Latest Updates
-
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
மீந்து போன சப்பாத்தி இருக்கா? அப்ப இப்படி சில்லி சப்பாத்தி செய்யுங்க.. அல்டிமேட்டா இருக்கும்.. -
செப்டம்பர் 30 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றிதானாம் -
October 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்கு தொழில் ரீதியாக அதிர்ஷ்டமா இருக்கும்! -
சூரியன் துலாம் ராசிக்குள் நுழையப்போவதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி என்ன? -
தாபா ஸ்டைல் ராஜ்மா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு அருமையா இருக்கும் -
1 கப் கடலைப்பருப்பு இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. டக்கரா இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா?
சர்க்கரை நோய்க்கான மருந்துகள் சிறுநீரகங்களை சேதப்படுத்தும் என்பது உண்மையா? கட்டுக்கதையா?
சர்க்கரை நோயாளிகள் தங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவும் மருந்துகளை சரியாக எடுத்து வர வேண்டும். ஆனால் சர்க்கரை நோய்க்கான மருந்துகள் சிறுநீரகங்களை சேதப்படுத்தும் என்ற அச்சத்தால் பலர் சர்க்கரை நோய்க்கான மருந்தை தவிர்க்கிறார்கள். இருப்பினும் இது உண்மையா அல்லது வெறும் கட்டுக்கதையா என்பது நிறைய பேருக்கு தெரியாது. ஆனால் உண்மை தெரிந்தால் அந்த தவறை செய்யமாட்டார்கள். சொல்லப்போனால் பெரும்பாலான சர்க்கரை நோய்க்கான மருந்துகள் சிறுநீரகங்களை சேதப்படுத்துவதில்லை. உண்மையில் அவை சர்க்கரை நோய் தொடர்பான சிக்கல்களிலிருந்து சிறுநீரகங்களைப் பாதுகாக்கவும், இரத்த சர்க்கரையை நல்ல முறையில் கட்டுப்படுத்தவும் தான் பெரிதும் உதவி புரிகிறது.

'Gyaan by Ganesh - Making India Win Over Diabetes' என்பது சன் பார்மா நிறுவனம், அமெரிக்க நீரிழிவு சங்கத்துடன் இணைந்து நடத்தும் ஒரு விழிப்புணர்வு முன்னெடுப்பாகும். இது நிபுணர்களின் ஆதரவு பெற்ற தகவல்கள் மூலம், இந்தியர்கள் நீரிழிவு நோயை நன்கு புரிந்துகொள்ளவும், தடுக்கவும், நிர்வகிக்கவும் உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சர்க்கரை நோய் தான் நாள்பட்ட சிறுநீரக நோய்க்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். தொடர்ந்து இரத்த சர்க்கரை அதிகமாக இருக்கும் போது, அது சிறுநீரகங்களில் உள்ள சிறு இரத்தக்குழாய்களை சேதமடையச் செய்து, உடலில் இருந்து கழிவுகளை வடிகட்டி வெளியேற்றும் திறன் குறைகிறது. இந்நிலையில் இதற்கு சிகிச்சை அளிக்காவிட்டால், இறுதியில் அது சிறுநீரக செயலிழப்புக்கு வழிவகுத்துவிடும்.
ஏற்கனவே சிறுநீரக செயல்பாடு குறைந்தவர்களுக்கு சில சர்க்கரை நோய்க்கான மருந்துகளின் அளவை சரிசெய்ய வேண்டியிருக்கலாம். ஏனெனில் சிறுநீரகங்கள் இந்த மருந்துகளை உடலில் இருந்து வெளியேற்ற உதவுகின்றன. இதனால் அந்த மருந்துகள் சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில்லை. மாறாக, மருந்து பாதுகாப்பாகவும் பயனுள்ளதாகவும் இருப்பதற்காக மருத்துவர்கள் மருந்துகளின் அளவை மாற்றி கொடுக்கிறார்கள்.
