Latest Updates
-
பன்னீர் வாங்குனா இந்த மாதிரி தாபா ஸ்டைல் பன்னீர் புர்ஜி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
எப்பவும் ஒரே மாதிரி ஆம்லெட் செய்யாம, ஒருவாட்டி இந்த துவையல் ஆம்லெட் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்! -
Breast Cancer Awareness Month: இளம் பெண்களிடையே மார்பகப் புற்றுநோய் அதிகரிப்பது ஏன்? - விளக்கும் டாக்டர்! -
இந்தியாவில் 'தங்கத்தின் தலைநகரம்' என்று அழைக்கப்படும் ஊர் எது தெரியுமா? நமக்கு பக்கத்துலதான் இருக்காம் -
குரு அதிசார பெயர்ச்சி 2026: குரு பார்வையால் கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிக்காரர்கள் இவங்கதான்! ஜோதிடர் கணிப்பு! -
பச்சை பயறு வேர்க்கடலை தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
அக்டோபர் 14 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கபோகுதாம் -
அக்டோபர் 17-ல் உருவாகும் புதாதித்ய யோகத்தால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
செட்டிநாடு உருளைக்கிழங்கு ரோஸ்ட் ரெசிபி - உருளைக்கிழங்கை இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தாறுமாறா இருக்கும் -
100 ஆண்டுகள் கழித்து நவராத்திரியில் உருவாகும் பல ராஜயோகங்களால் அதிர்ஷ்டம் பெறும் 4 ராசிக்காரர்கள்!
Sarcoma Awareness Month: சார்கோமா என்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்!
Sarcoma Awareness Month: புற்றுநோய்களில் பல வகைகள் உள்ளன. அதில் ஒரு வகையான புற்றுநோய் தான் சார்கோமா. சர்கோமாக்கள் என்பவை எலும்புகள் அல்லது மென்மையான திசுக்களில் வீரியம் மிக்க செல்கள் உருவாகும் அரிய வகை புற்றுநோய்களாகும். இந்த வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தால், அதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டால், அறுவை சிகிச்சையின் மூலம் குணமாக்கிவிடலாம். இருப்பினும் மற்ற வகை புற்றுநோயைப் போலவே இந்த புற்றுநோயும் மீண்டும் வருவதற்கான அபாயம் உள்ளது.

இந்த சார்கோமா குறித்து நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே இந்த சார்கோமா குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் சார்கோமா விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த சார்கோமா விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு சார்கோமா என்றால் என்ன, அதன் அறிகுறிகள், காரணங்கள் மற்றும் சிகிச்சைகள் குறித்து கெங்கேரியில் உள்ள கிளெனீகிள்ஸ் பிஜிஎஸ் மருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சை நிபுணரான டாக்டர் ராஜீவ் விஜயகுமார் அவர்கள் தமிழ் போல்ட்ஸ்கையுடன் பகிர்ந்து கொண்டார்.
சார்கோமா என்றால் என்ன?
"சார்கோமா (Sarcoma) என்பது உடலின் எலும்பு, தசை, கொழுப்பு, மென்மையான எலும்புத் திசு (குருத்தெலும்பு), இரத்த நாளங்கள் மற்றும் தசைநார் போன்ற உடலை தாங்கும் திசுக்களில் உருவாகும் அரிதான வகை புற்றுநோயாகும். நுரையீரல் அல்லது மார்பகம் போன்ற உறுப்புகளில் தொடங்கும் பிற புற்றுநோய்களைப் போல அல்லாமல், சார்கோமா உடலின் பல்வேறு பகுதிகளில் உருவாகக்கூடும். இது அரிதாக இருந்தாலும், சில வகை சார்கோமாக்கள் வேகமாக வளர்ந்து உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவக்கூடும். எனவே, இதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது மிகவும் முக்கியம்" என்றார்.
சார்கோமா காரணங்கள்
"பெரும்பாலானவர்களுக்கு சார்கோமா ஏற்படுவதற்கான துல்லியமான காரணம் தெரியவில்லை. இருப்பினும், பரம்பரையாக வரும் சில மரபணு மாற்றங்கள், முன்பு வேறு ஒரு புற்றுநோய்க்காக ரேடியேஷன் சிகிச்சை (Radiation Therapy) பெற்றிருப்பது அல்லது கை அல்லது காலில் நீண்டகாலமாக வீக்கம் இருப்பது போன்ற காரணிகள் இதற்கான அபாயத்தை அதிகரிக்கக்கூடும். ஆனால், சார்கோமா ஏற்படும் பலருக்கு இத்தகைய அபாயக் காரணிகள் எதுவும் இருப்பதில்லை" என்று டாக்டர் கூறினார்.
சார்கோமா அறிகுறிகள்
"சார்கோமாவின் அறிகுறிகள், அது உடலில் எந்தப் பகுதியில் உருவாகிறது என்பதைப் பொறுத்து மாறுபடும். பொதுவாக, தொடர்ந்து அளவில் பெரிதாகிக் கொண்டே இருக்கும் ஒரு கட்டி அல்லது வீக்கம் முக்கிய அறிகுறியாகும். எலும்புகளில் ஏற்படும் சார்கோமா நீடித்த எலும்பு வலி, வீக்கம் அல்லது உடல் இயக்கத்தில் சிரமத்தை ஏற்படுத்தலாம். கட்டி அருகிலுள்ள நரம்புகள் அல்லது உறுப்புகளை அழுத்தினால், வலி, மரத்துப் போதல் அல்லது தசை பலவீனம் போன்ற அறிகுறிகளும் தோன்றலாம்.
உடலில் தோன்றிய கட்டி தொடர்ந்து பெரிதாகிக் கொண்டே இருந்தால், அதன் அளவு 5 செ.மீ.-ஐ விட அதிகமாக இருந்தால் அல்லது சில வாரங்களுக்குப் பிறகும் குறையாமல் இருந்தால், மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும். அதேபோல், எந்தக் காயமும் இல்லாமல் தொடர்ந்து எலும்பு வலி அல்லது வீக்கம் இருந்தாலும் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம். எல்லா கட்டிகளும் புற்றுநோயாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இருப்பினும், ஆரம்பத்திலேயே பரிசோதனை செய்து உறுதி செய்துகொள்வது மிகவும் பாதுகாப்பானது" என்று டாக்டர் ராஜீவ் கூறினார்.
சார்கோமாவிற்கான சிகிச்சைகள்
"சார்கோமாவிற்கான சிகிச்சை, அதன் வகை, அளவு மற்றும் எந்த நிலையில் உள்ளது என்பதைப் பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது. சிகிச்சையில் அறுவை சிகிச்சை, கீமோதெரபி (Chemotherapy), ரேடியேஷன் சிகிச்சை (Radiotherapy) அல்லது குறிப்பிட்ட புற்றுநோய் செல்களை குறிவைக்கும் சிகிச்சை (Targeted Therapy) ஆகியவை இடம்பெறலாம். ஆரம்பத்திலேயே கண்டறிந்து சரியான சிகிச்சை பெற்றால், பல நோயாளிகளுக்கு நல்ல குணமடைதல் மற்றும் நல்ல சிகிச்சை பலன் கிடைக்கும். எச்சரிக்கை அறிகுறிகளைப் பற்றிய விழிப்புணர்வும், தாமதமின்றி மருத்துவ உதவியை நாடுவதும் நல்ல சிகிச்சை பலனைப் பெற மிகவும் முக்கியமானவை" என்று டாக்டர் ராஜீவ் விஜயகுமார் கூறினார்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications


