Latest Updates
-
ஆகஸ்ட் 25-ல் சுக்கிரன் சித்திரை நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கேது-சூரிய சேர்க்கையால் அடுத்த 24 நாட்கள் இந்த 3 ராசிக்கு வாழ்க்கை நரகமா இருக்கும்.. -
மணத்தக்காளி கீரை கடையல் ரெசிபி - கீரையை இப்படி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இதுல உங்களுக்கு பிடிச்ச பழம் என்னன்னு சொல்லுங்க.. உங்களோட பலம் என்னன்னு சொல்றோம்.. -
ஒரு மணி நேரம் ஏன் 60 நிமிடங்களாக பிரிக்கப்பட்டுள்ளது? 100 நிமிடமாக என் பிரிக்கப்படவில்லை தெரியுமா? -
யாரும் பேசாத குடும்ப நல்வாழ்வு போக்கு: நிதித் தயார்நிலை -
September Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. செப்டம்பர் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
செப்டம்பர் மாதத்தில் பல கஷ்டங்களை அனுபவிக்கப்போகும் 3 துரதிர்ஷ்டமான ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கோவை ஸ்பெஷல் உப்பு பருப்பு - சிம்பிளா 10 நிமிஷத்துல எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
1 கப் பச்சரிசியும், வெல்லமும் இருந்தா இந்த செட்டிநாடு கந்தர் அப்பத்தை செஞ்சு பாருங்க - சூப்பரா இருக்கும்
செவ்வாய் மீது விழும் சனியின் மூன்றாம் பார்வை: ஆகஸ்ட் வரை இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்..
Saturn's Third Aspect On Mars: ஜோதிடத்தின் படி, ஜூலை மாதமானது மிகவும் சிறப்பானது. ஏனென்றால் ஜூலை மாதத்தில் பல கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன. குறிப்பாக சனி பகவான் ஜூலை மாதத்தில் வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார். அதே வேளையில் இம்மாதத்தில் தான் செவ்வாய் ரிஷப ராசிக்குள் நுழைந்தார். இதனால் சனிக்கும், செவ்வாய்க்கும் இடையிலான உறவால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

தற்போது சனி பகவான் மீன ராசியில் உள்ளார். அதே வேளையில் செவ்வாய் ரிஷப ராசியில் உள்ளார். பொதுவாக ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஏழாம் பார்வை உண்டு. ஆனால் சனி, செவ்வாய், குரு ஆகிய மூன்று கிரகங்களுக்கும் சிறப்பு பார்வைகள் உள்ளன. அதுவும் சனியின் 3, 7, 10 ஆம் பார்வைகள் மிகவும் சிறப்பானவையாக கருதப்படுகின்றன.
அதுவும் ஜூலை மாதத்தில் செவ்வாய் ரிஷப ராசியிலும், சனி மீன ராசியிலும் இருப்பதால், சனியின் 3 ஆம் பார்வை செவ்வாயின் மீது விழுகிறது. இந்த சிறப்பு பார்வை ஆகஸ்ட் 2 வரை நீடித்திருக்கும். இப்போது செவ்வாய் மீது சனியின் மூன்றாம் பார்வை விழுவதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
சனியின் பார்வை செவ்வாய் மீது விழுவதால், ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும். இக்காலத்தில் வேலை மற்றும் வியாபாரத்தில் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். இக்காலத்தில் போடப்படும் ஒவ்வொரு திட்டங்களிலும் நல்ல வெற்றி கிடைக்கும்.
கன்னி
சனியின் மூன்றாம் பார்வை செவ்வாய் மீது விழுவதால் கன்னி ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் வரை ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படும் மற்றும் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்புக்கள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
மகரம்
செவ்வாய் மீது விழும் சனியின் மூன்றாம் பார்வையால் மகர ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் வரை மிகவும் மங்களகரமானதாக இருக்கும். நிதி நிலைமை மிகவும் சிறப்பாக இருக்கும். நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் நல்ல வெற்றி கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத நல்ல செய்திகளைப் பெறக்கூடும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். பண பரிவர்த்தனைகளால் நல்ல பலனைப் பெறக்கூடும்.
கும்பம்
செவ்வாய் மீது விழும் சனியின் மூன்றாம் பார்வையால் கும்ப ராசிக்காரர்கள் ஆகஸ்ட் வரை தொழிலில் நல்ல மாற்றங்களைக் காண்பார்கள். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். வருமானத்தில் எதிர்பாராத அளவில் உயர்வு ஏற்படும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழில் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வியாபாரிகளுக்கு இக்காலம் லாபத்தை அள்ளித் தருவதாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

