Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க உலகை சுற்றும் சுதந்திரப் பறவைகளாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்க தலைமுடி எலிவால் மாதிரி மாறுதா? அப்ப அடிக்கடி இந்த கற்றாழை ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
Gandhi Jayanti 2026: மகாத்மா காந்தியை பற்றி நமக்கு தெரியுமா? ஆனால் அவர் படிப்பில் எப்படிப்பட்டவர் தெரியுமா? -
மீல் மேக்கர் பிரியாணியை இப்படி செய்யுங்க.. மட்டன் பிரியாணியே தோத்துடும்.. -
4 கத்திரிக்காய் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி மிளகு குழம்பு செய்யுங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
International Day of Older Persons: பெற்றோர், முதியோருக்கான சுகாதார பராமரிப்பில் புதிய அணுகுமுறை - ஏன் அவசியம் -
குரு-செவ்வாய் கூட்டணி.. அக்டோபர் 31 வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
Personality Test: அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் நல்ல மற்றும் தீய குணங்கள் என்னென்ன தெரியுமா? -
நீரிழிவு நரம்பியல் பாதிப்பு என்றால் என்ன? அதன் ஆரம்ப கால அறிகுறிகள் என்ன? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், வேர்க்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்..
ஜூலை 16-ல் சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், வெற்றியையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
ஜோதிட சாஸ்திரத்தில் சூரியன் கிரகங்களின் ராஜாவாக என்று அழைக்கப்படுகிறார். சூரியனின் ராசி மாற்றம் ஜோதிடத்தில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஜூலை மாதத்தில் நிகழப்போகும் பல சக்திவாய்ந்த கிரக மாற்றங்களில் சூரியனின் ராசி மாற்றமும் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஜூலை 16 ஆம் தேதி சூரியன் கடக ராசிக்குள் நுழையப்போகிறார்.

சந்திரனால் ஆளப்படும் கடக ராசிக்குள் சூரியனின் பிரவேசம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது. இருப்பினும், சில ராசிக்காரர்கள் இந்த கிரக மாற்றத்தால் மகத்தான நன்மைகளை அனுபவிக்கப் போகிறார்கள். அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழில் வாழ்க்கையிலும் சிறப்பான நன்மைகளைப் பெறப்போகிறார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்களின் லக்கினத்தில் சூரியன் நுழையப்போவதால் அவர்கள் அதிகபட்ச நன்மைகளை அடையப்போகிறார்கள். இந்த கிரக மாற்றத்தால் வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது, மேலும் வேலையில் இருப்பவர்கள் அலுவலகத்தில் அங்கீகாரம், மரியாதை மற்றும் நற்பெயரை அடைவார்கள். வாழ்க்கையின் வெவ்வேறு அம்சங்களில் இந்த காலம் வெற்றிகரமானதாக இருக்கும். சமூகத்தில் அவர்களின் மரியாதை கணிசமாக அதிகரிக்கும். அவர்கள் தங்கள் பெற்றோர் மற்றும் மேலதிகாரிகளுடன் சுமூகமான உறவை வளர்த்துக் கொள்ளலாம்.
நல்ல பேச்சு மற்றும் நடத்தை அவர்களின் உறவுகளை பலப்படுத்துகிறது. வெளிநாடுகளுடன் தொடர்புடைய தொழில்களில் ஈடுபடுபவர்கள் சிறப்பான பலன்களை எதிர்பார்க்கலாம். மேலும் வருமானத்திற்காக பல்வேறு வருமான ஆதாரங்களைப் பெறலாம். மாணவர்களுக்கு, போட்டித் தேர்வுகளுக்குத் தயாராக இது சரியான நேரமாகும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த கிரக மாற்றம் நேர்மறையான நன்மைகளை அளிக்கப்போகிறது. இந்தக் காலகட்டத்தில் செய்யப்படும் முதலீடுகள் அவர்களுக்கு பெரிய லாபத்தைத் தரக்கூடும், மேலும் வருமானம் சீரக அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. புதிய சொத்து, வாகனங்கள் அல்லது நிலம் தொடர்பான திட்டங்கள் வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லப்படலாம். இந்த காலகட்டத்தில் அவர்கள் தங்கள் துறையில் பெரிய உயரத்தை அடையலாம், அவர்களின் வேலையில் பல சாதகமான மாற்றங்கள் ஏற்படலாம். மேலும் அவர்கள் மூதாதையர் சொத்துக்களால் மகிழ்ச்சியை அடையலாம்.
வியாபாரிகள் பல்வேறு ஒப்பந்தங்களிலிருந்து அதிக லாபத்தை ஈட்டலாம். இந்த காலகட்டத்தில் திருமணமானவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இந்த காலகட்டத்தில் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன, மேலும் ஆரோக்கியம் சார்ந்த நடவடிக்கைளில் சுறுசுறுப்பாக பங்கேற்கலாம்.
மீனம்
சூரியன் மீன ராசிக்காரர்களின் ஐந்தாம் வீட்டில் நுழைவதால் அவர்கள் தொழில் வாழ்க்கையில் பெரிய வெற்றிகளை குவிக்கப் போகிறார்கள். இந்த கிரக மாற்றத்தால் அவர்களின் நிதி நிலை அதிகரிக்க வாய்ப்புள்ளது, நீண்ட காலமாகத் தேங்கிக் கிடந்த வேலை மீண்டும் தொடங்கலாம். அவர்கள் கடின உழைப்புக்கான சிறந்த பலன்களை அடைவார்கள். இந்த காலகட்டத்தில் அவர்கள் தங்கள் வியாபாரத்தில் பெரும் லாபத்தைப் பெறலாம், மேலும் பல புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள்.
மாணவர்கள் கல்வியில், பல நன்மைகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன, மேலும் செல்வத்தைச் சேமிப்பதில் வெற்றி பெறுவார்கள். அவர்கள் வேலையில் சிறப்பான மாற்றங்களை அனுபவிப்பார்கள், மேலும் வேலை தேடுபவர்கள் புதிய வேலையில் சேரலாம். இந்தக் காலகட்டத்தில் அவர்களின் ஆரோக்கியம் பாதுகாப்பாக இருக்கும், மேலும் பல்வேறு செயல்பாடுகளில் உற்சாகமாக பங்கேற்கலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