சமீபத்திய ஆண்டுகளில் SGLT2 தடுப்பான்கள் போன்ற புதிய வகை சர்க்கரை நோய்க்கான மருந்துகள், இரத்த சர்க்கரைக் கட்டுப்பாட்டையும் தாண்டிய நன்மைகளைக் காட்டியுள்ளன. ஆய்வுகளிலும் டைப் 2 சர்க்கரை நோய் மற்றும் நாள்பட்ட சிறுநீரக நோய் உள்ளவர்களுக்கு, சரியான முறையில் இந்த மருந்துகள் பரிந்துரைக்கப்படும் போது, சிறுநீரக நோயின் முன்னேற்றத்தை மெதுவாக்க உதவுவது தெரிய வந்துள்ளது. மருத்துவர்களும் சிறுநீரக ஆரோக்கியத்தை தவறாமல் கண்காணிக்க சீரம் கிரியேட்டினின், மதிப்பிடப்பட்ட குளோமெருலார் வடிகட்டுதல் விகிதம் (eGFR) மற்றும் சிறுநீர் அல்புமின் போன்ற பரிசோதனைகளை பரிந்துரைக்கின்றனர். இந்த பரிசோதனைகளானது ஆரம்பகால சிறுநீரக பாதிப்பை கண்டறியவும், எந்த வகை சிகிச்சைகளை மேற்கொள்வது என்பதை அறியவும் உதவுகின்றன.
மருத்துவரின் அலோசனையின்றி சர்க்கரை நோய்க்கான மருந்துகளை எடுப்பதை தவிர்த்து வந்தால், இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாடில்லாமல் இருப்பதோடு, சிறுநீரகங்களையும் அமைதியாக சேதப்படுத்தக்கூடும்.
"சர்க்கரை நோய் மருந்துகள் சிறுநீரகங்களை சேதப்படுத்துகின்றன என்பது மிகவும் பொதுவான தவறான கருத்துக்களில் ஒன்றாகும். உண்மையில், பெரும்பாலான சர்க்கரை நோய் மருந்துகளை விட கட்டுப்பாடற்ற இரத்த சர்க்கரையே சிறுநீரக ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். சிறுநீரகச் செயல்பாடு குறைந்தவர்களுக்கு சில மருந்துகளின் அளவை சரிசெய்ய வேண்டியிருக்கலாம் என்றாலும், பல நவீன சர்க்கரை நோய் சிகிச்சைகள் உண்மையில் சிறுநீரகங்களைப் பாதுகாக்கவும், சிறுநீரக நோயின் முன்னேற்றத்தை மெதுவாக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. சர்க்கரை நோயாளிகள் ஒருபோதும் தங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்காமல் மருந்துகளை நிறுத்தக்கூடாது."
DR. A. JEYASURIYA, M.B.B.S, M.D (INTERNAL MEDICINE)., FCD (DIABETOLOGIST), MADURAI
மருத்துவரால் பரிந்துரைக்கப்படும் சர்க்கரை நோய்க்கான மருந்துகள் பொதுவாக பாதுகாப்பானவை. எனவே சர்க்கரை நோய் மருந்துகளை கண்டு அஞ்சாமல், சர்க்கரை நோயாளிகள் தங்களை வழக்கமான பரிசோதனைகள், சிறுநீரகச் செயல்பாட்டு சோதனைகள் மற்றும் நல்ல இரத்த சர்க்கரைக் கட்டுப்பாட்டைப் பராமரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். எனவே உங்கள் சிறுநீரகங்களை பாதுகாப்புடன் வைத்துக் கொள்ள நினைத்தால், சர்க்கரை நோயை திறம்பட நிர்வகித்து வாருங்கள்.
பொறுப்புத் துறப்பு: இந்தப் பொருள் நோயாளிகளுக்கான கல்வி மற்றும் விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகிறது. இது மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரின் ஆலோசனைக்கு மாற்றாகாது. Sun Pharmaceuticals Laboratories Limited (SPLL) துல்லியமான மற்றும் காலத்திற்கேற்ற தகவல்களை வழங்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறது. இருப்பினும், இது குறித்து எந்தவித உத்தரவாதமும் அளிக்கவில்லை. நீங்கள் உங்கள் மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரை அணுகி, அவர்களின் ஆலோசனையை மட்டுமே பின்பற்ற வேண்டும். Sun Pharmaceuticals Laboratories Limited (SPLL)-க்கு தெரியப்படுத்தாமல், இதன் எந்தப் பகுதியையும் இயந்திரம் அல்லது மின்னணுவியல் ரீதியாகவோ அல்லது வேறு எந்த வகையிலோ மறுஉருவாக்கம் செய்யவோ, பரப்பவோ அல்லது சேமித்து வைக்கவோ கூடாது.



Click it and Unblock the Notifications

