களை ஒருவர் கொண்டிருந்தாலே இதயத்தை நோயின்றி ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவர் டாக்டர் வாஸ் (Dr. Vass) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதய நோயின் அபாயத்தைத் தடுக்க உதவும் 5 பழக்கங்கள் குறித்து பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, "பெரும்பாலான மக்கள் சிறிய பழக்கங்கள் எல்லாம் மாரடைப்பைத் தடுக்காது என்று நினைத்து புறக்கணித்துவிடுகிறார்கள். ஏனெனில் அந்த பழக்கங்களானது மிகவும் எளிமையானவையாக உள்ளன. உதாரணமாக உணவுக்கு பின் நடப்பது, அதிகாலை சூரிய ஒளியைப் பெறுவது, மன அழுத்தத்தைக் குறைப்பது, ஆரோக்கியமான உணவை உண்பது போன்றவை. இந்த பழக்கங்கள் இதய நோயைத் தடுக்கும் என்று சொன்னால் நம்பமுடியாது தான். ஆனால் உண்மையில் அவை நல்ல பலனளிக்கக்கூடியவை" என்று குறிப்பிட்டிருந்தார். இப்போது டாக்டர் கூறிய மாரடைப்பைத் தடுக்கும் 5 பழக்கங்கள் என்னவென்பதைக் காண்போம்.
1. உணவுக்கு பின் வாக்கிங்
"ஒவ்வொரு வேளை உணவு உண்ட பின்னரும் குறைந்தது 10 நிமிடம் நடக்கும் போது, உணவுக்கு பின் அதிகரிக்கும் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும். இது தமனிகளில் அடைப்பு ஏற்படுவதற்கான ஒரு முக்கிய ஆபத்துக் காரணியான அழற்சியை கணிசமாகக் குறைக்கும்" என்று கூறினார். புரியுமாறு கூறவேண்டுமானால், உணவு உண்ட பின் நடப்பதனால் செரிமானம் மேம்பட்டு, பல்வேறு நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக இது மாரடைப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணமான இரண்டு விஷயங்களைக் கட்டுப்படுத்துகிறது. அதில் ஒன்று இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பது மற்றும் அழற்சியைக் குறைப்பது. இதன் மூலம் தமனிகளில் அடைப்பு ஏற்படும் அபாயம் குறைகிறது.
2. ஒமேகா-3 -ஐ அதிகம் எடுக்கவும்
"இரண்டாவது ஒமேகா-3 கொழுப்பு அமிலத்தை அதிகம் எடுக்க வேண்டும். சால்மன் போன்ற மீன்கள் அல்லது உயர்தர ஒமேகா-3 சப்ளிமெண்ட்கள், உடலில் டிரைகிளிசரைடு அளவைக் குறைக்கவும், இரத்த நாளங்களுக்குள் ஏற்படும் அழற்சியைக் குறைக்கவும், தமனி விறைப்பைக் குறைக்கவும் உதவும்." என்று டாக்டர் கூறினார்.
3. நல்ல தூக்கம் அவசியம்
தற்போது பலரும் போதுமான தூக்கத்தைப் பெறுவதில்லை. ஆனால் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ இது மிகவும் அவசியம். அதுவும் "ஒருவர் ஒரு இரவுக்கு ஆறு மணி நேரத்திற்கும் குறைவாகத் தூங்குவது, மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை 200 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும். எனவே தூக்கத்திற்கு முன்னுரிமை கொடுங்கள், தினமும் 8 மணிநேர தூக்கத்தை மேற்கொள்வதை இலக்காக கொள்ளுங்கள்" என்று டாக்டர் கூறினார்.
4. பிளாஸ்டிக்கை தவிர்க்கவும்
பிளாஸ்டிக்குகள் இதயத்திற்கு தீங்கு விளைவிப்பவை. அவை வெளியிடும் வேதிப்பொருட்கள், ஹார்மோன் சமநிலையைக் குலைத்து, அதன் விளைவாக அழற்சியைத் தூண்டக்கூடும். எனவே அதற்கு பதிலாக உணவுகளை கண்ணாடி பொருட்களில் சேமித்து வையுங்கள். குடிக்கும் நீரை வடிகட்டி குடியுங்கள் மற்றும் எந்த உணவுகளையும் பிளாஸ்டிக் பொருட்களில் சூடாக்காதீர்கள்" என்று கூறினார்.
5. சரியான சோதனைகள்
"எப்போதும் கெட்ட கொழுப்பை மட்டும் பரிசோதனை செய்யாதீர்கள். அதற்கு பதிலாக புரோட்டீன் பி, லிப்போபுரோட்டீன் ஏ, ஹோமோசிஸ்டீன் மற்றும் அதிக உணர்திறன் கொண்ட சி.ஆர்.பி. ஆகியவற்றை சீரான அளவில் பரிசோதனை செய்து பாருங்கள். இவை உங்களுக்கு ஏற்படும் மாரடைப்பின் அபாயத்தை சரியாக கூறும்" என்று டாக்டர் கூறினார்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
