Latest Updates
-
வெறும் வயிற்றில் இந்த 3 உணவுகளை சாப்பிடாதீங்க.. எச்சரிக்கும் டாக்டர்! -
அக்டோபர் 17-ல் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
பூரிக்கு இப்படி உருளைக்கிழங்கு மசாலா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் கணக்கில்லாம சாப்பிடுவாங்க... -
அக்டோபர் 04 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் ஆரோக்கியம் மோசமாகப் போகுதாம் -
சனி-சூரியன் எதிரெதிர் நிலையில் அமர்வதால் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா இந்த கேரளா ஸ்டைல் சிக்கன் மப்பாஸ் செஞ்சு பாருங்க - சுருக்குனு செமையா இருக்கும் -
வார ராசிபலன்கள் - உங்க ராசி என்னனு சொல்லுங்க? வரப்போற வாரம் எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம் -
4 முட்டை இருந்தா ஹைதராபாத் ஸ்டைலில் இந்த மாதிரி குருமா செஞ்சு பாருங்க - தாறுமாறா இருக்கும் -
மகாத்மா காந்தியின் பெயர் 5 முறை பரிந்துரைக்கப்பட்டும் அவருக்கு ஏன் நோபல் பரிசு கிடைக்கவில்லை தெரியுமா? -
கொங்கு ஸ்பெஷல் பருப்பு செலவு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது...
Mars Nakshatra Transit On 05 July 2026: ஜோதிடத்தில் கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாவார். இப்படிப்பட்ட செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாவார் மற்றும் இவர் ஒரு ராசியில் 45 நாட்கள் வரை இருப்பார். அதோடு அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார்.

அந்த வகையில் செவ்வாய் ஜூலை 05 ஆம் தேதி நட்சத்திரத்தை மாற்றுகிறார். அப்போது அவர் ரோகிணி நட்சத்திரத்திற்குள் நுழைகிறார். இந்த ரோகிணி நட்சத்திரத்தின் அதிபதி சந்திரன். இந்த நட்சத்திரத்தில் செவ்வாய் ஜூலை 24 ஆம் தேதி வரை இருப்பார்.
இந்த செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அதில் 5 ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். இப்போது செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
சிம்மம்
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணியிடத்தில் உங்களின் கடின உழைப்பு பெரிதும் பாராட்டப்படும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். மாணவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். திருமண வாழ்க்கையில் உள்ள மனக்கசப்புகள் நீங்கும். கடன் தொல்லை குறையும். நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ள நேரிடும்.
தனுசு
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்கள் வாழ்வில் பல நல்ல மாற்றங்களைக் காண்பார்கள். நிதி நிலைமை வலுவடையும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை, அந்தஸ்து போன்றவை அதிகரிக்கும். தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். மாணவர்கள் போட்டி தேர்வுகளில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.
மேஷம்
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். நீண்ட கால ஆசைகள் நிறைவேறும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியைப் பெறுவதோடு நேர்மறையான மாற்றங்களையும் காண்பார்கள்.
கடகம்
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களுக்கு ஒவ்வொரு வேலையிலும் வெற்றிகள் குவியும். பண பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தினருடன் பயணங்களை மேற்கொள்வீர்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.
மீனம்
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் மீன ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். ஒவ்வொரு சூழ்நிலையும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். மன அழுத்தம் குறைந்த மன அமைதி பெருகும். திருமண வாழ்க்கையில் சந்தோஷம் அதிகரிக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
