Latest Updates
-
அமெரிக்க டாலரில் $ சின்னம் ஏன் உள்ளது தெரியுமா? அதன் அர்த்தமும், வரலாறும் என்ன தெரியுமா? -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
Varalakshmi Vratam 2026: வரலட்சுமி விரதத்தின் போது டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் -
முட்டை குழம்பை இந்த பக்குவத்துல செய்யுங்க.. மட்டன் குழம்பு ருசியில செமயா இருக்கும்.. -
உங்க கல்லீரலில் பிரச்சனை வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 3 காற்கறிகளை வாரந்தோறும் சாப்பிடுங்க.. -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
பாபா வங்காவின் கணிப்புப்படி பெட்ரோல் விலையில் என்னென்ன மாற்றம் வரப்போகிறது தெரியுமா? -
சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: ஆகஸ்ட் 22 முதல் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 6 ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
கறிவேப்பிலை சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தமான நாளாக இருக்குமாம்
உங்க பல் மஞ்சளா இருக்கா? வெள்ளையாக்க இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க..
Teeth Whitening Tips In Tamil: ஒருவரது சிரிப்பு அந்நபரின் அழகை மேம்படுத்தி காட்டுவதோடு, மன அழுத்தத்தைக் குறைத்து தன்னம்பிக்கையை அதிகரிக்கும். ஆனால் அப்படி சிரிக்கும் போது உங்கள் பற்கள் மஞ்சளா இருக்கா? இதனால் உங்களால் நிம்மதியாக வாய்விட்டு சிரிக்க முடியவில்லையா? மிகுந்த தர்மசங்கடமாக உள்ளதா?

உங்கள் மஞ்சள் நிற பற்களை வெண்மையாக்க கடைகளில் விற்கப்படும் விலை அதிகமான டூத் பேஸ்ட்டுகளை வாங்கி பயன்படுத்தியும் எந்த பலனும் கிடைக்கவில்லையா? அப்படியானால் இயற்கை வழிகளை முயற்சித்து பாருங்கள். இயற்கை வழிகளை முயற்சிக்கும் போது பற்களில் உள்ள எனாமல் சேதமடையாமலும் இருக்கும், பற்களில் உள்ள மஞ்சள் கறைகளும் நீங்குவதை காணலாம். இப்போது பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்க உதவும் சில இயற்கை வழிகளைக் காண்போம்.
1. பேக்கிங் சோடா
* ஒரு பௌலில் 1 டீஸ்பூன் பேக்கிங் சோடாவை எடுத்து, அத்துடன் சிறிது நீரை ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதைக் கொண்டு பற்களை 2 நிமிடம் மென்மையாக தேய்க்க வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு 1-2 முறை பயன்படுத்தலாமே தவிர, அளவுக்கு அதிகமாக பயன்படுத்தக்கூடாது. தினமும் பயன்படுத்தினால் பற்களின் எனாமல் தேய்ந்துவிடும். எனவே அளவாக பயன்படுத்துங்கள்.
2. ஆயில் புல்லிங்
ஆயில் புல்லிங் என்பது பண்டைய ஆயுர்வேத நடைமுறையாகும். இந்த ஆயில் புல்லிங்கை செய்ய வாயில் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயை ஊற்றி 10-15 நிமிடம் கொப்பளிக்க வேண்டும். இப்படி தினமும் ஆயில் புல்லிங் செய்யும் போது வாயில் உள்ள பாக்டீரியாக்கள் குறைந்து, வாயின் ஆரோக்கியம் மேம்படுவது மட்டுமின்றி, பற்களில் உள்ள மஞ்சள் கறையும் நாளடைவில் நீங்கும்.
3. ஆப்பிள் சீடர் வினிகர்
* ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள அமிலத்தன்மை பற்களில் உள்ள கறைகளை வெளியேற்ற பெரிதும் உதவி புரியும். ஆனால் அதற்கு அதை அளவாக பயன்படுத்த வேண்டும். அதிகமாக பயன்படுத்தினால் அது பற்களின் எனாமலை நிலைகுலைய செய்துவிடும்.
* அதற்கு ஒரு பௌலில் 1 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை எடுத்து, 1/2 கப் நீரை கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை வாயில் ஊற்றி, 30 நொடிகள் கொப்பளித்து, பின் நீரில் வாயை கொப்பளிக்க வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்தலாம்.
4. சாம்பல்
பழங்காலத்தில் நம் முன்னோர்கள் சாம்பலைக் கொண்டு பற்களை துலக்கினார்கள். ஏனெனில் சாம்பல் பற்களில் உள்ள கறைகளை வெளியேற்றுவதில் சிறந்தது. இப்படிப்பட்ட சாம்பலை டூத் பேஸ்ட்டிற்கு பதிலாக பயன்படுத்தி, பற்களை 2 நிமிடம் மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும்.
நினைவில் கொள்ள வேண்டியவைகள்
மஞ்சள் நிற பற்களை வெண்மையாக்க முயற்சிப்பது எல்லாம் சரி தான். ஆனால் பற்கள் மஞ்சள் நிறமாவதற்கு காரணம் நாம் உண்ணும் உணவுகளும், ஒருசில பழக்கவழக்கங்களும் தான் காரணம் என்பதை மறவாதீர்கள். குறிப்பாக காபி, டீயை அதிகமாக குடிப்பது, புகைப்பிடிப்பது, மது அருந்துவது போன்றவை எல்லாம் பற்களை மஞ்சளாக மாற்றக்கூடியவைகளாகும்.
எனவே இனிமேல் காபி டீ குடிக்க நினைத்தால், பற்களில் அது படாதவாறு ஸ்ட்ரா பயன்படுத்தி குடிக்கலாம். அதோடு வாயை நீரால் கொப்பளிக்க வேண்டும். முக்கியமாக தினமும் இரண்டு முறை பற்களை துலக்க வேண்டும், ஒருமுறை ப்ளாஸ் செய்ய வேண்டும் மற்றும் வாயில் உள்ள பாக்டீரியாக்களை அழிக்க மௌத் வாஷ்ஷை பயன்படுத்தலாம். இவற்றை பின்பற்றும் போது பற்கள் மஞ்சளாவதைத் தடுக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications